"அது" உண்மையா? ஜெயலலிதா முகத்தில் இருந்த ஓட்டை! எம்பாமிங் செய்த போது நடந்தது என்ன? பரபர ரிப்போர்ட்
சென்னை: ஜெயலலிதாவின் கன்னத்தில் எம்பாமிங் காரணமாக துளை இருந்ததா என்பது தொடர்பான கேள்விக்கு ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் பதில் கிடைத்துள்ளது.
ஜெயலலிதா 2016ல் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது, அந்த சிகிச்சையின் போது அவருக்கு நடந்த விஷயங்கள், சிகிச்சைக்கு பின்பு நடந்த விஷயங்கள், அவரின் மரணம் என்று அனைத்திலும் மர்மம் நீடித்து வருகிறது.
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக பல்வேறு வதந்திகள் அப்போது இணையத்தில் வெளியாகின.

ஜெயலலிதா
ஜெயலலிதாவை தாக்கி விட்டனர். மருத்துவமனைக்கு செல்லும் போதே ஜெயலலிதா உயிரோடு இல்லை என்றெல்லாம் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டன. ஆனால் பல்வேறு வதந்திகளுக்கு ஆறுமுகசாமி ஆணையம் தற்போது பதில் அளித்துள்ளது. முக்கியமாக ஜெயலலிதா மருத்துவமனைக்கு வரும் போது ஸ்ட்ரெச்சரில்தான் வந்தார். அவர் மயக்கம் அடைந்த நிலையில் இருந்தார். 3 நாட்கள் கழித்துதான் அவருக்கு சுயநினைவே திரும்பியது.

அறிக்கை
இந்த நிலையில்தான் ஜெயலலிதா மரணம் தொடர்பாக பொன்னையன் முக்கியமான குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில், மறைந்த முதல்வரது தலையில் எவரோ மரக்கட்டையால் தாக்கியதால், அவர் மயங்கி விழுந்தார் என C.W-140 முன்னாள் அமைச்சரும் கட்சிப் பொறுப்பாளருமான திரு. C. பொன்னையன் கூறினார். இது மிகக்கடுமையான குற்றச்சாட்டு, இது ஆணையத்தால் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.

கடுமை
இந்த அறிக்கை மிக கடுமையானது. அதனால் அதை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று முடிவு எடுத்து ஆறுமுகசாமி விசாரித்து உள்ளார். இந்த குற்றச்சாட்டிற்கு ஆதாரம் என்ன இருக்கிறது என்று விசாரித்து உள்ளார். ஆனால் ஜெயலலிதாவுடன் நெருக்கமாக இருந்த யாரும் இப்படி சம்பவம் நடந்ததாக கூறவில்லை. இதையடுத்து நேரடியாக பொன்னையனிடம் விசாரணை செய்யப்பட்டது. இந்த குற்றச்சாட்டை நீங்கள் வைத்து எப்படி என்று விசாரிக்கப்பட்டது.

விசாரணை
ஆனால், முதல் விசாரணையில் தனது கூற்று தான் கேட்ட சில வதந்திகளின் அடிப்படையில் இருந்தது என்பதை அவர் தனது குறுக்கு விசாரணையில் ஒப்புக்கொண்டார். மேலும், மறைந்த முதல்வரது தலையில் உடல் ரீதியான வன்முறையின் எவ்விதமான அடையாளத்தையும் மருத்துவர்கள் குறிப்பிடவில்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. அதாவது அவரை பரிசோதனை செய்த டாக்டர் யாரும் தலையில் காயம் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.

மறைவு
அதேபோல் முதல்வரது மறைவுக்குப் பின்னர், அவரது உடலில் எம்பாமிங் (embalming) செய்தவர் என்ற முறையில், இது குறித்து, C.W-15 டாக்டர். சுதா சேஷையனின் சான்றுகள் இச்சமயத்தில் பரிசீலிக்கப்பட வேண்டி உள்ளது. ஊடகங்களில் பரவிய வதந்திகளைப் போல, மறைந்த முதல்வரின் முகத்தில் துளைகள் இல்லை என்று அவர் கூறியுள்ளார். உண்மையாகவே உடலில் துளைகள் இருந்திருந்தால், எம்பாமிங் செய்யும் போது, துளைகள் வழியாக உடல் திரவ ஓட்டம் இருந்திருக்கும் என்று அவர் மேலும் கூறினார். ஆனால், அப்படி எதுவும் நடக்கவில்லை. ஆகவே, அவரைப் பொறுத்தவரை, உடல் ரீதியான வன்முறைக்கான எந்தத் தடயமும் காணப்படவில்லை, என்று குறிப்பிட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications