ஸ்டாலின் மேஜைக்கு போன "திருமாவளவன் மூவ்.." அதற்கு அப்பறம் நடந்ததுதான் ட்விஸ்ட்!
சென்னை: திமுக அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் திருமாவளவனின் சமீபகால அரசியல் இருந்து வருவதை திமுக தலைமை விரும்பவில்லை என்பது தமிழக அரசியலில் தெரிந்த உண்மைதான். அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் இருந்த போதே, திருமாவளவன் குறித்த பல தகவல்கள் உளவுத் துறை மூலமும், உதயநிதி மூலமும் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவல் அறிந்து அப்போதே, திருமா மீது கோபப்பட்டிருக்கிறார் ஸ்டாலின். திருமாவுக்கு எதிராக சில கமெண்ட்ஸ்களையும் உதிர்த்தார். இந்த நிலையில், ஸ்டாலின் விரும்பவில்லை என்பதை அறிந்த திருமா, தனது அரசியலை மாற்றிக் கொள்ளாமல், ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு என்கிற பழைய வீடியோவை ரீலோட் பண்ணியதுடன், திருவாரூர் தொகுதியில் நடந்த ஒரு கூட்டத்தில், மதுவிலக்கு கோரிக்கையை வலியுறுத்தினால் சிக்கல் வரும் எனில் அதனை எதிர்கொள்ள தயார் என்று பேசினார்.

கடுப்பான திமுக: இது திமுக தரப்பில் செம காட்டத்தை உருவாக்கியது. அத்துடன் அந்த பேச்சை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு போகப்பட்டது. திருமாவின் அந்த பேச்சை ஸ்டாலினுக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தியது. இப்படிப்பட்ட சூழலில், மது ஒழிப்பு மாநாட்டுக்கான அழைப்பிதழை கொடுப்பதற்காக ஸ்டாலினை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். நேரமும் ஒதுக்கப்பட்டது. அமெரிக்காவில் இருந்து ஸ்டாலின் திரும்பியதும். உதயநிதி மற்றும் சீனியர் அமைச்சர்கள் சிலரிடமும் விவாதித்தார் ஸ்டாலின். அந்த விவாதத்தில், ''ஒரு முடிவை எடுத்து விட்டுத்தான் திருமாவளவன் இப்படி பேசுகிறார். எந்த பிரச்சனையை எடுத்தால் திமுக பதிலடி தராமல் தடுமாறுமோ அந்த பிரச்சனையை எடுத்தது தான் மது ஒழிப்பு மாநாடு.
அதனால் அவரிடம் பேசும்போது சில விசயங்களை ஸ்ட்ரிக்டாகச் சொல்லி விடுங்கள் '' என சீனியர்கள் ஸ்டாலினிடம் சொல்லி யிருக்கிறார்கள். உதயநிதியின் கருத்தும் அதுவாகத்தான் இருந்திருக்கிறது. அதை ஸ்டாலினும் ஆமோதித்திருக்கிறார். மேலும், "ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பதை தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பு பொது வெளியில் திருமா பேசிவிட்டு, எங்கள் கோரிக்கையை ஏற்பவர்களுடன் கூட்டணி என வெளிப்படையாக தெரிவித்திருக்க வேண்டும்.
அதை விடுத்து, தேர்தல் கூட்டணியில் ஜெயித்தப்பிறகு தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி பொது வெளியில் நெருக்கடி கொடுப்பது ஆரோக்கியமான விசயம் கிடையாது. அதனால், இப்போது அவர் இப்படி பேசுகிறார் எனில் சீக்ரெட் அஜெண்டா இல்லாமல் இல்லை. அதனால் அவரிடம் எச்சரிக்கையாகத் தான் இருக்க வேண்டும்" என்றும் சீனியர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஸ்டாலின் - திருமா சந்திப்புக்கு முன்பு ஸ்டாலின் நடத்திய ஆலோசனையில் நடந்த இந்த சம்பாஷனைகள் தான் திமுகவின் மேல் மட்டத்தில் உலவுகிறது.
சமாதானம்: இப்படிப்பட்ட நிலையில்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார் திருமாவளவன், சந்திப்பு இனிமையாக அமைந்ததாக கோட்டை தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், விசிக தலைவர் திருமாவளவனும் சுமார் 10 நிமிடங்கள் தனியாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 30 நிமிடங்கள் சந்திப்பு நடந்த நிலையில், அதில் 10 நிமிடங்கள் இருவரும் தனி அறையில் சந்தித்துப் பேசி உள்ளனர்.
கூட்டணியில் ஏற்பட்ட சில விரிசல்கள், கசப்புகளை பேசி தீர்த்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மோதல்கள் பற்றி இருவரும் இயல்பாக பேசி தீர்த்துள்ளனர்.












Click it and Unblock the Notifications