அதுமட்டும் நடந்திட கூடாது! போனை போட்டு எச்சரித்த ஸ்டாலின்.. சுதாரித்த செந்தில் பாலாஜி! கவனிச்சீங்களா
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கும் நிலையில் திமுக நிர்வாகிகள் இந்த முறை ரெய்டிற்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டம் எதையும் செய்யவில்லை.
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடக்கிறது.

அவரின் வீடு உள்பட 3 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடக்கிறது.
5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை ஒவ்வொரு இடங்களிலும் சோதனை செய்து கொண்டு இருக்கின்றனர்.
ரெய்டு ஏன்? : போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக புகார் உள்ளது. இதில் அவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவருக்கு எதிரான வழக்கை கைவிடுவதாக அரசு முடிவு எடுத்த நிலையில் இதில் தொடர்ந்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
இதையடுத்தே வருமான வரித்துறை அவருக்கு எதிராக ரெய்டு நடத்தியது. அதில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பல அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்டு உள்ளது. அமலாக்கத்துறையிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில்தான் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.
ஸ்டாலின் எச்சரிக்கை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கும் நிலையில் திமுக நிர்வாகிகள் இந்த முறை ரெய்டிற்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டம் எதையும் செய்யவில்லை.
கடந்த முறை வருமான வரித்துறை ரெய்டின் போது திமுகவினர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது ஜப்பானில் இருந்த முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜியிடம் போனில் பேசினார். அதில், "கரூரில் உங்க ஆட்களை அமைதியா இருக்கச் சொல்லுங்க. ரெய்டுக்கு எதிர்ப்பு காட்டுறோம்ங்கிற பேர்ல சட்டம் ஒழுங்குக்கு பிரச்சனையாகுது. நான் ஊரில் இல்லாத நிலையில் இதெல்லாம் ஜூரணிக்க முடியல. உங்க ஆட்கள கட்டுப்படுத்துங்க" என்று எச்சரித்திருக்கிறார்.
செந்தில் பாலாஜி, தனது சகோதரரிடம் பேச, ரகளையில் ஈடுபட்ட ஆதரவாளர்களிடம் அமைதி காக்க சொன்னார் செந்தில் பாலாஜி சகோதரரர் அசோக். இந்த நிலையில்தான் தற்போது முதல்வர் ஸ்டாலின் போனை போட்டு சொல்லும் முன்பே செந்தில் பாலாஜி ஆட்கள் யாரும் போராட்டம் எதிலும் ஈடுபடாமல் அமைதியாக ரெய்டை எதிர்கொண்டுள்ளனர்.
முன்பே எச்சரித்த ஸ்டாலின்: இந்த ரெய்டு குறித்து முன்பே முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்ததாக ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி கடந்த மே 2ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்திலேயே முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களை அழைத்து.. லோக்சபா தேர்தல் நெருங்குகிறது. கவனமாக இருங்கள்.
கண்டிப்பாக ரெய்டு விடுவார்கள். ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறி உள்ளார். முக்கியமாக அமைச்சர் செந்தில் பாலாஜி, பொன்முடி உள்ளிட்டவர்களை அழைத்து பேசிய ஸ்டாலின்.. உங்களைத்தான் அதிகம் குறி வைப்பார்கள். பார்த்து இருந்து கொள்ளுங்கள் என்றும் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் சொன்னபடியே செந்தில் பாலாஜி வீட்டில் ரெய்டு நடந்துள்ளது. முதல்வரின் எச்சரிக்கை காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி இந்த ரெய்டுக்கு தயாராக இருந்ததாகவே கூறப்படுகிறது.
-
கொஞ்ச நஞ்சம் பேச்சா? சொந்த ஊருக்கே போங்க! அண்ணாமலைக்கு 2 தரப்பும் அழுத்தம்? களத்தில் கோவை கொதிக்குதே -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
கோவை வடக்கில் அண்ணாமலை.. வானதி சீனிவாசனுக்கு பதில் களம் இறங்க போகிறாரா? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
கோவை தெற்கு, அரவக்குறிச்சி, நெல்லை எங்கே? தொகுதி மாறும் நயினார் நாகேந்திரன், வானதி, அண்ணாமலை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு












Click it and Unblock the Notifications