எடப்பாடி வீசிய 10 "சரவெடிகள்".. இன்று வசமாக வெடிக்கும்.. அதிமுக வழக்கில் சொன்னது என்ன? பின்னணி
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. பொதுக்குழு நடந்தது செல்லுமா, செல்லதா என்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
Recommended Video
கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு தொடுத்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இதில் அனைத்து தரப்பு விசாரணைகளும் முடிந்துவிட்டன.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் இந்த வழக்கை விசாரித்து வந்தார். இதில் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் இரண்டு தரப்பிற்கும் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
இந்த வழக்கில் கடந்த வாரம் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி வைத்த வாதங்கள் என்னென்னெ என்று பார்க்கலாம்!

எடப்பாடி வாதங்கள்
இந்த பொதுக்குழு நடந்ததே சட்டப்படிதான் என்ற ரீதியில்தான் எடப்பாடி பழனிசாமி வாதம் வைத்தார்.
வாதம் 1 - அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது. 2432 பேர் ஒற்றை தலைமை வேண்டும் என்று கேட்டனர். இவர்கள் ஒற்றை தலைமை வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதோடு இவர்கள் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்தனர்.
வாதம் 2 - ஜூலை 23ம் தேதி பொதுக்குழுவில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டன. அதனால் அந்த பொதுக்குழுவில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகிவிட்டன. ஏனென்றால் இந்த பதவிகளுக்கு ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவில் ஒப்புதல் தரப்படவில்லை.

முக்கிய வாதம்
வாதம் 3 - அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதி ஆனாலும்.. பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகள் காலாவதி ஆகாது. ஏனென்றால் அதில் சட்ட திருத்தம் எதுவும் செய்யவில்லை.எனவே பொதுக்குழு செல்லும்.
வாதம் 4 - பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்றுத்தான் இரண்டாவது பொதுக்குழு நடத்தப்பட்டது. ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் மீண்டும் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் பெரும்பான்மை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து இருந்தனர்.

பொதுக்குழு கமிட்டி
வாதம் 5 - 2000க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவை மீண்டும் கூட்ட வேண்டும் என்று கோரினர். இதனால் அவைத்தலைவர் பொதுக்குழு அறிவிப்பை வெளியிட்டார்.
வாதம் 6- ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடக்கும் என்று ஜூன் 23ம் தேதி பொதுக்குழுவிலேயே அறிவித்தோம். இது டிவியிலும் காட்டப்பட்டது. அதனால் 15 நாட்கள் அவகாசம் கொடுக்கப்படவில்லை என்று கூற முடியாது.

ஏன் முக்கியம்
வாதம் 7 - மெஜாரிட்டி உறுப்பினர்கள் வைத்த இந்த கோரிக்கையால் பொதுக்குழு நடத்தப்பட்டது. அதிமுகவில் எல்லாம் ஜனநாயக முறைப்படி நடக்கும். கட்சியில் இக்கட்டான நேரத்தில் மெஜாரிட்டி உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று இப்படி செய்யலாம்.
வாதம் 8 - அதிமுகவில் இதற்கு முன்பே இப்படி தேர்வுகள் நடந்து உள்ளன. ஓ பன்னீர்செல்வத்திற்கு நிர்வாகிகள் ஆதரவு இல்லை.

ஆதரவு இல்லை
வாதம் 9 - பொதுக்குழுவை நடத்த கோர்ட் அனுமதி கொடுத்த அடிப்படையில்தான் நடத்தினோம். உச்ச நீதிமன்றம் எங்களுக்கு அனுமதி கொடுத்தது.
வாதம் 10 - பொதுக்குழுவிற்கு வந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் எல்லோரும் ஒன்றாக ஒருமனதாக முடிவு எடுத்தனர். அதனால் இதை கோர்ட் மதிக்க வேண்டும். கட்சி அரசியலில் மெஜாரிட்டிதான் முக்கியம். ஓபிஎஸ்ஸுக்கு மெஜாரிட்டி இல்லை.
-
சி.வி.சண்முகம் திண்டிவனத்தில் போட்ட பகீர் குண்டு.. ஆடிப்போன அதிமுக.. இபிஎஸ்-க்கு இப்படியொரு சிக்கலா -
நீ வேணா சண்டைக்கு வா.. எடப்பாடியிடம் விடாமல் ஒரண்டை இழுக்கும் சி.விஜயபாஸ்கர்! ஓ.. இதுதான் ப்ளானா? -
அடுத்து ராஜினாமாவுக்கு ரெடியாகும் 3 தலைகள்.. ’மறுமலர்ச்சி’யுடன் விஜய்! பனையூர் போட்ட பக்கா ஸ்கெட்ச்! -
சென்னையில் இடி.. தவெகவில் இணையும் அதிமுக மா.செக்கள்? எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி! -
அந்த மூவரையும் சேர்க்காதீங்க.. தடுக்கும் நிர்மல்குமார்.. மதுரை தவெகவில் நடப்பது என்ன? -
சின்ன புரட்சித் தமிழர்..அதிமுகவில் என்ட்ரி கொடுக்கும் எடப்பாடி மகன்? மிதுனால் மிரளும் அதிமுக தலைகள்? -
47ல் இருந்து 42ஆக வீழ்ச்சி! எடப்பாடிக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி கொடுக்கும் அதிமுக எம்எல்ஏ-க்கள்! -
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
4 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி -
வயிறு எரியுது! விஜய்யிடம் சரணடைவதை விட உயிரை விடலாம்! விஜயபாஸ்கர் மீது ஆர்பி உதயகுமார் கடும் தாக்கு! -
பாமக போட்ட பிச்சை.. அதிமுகவைக் காப்பாற்றிய அன்புமணி! போட்டுத் தாக்கிய சிவி சண்முகம்! உண்மை என்ன? -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்!












Click it and Unblock the Notifications