"ஜீரணிக்க முடியாதுங்க".. ஸ்டாலின் சொன்ன ஒரு வார்த்தை.. உடனே திருமா தந்த ரியாக்சன்.. அதிருதே
சென்னை: மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைப்பிதழை தருவதற்காகவும், முதல்வரை நேரில் அழைப்பதற்காகவும் ஸ்டாலினை சந்தித்தார் திருமா. அறிவாலயத்தில் நடந்த இந்த சந்திப்பில் திமுகவின் சீனியர்களும், சிறுத்தைகளின் மாநில நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இந்த சந்திப்பின் போது, ஸ்டாலினும் திருமாவும் சில நிமிடங்கள் தனியாகப் பேசினர் என்று செய்தி வந்தது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், விசிக தலைவர் திருமாவளவனும் சுமார் 10 நிமிடங்கள் தனியாக சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 30 நிமிடங்கள் சந்திப்பு நடந்த நிலையில், அதில் 10 நிமிடங்கள் இருவரும் தனி அறையில் சந்தித்துப் பேசி உள்ளனர்

கூட்டணியில் ஏற்பட்ட சில விரிசல்கள், கசப்புகளை பேசி தீர்த்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்பட்ட மோதல்கள் பற்றி இருவரும் இயல்பாக பேசி தீர்த்துள்ளனர்.
என்ன பேசினார்கள்: அதில் நடந்த விசயங்கள் என்னவென்பதை திமுக தரப்பில் விசாரித்த போது, ''மது ஒழிப்பு மாநாடு இன்றைய தேதியில் அவசியமா? அதுவும் கள்ளக்குறிச்சியில் நடத்துகிறீர்கள். கள்ளக்குறிச்சியை குறியீடாக காட்ட முயற்சிக்கிறீர்களா? கூட்டணியில் இருந்து கொண்டு இப்படியொரு மாநாட்டை நீங்கள் நடத்துவது சரியாகப்படவில்லை. இதைப்பற்றி கட்சியின் மூத்தவர்கள் உங்களின் நடவடிக்கைக்கு எதிராக கருத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
நான் தான் உங்கள் மீதுள்ள மரியாதைக்காக அவர்களை அமைதிப்படுத்தியிருக்கேன். கூட்டணியை விட்டு வெளியேற வேண்டுமானால் தாராளமாக வெளியேறலாம். நாங்கள் எதுவும் சொல்லப் போவதில்லை. அதற்காக கூட்டணியில் இருந்து கொண்டு நீங்கள் நெருக்கடி கொடுப்பதும், அதற்கு சப்பைக்கட்டு கட்டுவதும் ஜீரணிக்கமுடியாது. கூட்டணியை விட்டு வெளியேறி கட்சிக்கும் அரசுக்கும் எதிராக என்ன வேண்டுமானாலும் பேசுங்கள். அதை நாங்கள் எதிர்கொள்வோம். முடிவை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என காட்டமாகவே சொல்லிவிட்டார் முதல்வர் ஸ்டாலின்.
திருமா நடத்தவிருக்கும் மது ஒழிப்பு மாநாடு மூலம் திமுக கட்சிக்கும், ஆட்சிக்கும் நெருக்கடி உருவாகியிருக்கிறது. ஆட்சிக்கு அட்சயப் பாத்திரமாக இருக்கும் டாஸ்மாக்கை இழுத்து மூடும் வகையில், மது விலக்கை அமல்படுத்துவதை வலியுறுத்தி மது ஒழிப்பு மாநாடு நடத்துவது திமுக விரும்பவில்லை.
திருமாவின் முகம் வெளிறி விட்டது: ஸ்டாலினின் பேச்சை கேட்ட திருமாவின் முகம் வெளிறி விட்டது. அப்போது திருமா, 'அண்ணே கூட்டணியை விட்டெல்லாம் வெளியேறும் எண்ணம் எங்களுக்கு கிடையாதுண்ணே. சிறுத்தைகளிலுள்ள பெண் உறுப்பினர்கள் எல்லாம் மதுவுக்கு எதிராக ஒரு மாநாடு நடத்தலாமே என சொன்னதால் அதற்கு ஏற்பாடு செய்தோம். வேறு எந்த உள் நோக்கமும் இதில் இல்லை அண்ணே' என சொல்ல, 'ஓ.கே. நடத்துங்கள். எங்கள் கட்சியிலிருந்து ஆர்.எஸ். பாரதியை அனுப்பி வைக்கிறேன்' என தெரிவித்து அவரை அனுப்பி வைத்தார் தலைவர் ஸ்டாலின் '' என்று தனிப்பட்ட சந்திப்பில் நடந்ததை அறிந்துள்ள மூத்த நிர்வாகிகள் சொல்கின்றனர்
கூட்டணி மோதல் இல்லை: முக்கியமாக கூட்டணி மோதல் எல்லாம் இப்போது இல்லை.. வெறும் தோழமை சுட்டுதான் இது என்று ஸ்டாலின் - திருமா இடையே பேசப்பட்டு உள்ளதாம். சில பிரச்சனைகளை இதில் பேசி தீர்த்துக்கொண்டு உள்ளனர் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே வெளியே வந்த திருமா ஸ்டாலினுடன் சிரித்தபடி போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார்.
அதேபோல் வெளியேவும் சிரித்தபடியே திருமா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கூட்டணியில் பிரச்சனை இல்லை என்பதாலையே இரண்டு தரப்பும் சிரித்தபடி வந்ததாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications