என்ன நடக்குது? கைக்கு வந்த உளவு தகவல்.. அதிருப்தியில் ஆளுநர் ரவி.. கமிஷ்னரிடம் விசாரித்தது என்ன?
சென்னை: ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் திமுக அரசு மீது செம காட்டத்தில் இருக்கிறார் ஆளுநர் ரவி என்று அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கிண்டி ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. குண்டு வீசி விட்டு தப்பி ஓட முயன்ற ரவுடி கருக்கா முத்துவை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர் தற்போதுபுழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா என்ற வினோத் மீது நேற்று கடுமையான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவர் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்றும் கூட கூறப்படுகிறது. சர்வசாதாரணமாக நடந்து வந்தே பெட்ரோல் குண்டு வீசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு உடனுக்குடன் ஆக்சன் எடுத்துள்ளது. ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் திமுக அரசு மீது செம காட்டத்தில் இருக்கிறார் ஆளுநர் ரவி என்று அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புகார் அளிப்பு: இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழக டிஜிபிக்கும், சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னருக்கும் ஆளுநர் தரப்பில் இருந்து புகார் தரப்பட்டது. அதில் திமுக மீது குற்றம் சாட்டியிருந்தது ராஜ்பவன். இந்த நிலையில், சென்னை தெற்கு இணை ஆணையர் சிபிசக்ரவர்த்தி, கவர்னரை நேரில் சந்தித்து, நடந்துள்ள சம்பவத்தை பற்றி விளக்கமளித்திருக்கிறார்.
ஆனால், அவரது விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தி இல்லையாம். இந்த நிலையில், ராஜ்பவனுக்கு கமிஷ்னர் சந்தீப் ராய் ரத்தோரை இன்று வரவழைத்து விசாரணை நடத்தியுள்ளார் ஆளுநர் ரவி. அந்த விசாரணையில், சம்பவத்தில் தொடர்புடைய கிரிமினலை கைது செய்திருப்பதையும், அவன் கொடுத்த வாக்குமூலத்தினையும் கவர்னரிடம் கமிஷ்னர் விவரித்ததாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், சிபிசக்கரவர்த்தி ஒப்புவித்ததையேத்தான் கமிஷ்னரும் சொல்வதாக நினைக்கும் ஆளுநர் , கமிஷ்னரின் விளக்கத்திலும் திருப்தியடையவில்லையாம். அதேசமயம், ஐ.பி.யிடமிருந்து தனக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சட்டம் ஒழுங்கு குறித்து ஆளுநர் கேள்வி எழுப்பியதாகவும் தெரிகிறது.
பாஜக எம்பி கண்டனம்; இந்த நிலையில் பாஜக எம்பி வானதி சீனிவாசன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், ஆளுநர் மாளிகைக்கே பாதுகாப்பு இல்லாத நிலையில் கோவை குண்டு வெடிப்பு குற்றவாளிகளை விடுதலை செய்ய துடிப்பதா? என்று கேள்வி எழுப்பி உள்ளார் .
அதில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் நாளை சென்னை வருகைதர உள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பெட்ரோல் வீசியதாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள ரவுடி கருக்கா வினோத், கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 10-ம் தேதி, சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்று காவல் துறையே தெரிவித்துள்ளது. அந்த ரவுடியிடம் மேலும் நான்கு பெட்ரோல் குண்டுகள் இருந்ததாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் குண்டு வைத்து அப்பாவி பொதுமக்களைக் கொன்று குவித்த பயங்கரவாதிகளை, கருணை அடிப்படையில் விடுதலை செய்ய திமுக அரசு, ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் ஆளுநர் மாளிகையிலேயே பெட்ரோல் குண்டு வீசத் துணியும் அளவுக்கு சட்டம் - ஒழுங்கி சீர்குலைந்துள்ளது.
இந்தச் சூழலில் கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுதலை செய்தால், அதனால் தமிழ்நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளதை மறுக்க முடியாது. பயங்கரவாதிகளை பயங்கரவாதிகளாகவே பார்க்க வேண்டும். அவர்களை விடுவித்தார் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் வாக்குகள் கிடைக்கும் என அரசியல் லாபக் கணக்கு பார்க்கக் கூடாது.
திமுக அரசின் செயல்பாடுகளை, அதன் இந்து விரோதப் போக்கை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டால், பகிர்ந்தால் கூட வார இறுதி நாட்களில் நள்ளிரவில் வீடு புகந்து கைது செய்யவே தமிழ்நாடு காவல்துறைக்கு நேரம் போதவில்லை.
ஆளுநர் மாளிகையிலேயே ஒருவர் குண்டு வீச துணிகிறார் என்றால், அது ஒரு தனி நபரின் முயற்சியாக மட்டும் இருக்க வாய்ப்பில்லை. எனவே, ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். தமிழ்நாடு காவல் துறை தி.மு.க.,வினரின் உத்தரவுக்கு ஏற்ப இயங்கும் துறையாக இருப்பதால் இந்த வழக்கு விசாரணையை, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அல்லது சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications