பத்திரத்தை அடகு வைத்தது 2 லட்சம்.. கேட்டது 19 லட்சம்... சென்னை அடகு கடை முன்பு அதிர வைத்த இளம் பெண்
சென்னை: பத்திரத்தை அடகு வைத்து கடன் வாங்குவோர் மிக கவனமாக இருக்க வேண்டும்.. ஏனெனில் கடனை திரும்ப செலுத்த முடியுமா, அல்லது கடன் தொகைக்கு வட்டி எவ்வளவு, அசலுடன் செலுத்த என்ன வழி என்பதை யோசிக்க வேண்டும். அதேபோல் தனியார் அடகுகடைகளில் பத்திரங்களை அடகு வைக்கக் கூடாது. அப்படி அடகு வைத்தால் திருப்ப முடியும் என்ற சூழல் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நினைத்து பார்க்க முடியாத தவறுகள் நடந்துவிடும். சென்னையில் நடந்தது பற்றி பார்ப்போம்.
இன்றைய சூழலில் வீடு அடமானக்கடன் என்பதை பலர் வாங்குகிறார்கள். ஆனால் வீடு அடமானக்கடனை பொறுத்தவரை வங்கிகளில் வாங்குவதே நல்லது. அதிக பணம் தருகிறார்கள். எந்த பிராசசும் இல்லை என்று நினைத்து கடன் வாங்கக்கூடாது. ஏனெனில் வங்கிகளில் அடகு வைத்தால் சட்டப்பூர்வ நிவாரணம் பெற முடியும். ரிசர்வ் வங்கி வழிகாட்டுதலின் படி கடன் வழங்கப்படுவதால் வட்டி விகிதம் மிக குறைவாக இருக்கும்.

அதேநேரம் வங்கிகளில் இல்லாமல் தனியாரில் வைப்பதாக இருந்தால், ரிசர்வ் வங்கி அனுமதி பெற்ற நிறுவனத்திடம் தான் அடகு வைக்க வேண்டும். தனிநபர்களிடம் வைக்கக்கூடாது.. அப்படி வைத்தால் பின்னாளில் வட்டி கட்ட முடியாமல் போனால் சொத்துக்கள் எளிதாக பறிபோய்விடும். வட்டி, அசலை சேர்த்து பார்த்தால் எந்த காலத்திலும் கட்ட முடியாத அளவிற்கு இருக்கும். எனவே கடன் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சென்னை கொடுங்கையூரில் நடந்த சம்பவத்தை பார்ப்போம்.
கொடுங்கையூர் காந்தி நகர் 4-வது தெருவைச் சேர்ந்த 28 வயதுடையவர் ரேஷ்மா. இவரது கணவர் அருள்மொழி. கடந்த 2019-ம் வருடம் அருள்மொழி தான் நடத்தி வந்த சலூன் கடை பத்திரத்தை பெரம்பூர் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் உள்ள மனோகர் லால் ஜெயின் என்பவரிடம் அடகு வைத்துள்ளார். பத்திரத்தை அடகு வைத்து ரூ.2 லட்சம் வாங்கி உள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு அருள்மொழி உடல் நலக்குறைவால் இறந்து விட்டார். அவரது மனைவி ரேஷ்மா அடகு வைத்த கடை பத்திரத்தை மனோகர் லால் ஜெயினிடம் திரும்ப கேட்டு உள்ளார்.
அப்போது அவர் உனது கணவர் அருள்மொழி மேலும் 7 லட்சம் பணத்தை வாங்கியதாகவும், அதற்கு உண்டான அசல் வட்டியுடன் சேர்ந்து மொத்தம் ரூ.19 லட்சத்தை திருப்பித் தந்தால் கடை பத்திரத்தை தருவதாக கூறி அலைக்கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரேஷ்மா நேற்று முன்தினம் இரவு மனோகரன் லால் அடகு கடை முன்பு வீட்டிலிருந்து எடுத்து வந்த மண் எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளித்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பற்றி பெரவள்ளூரில் உள்ள பெரியார் நகர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் செம்பியம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications