யாராக இருந்தாலும்.. வீடியோ காலில் "அந்த" அமைச்சருக்கு டோஸ் விட்ட ஸ்டாலின்? பரபரப்பு.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று நடந்த திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார் என்று திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

2024 லோக்சபா தேர்தல் நெருங்கி வருகிறது. ஆளும் திமுக கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலிலும் 38-39 இடங்களை வெல்ல வேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து திமுக பணிகளை செய்து வருகிறது. இந்த நிலையில்தான் நேற்று திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

What did DMK CM Stalin say in the meeting with party leaders ahead of Lok Sabha 2024?

அமைச்சர்களுக்கு அட்வைஸ்: இந்த கூட்டத்தில் அமைச்சர்களுக்கு முக்கியமான அறிவுரைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். அதன்படி முதலில் ஒரு அமைச்சரின் பெயரை சொல்லி.. நீங்கள் ஏன் பொது இடங்களில் தொடர்ந்து வாய் தவறி பேசுகிறீர்கள். ஏற்கனவே உங்களை இது தொடர்பாக கண்டித்து இருக்கிறேனே.

ஆனால் ஏன் இன்னமும் வாய் தவறி பேசுவது தொடருகிறது. நாம் இப்போது சோஷியல் மீடியா யுகத்தில் இருக்கிறோம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் பேசுவதை மக்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். வாய் தவறி எதையாவது பேச வேண்டாம். அப்படி பேசினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஒற்றுமை முக்கியம் அமைச்சரே!: அமைச்சர்கள் - மாவட்ட செயலர்கள் சிலர் இடையே ஒற்றுமை இல்லை என்று எனக்கு தகவல் வந்துள்ளது. பல முறை சொல்லிவிட்டேன். எனக்கு இதெல்லாம் தெரியாமல் இருக்காது என்று நினைக்காதீர்கள். உள்ளூர் அளவில் என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியும்.

மாவட்ட செயலாளர்கள் - அமைச்சர்கள் ஒன்றாக செயல்படுவதே மிக முக்கியம். நட்பாக இருங்கள். உங்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை பேசி சரி செய்யுங்கள். அதுதான் கட்சிக்கு நல்லது.. உங்களுக்கும் அதுதான் நல்லது. முக்கியமாக யாரும் யாரையும் ஒருமையில் பேச வேண்டாம்.

தேர்தல் பணிகள்: தேர்தல் பணிகளை தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. லோக்சபா தேர்தல் பணிகள் பற்றி ஏற்கனவே கூறி இருந்தேன். பூத் கமிட்டிகளை புதுப்பிக்க வேண்டும். புதிய நிர்வாகிகளை பூத் கமிட்டிக்கு சேர்க்க வேண்டும். அதற்கான பணிகளை செய்யுங்கள். லோக்சபா தேர்தலில் புதுச்சேரி சேர்த்து 40க்கு 40 நம்முடைய இலக்கு. அதற்கான பணிகளை இப்போதே செய்திடுங்கள்.

எனக்கு தேர்தல் பணிகள் சுணக்கம் குறித்து எந்த புகாரும் வரக்கூடாது. கவனமாக பணிகளை செய்திடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று கூட்டத்தில் பேசி இருக்கிறார்.

சோஷியல் மீடியா - 50 ஆயிரம்: சோஷியல் மீடியாக்கள் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்.. சோஷியல் மீடியா யுகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை மறக்க வேண்டாம். அதை எப்படி பயன்படுத்திக்கொள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் செய்யும் பணிகளை சமூக வலைத்தளத்தில் எடுத்து சொல்லுங்கள் என்று ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளாராம்.

What did DMK CM Stalin say in the meeting with party leaders ahead of Lok Sabha 2024?

50 ஆயிரம் பேரை கட்சியில் சேர்ப்பது குறித்தும் ஸ்டாலின் ஆலோசனை செய்து இருக்கிறாராம். அதன்படி லோக்சபா தேர்தலுக்காக பூத் கமிட்டியை அமைக்க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். 50 ஆயிரம் உறுப்பினர்களை இணைக்க டார்கெட் வைத்துளோம். இதில் பாதி கிணறு தாண்டிவிட்டோம். ஆனால் மீதி கிணறு இன்னும் தாண்டவில்லை.

லோக்சபா தேர்தலுக்கு உட்கட்சி சர்வே எடுக்க வேண்டும்.எம்பிக்கள் செயல்பாடு எப்படி உள்ளது.. யாரை மீண்டும் நிற்க வைக்கலாம்.. புதியவர்கள் தேவையா.. ஏற்கனவே இருப்பவர்களை மீண்டும் களமிறக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறதாம். முக்கியமாக 10 புதிய முகங்களை தேர்தலுக்கு களமிறக்குவது தொடர்பாக ஆலோசனை செய்து இருக்கிறாராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+