பொன்முடி வீட்டிற்கு வந்ததும்.. சீனியர்களுக்கு ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. அடுத்தடுத்து பறந்த போன்.. ஷாக்
சென்னை: அமைச்சர் பொன்முடி இன்று அதிகாலை அமலாக்கத்துறை விசாரணை முடிந்து வீட்டிற்கு வந்ததும் அவரிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். இதையடுத்து அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பெங்களூரில் இருந்து முக்கிய உத்தரவிட்டுள்ளார்.
நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வீடுகளில் அமலாக்கத்துறை மூலம் ரெய்டு நடத்தப்பட்டது.

காலை 7 மணிக்கு தொடங்கிய ரெய்டு இரவு 12 மணி வரை தொடர்ந்தது. இன்னொரு பக்கம் 9 மணி அளவில் ரெய்டுக்கு இடையே பொன்முடி விசாரணை நடத்தப்படுவதற்காக அழைத்து செல்லப்பட்டார். கைது செய்யப்பட்டார் என்று கருதப்பட்ட நிலையில் அவரை விசாரணை செய்வதற்காக என்று மட்டும் அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றனர்.
இதில் பொன்முடி எல்லா கேள்விகளுக்கும் பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பல்வேறு முக்கிய பண பரிமாற்றங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணையில் கேள்வி எழுப்பப்பட்டது. அவரின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.
இது தொடர்பான விவரங்கள் நொடிக்கு நொடி நேற்று முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டு உள்ளது. போன் மூலம் இது தொடர்பான தகவல்களை முதல்வர் ஸ்டாலின் பெற்று இருக்கிறார். முதல்வர் ஸ்டாலின் நேற்று பெங்களூர் பயணம் மேற்கொண்டார். பெங்களூர் சென்ற அவர் அங்கே நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றார். இன்றும் இரண்டாம் நாள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உள்ளார்.
இதற்கு இடையே நொடிக்கு நொடி அவர் தகவல்களை பெற்றுள்ளார். அதன்பின் பொன்முடி தூங்கி எழுந்ததும் அவரிடம் போன் மூலம் பேசி உள்ளார். அவரை நேரில் சந்திக்க முடியாத சூழ்நிலையால், பொன்முடி அப்செட்டாகி விடக்கூடாது என்பதுதான் முதல்வரின் முதல் சிந்தனையாக இருந்தது.
அத்துடன், கட்சி உங்களுக்கு ஆதரவாக இருக்கும். வழக்கை சட்டரீதியாக சந்திக்கலாம் என அவருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் தைரியம் கொடுத்தார். அத்துடன் சீனியர் அமைச்சர்களை தொடர்புகொண்டு, பொன்முடியை சந்தித்துப் பேசுங்கள். அவருக்கு தைரியம் சொல்லுங்கள் என கேட்டுக்கொண்டார்.
அதைத்தொடர்ந்து அமைச்சர்கள், மூத்த நிர்வாகிகள் பலரும் பொன்முடியை பார்க்க படை எடுத்தனர். மேலும், அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஆர்.எஸ்.பாரதி, என்.ஆர்.இளங்கோ, வில்சன் உள்ளிட்டவர்களை தொடர்புகொண்டு, பொன்முடியிடம் விவாதிக்கவும், சட்ட ரீதியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்தும் ஆலோசித்து முடிவு எடுத்து வையுங்கள். இன்று சென்னை வந்ததும் பேசுவோம் என்றும் கூறியிருக்கிறார் ஸ்டாலின்.
அது தொடர்பான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கிறது. முதல்வரை பொறுத்த வரை, செந்தில் பாலாஜியை கைது செய்தது போல, பொன்முடியும் கைது செய்யப்பட்டு விடக்கூடாது என்கிற பதட்டத்தில் இருக்கிறார். அதனால், டி.ஆர்.பாலு மூலம் டெல்லியின் மூத்த வழக்கறிஞர்களிடம் விவாதிக்கப்படுகிறது. அதாவது, கைது நடவடிக்கை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற உதவியை டெல்லியின் சீனியர் வழக்கறிஞர்கள் மூலமாக மத்திய நிதியமைச்சகத்தை ரீச் பண்ண முடியுமா? என்ற மறைமுக முயற்சியை முதல்வர் எடுத்திருக்கிறார்.
திமுகவுக்காக நிர்மலா சீதாராமனை தொடர்பு கொள்ள உச்சநீதிமன்ற சீனியர் வழக்கறிஞர் ஒருவர் முயற்சித்திருக்கிறார். முதல்வர் சென்னை திரும்பியதும் மேலும் சில விபரங்கள் தெரியவரும் என்கிறார்கள் சோர்ஸ்கள். முதல்வர் சென்னை திரும்பியதும் அவர் பொன்முடியை சந்திப்பார் என்று கூறப்படுகிறது. இன்று மீண்டும் இரண்டாம் கட்ட விசாரணைக்கு பொன்முடி ஆஜராக உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications