மேடையில் செம க்ளோஸ்.. ஸ்டாலின் தந்த மறக்க முடியாத "சர்ப்ரைஸ்".. நெகிழ்ந்து போன மோடி.. நடந்தது என்ன?
சென்னை: செஸ் ஒலிம்பியாட் தொடரை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று சிறப்பு பரிசு வழங்கினார்.
Recommended Video
செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா இன்று சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர். என் ரவி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் ஆகியவை இன்று விழாவில் அரங்கேற்றப்பட்டன. முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி இருவரும் இணைந்து செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தீபத்தை செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்திடம் வழங்கினர்.

மோடி நெருக்கம்
இன்று மேடையில் பிரதமர் மோடி - முதல்வர் ஸ்டாலின் இருவருமே நெருக்கமாக இருந்தனர். தொடக்கத்தில் இருந்தே மாறி மாறி சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். மோடி வெள்ளை வேட்டி சட்டையில் இருந்தார். இன்னொரு பக்கம் முதல்வர் ஸ்டாலின் பட்டு வேட்டி சட்டையில் மிளிர்ந்தார். பிரதமர் மோடி வரவேற்ற முதல்வர் ஸ்டாலின் அவரை பற்றி இன்று மேடையில் பாராட்டியும் பேசினார்.

பாராட்டி பேச்சு
பிரதமர் மோடி என்னுடைய உடல் நலன் பற்றி விசாரித்தார். நீங்கள் உடல்நிலை சரி இல்லை என்றால் ஓய்வு எடுங்கள். நான் வேண்டுமானால் நேரில் வருகிறேன் என்று என்னிடம் குறிப்பிட்டார். தமிழ்நாட்டில் இது போல நிகழ்வுகளை நடத்த ஒன்றிய அரசு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க வேண்டும். இப்போது அளிக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு நன்றி என்று முதல்வர் ஸ்டாலின் மேடையில் பேசினார்.

பரிசு
முன்னதாக பிரதமர் மோடிக்கு இன்று முதல்வர் ஸ்டாலின் சர்ப்ரைஸ் பரிசு ஒன்றை கொடுத்தார். மாமல்லபுரம் கோவிலின் சிற்பங்கள் அடங்கிய சிலையை முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடம் கொடுத்தார். இதை பார்த்ததும் பிரதமர் மோடி முகம் முழுக்க ஆச்சர்யத்துடன் அதை ஏற்றுக்கொண்டு, சிரித்தபடி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தார். அதன்பின் அருகருகே அமர்ந்து இருவரும் நட்பாக அவ்வப்போது பேசிக்கொண்டனர்.

நெகிழ்ச்சி
மாமல்லபுரம் பிரதமர் மோடிக்கு மிகவும் பிடித்தமான இடங்களில் ஒன்றாகும். இன்று மேடையில் பேசிய போது கூட செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறுவதன் மூலம் சென்னை, மாமல்லபுரத்தின் சுற்றுலா வளர்ச்சியடையும். சென்னை வந்துள்ள வெளிநாட்டு வீரர்கள் மகாபாலிபுரத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்று கூறினார். இந்த நிலையில் அதே மாமல்லபுரத்தின் சிற்பங்களை மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications