Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நானும் அண்ணாமலையும் அதிமுகவில் இணைகிறோம்.. கொளுத்தி போட்ட காயத்ரி ரகுராம்.. பாஜகவில் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜகவில் இருந்து விலகிய இரு தமிழ் நடிகைகள் தீபாவளிக்கு முன்னர் அதிமுகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இதுகுறித்து சம்பந்தப்பட்ட நடிகை காயத்ரி தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியலில் எதுவும் நிரந்தரமில்லை என்பார்கள். மாற்றம் ஒன்றே மாறாதது. ஏனைய அனைத்து மாறுதலுக்குள்பட்டதே என்பது நிதர்சனம். அந்த வகையில் இன்று ஒரு கட்சியில் இருப்போர் நாளை வேறு கட்சிக்கு செல்கிறார்கள்.

What did Gayathri says about her merge in AIADMK?

ஒரு சிலர் கோட்பாடுதான் முக்கியம் என கருதி அதே கட்சியிலேயே நீடிக்கவும் செய்கிறார்கள். தற்போது எதுவாக இருந்தாலும் விளம்பரம் என்றாகிவிட்டதால் அரசியல் கட்சிகள் சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் பிரபலங்கள், விளையாட்டு வீரர்களை, திரைத்துறையை சேர்ந்த கலைஞர்களை பயன்படுத்திக் கொள்கின்றன.

அந்த வகையில் அரசியலில் தமிழ் திரைப்பட நடிகைகளை எடுத்துக் கொண்டால் குஷ்பு, கவுதமி, காயத்ரி, நக்மா, திவ்யா ஸ்பந்தனா, நக்மா, சுமலதா, நவ்நீத் கவுர், வினோதினி உள்ளிட்டோர் அரசியலில் இருந்து வருகிறார்கள். இந்த நிலையில் பாஜகவில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராமும் கவுதமியும் எந்த கட்சியில் இணைவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தற்போது 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நெருங்குவதால் அவர்கள் விரைவில் ஏதாவது ஒரு கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் காயத்ரி ரகுராம் பாஜகவிலிருந்து விலகியதுமே எதிரும் புதிருமாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை திடீரென சந்தித்து பேசினார்.

மேலும் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது தான் எந்த கட்சியிலும் இணைய தயார் என்றும் அதற்கு சிறிது கால அவகாசம் வேண்டும் என்றும் கூறியிருந்தார், அதிமுக, திமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என எந்த கட்சியிலும் இணைவேன் என்றார். அதுவரை அவர் பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார்.

இவரை போலவே பாஜகவில் கடுமையாக உழைத்த கவுதமி, தனது சொத்தை ஏமாற்றிய பாஜக நிர்வாகி அழகப்பன் குறித்து கட்சி தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் ராஜபாளையத்தில் தனக்கு தொடர்ந்து சீட் கிடைக்கும் என நம்பிக்கை கொடுக்கப்பட்டு கடைசியில் சீட் கொடுக்கவில்லை என்ற ஆதங்கத்தையும் கவுதமி தனது ராஜினாமா கடிதத்தில் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நிலையில் கவுதமியும் காயத்ரி ரகுராமும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்ததாக சொல்லப்படுகிறது. அவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகைக்கு முன்பு அதிமுகவில் இணைவார்கள் என சொல்லப்படுகிறது. அப்படி இணையும் பட்சத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாய்ப்போ அல்லது கட்சியில் பதவியோ கொடுக்கப்படும் என்று தெரிகிறது. திருச்சி சூர்யா சிவா- டெய்சி இடையே ஆடியோ விவகாரம் வெளியான நிலையில் பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காயத்ரி உரிமை குரல் எழுப்பியிருந்தார். அது போல் தான் திமுக தலைமைக்கு நெருங்கிய உறவினரை ஒரு பர்த்டே பார்ட்டியில் சந்தித்ததை அண்ணாமலையின் ஐடி விங் தவறான கண்ணோட்டத்தில் செய்தியை பரப்பியதாக கண்டனத்தை தெரிவித்து அக்கட்சியிலிருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

What did Gayathri says about her merge in AIADMK?

இந்த நிலையில் அதிமுகவில் தான் இணைவது குறித்து காயத்ரி தனது எக்ஸ் வலைதளபக்கத்தில் கூறியிருப்பதாவது: நானும் அண்ணாமலையும் நாங்கள் இருவரும் ஒன்றாக அதிமுகவில் இணைகிறோம். செய்தியை சரியாக போடுங்கள். இவ்வாறு காயத்ரி தெரிவித்துள்ளார். அப்படியென்றால் அவர் அதிமுகவில் இணையவில்லை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+