கமலாலயத்தை கிராஸ் செய்த ஆ. ராசா கார்.. சட்டென பாஜக ஆபிசில் இருந்து கேட்ட குரல்.. அந்த நொடி.. ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுக எம்பி ஆ. ராசாவின் கார் நேற்று பாஜக அலுவலகமான கமலாலயத்தை கடந்த போது நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழகத்தின் ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தங்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. இந்த வேட்பாளர் பட்டியலில் உற்சாகமும் இருக்கிறது, அதிருப்தியும் இருக்கிறது.

What did happen when DMK MP A Raja car crossed BJP office in Chennai

இது ஒரு புறமிருக்க, வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய 27ந்தேதி கடைசி நாள். இந்த நிலையில், திமுக, அதிமுக வேட்பாளர்கள், எப்போது வேட்பு மனு தாக்கல் செய்வது என தலைமையிடம் கேட்டு வருகின்றனர். வருகிற ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி (24-ந்தேதி) என்பதாலும், அதன்பிறகு தேய்பிறை ஆரம்பிப்பதாலும் 24-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளதாம்.

லோக்சபா தேர்தலுக்கான கூட்டணி பற்றிய அறிவிப்புகளை திமுக வேகமாக வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதில்,

1‌ ) வடசென்னை - கலாநிதி வீராசாமி

2 ) தென்சென்னை - தமிழச்சி தங்கபாண்டியன்

3 ) மத்திய சென்னை - தயாநிதி மாறன்

4 ) காஞ்சிபுரம் (தனி) - செல்வம்

5 ) அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

6) வேலூர் - கதிர் ஆனந்த்

7 ) தருமபுரி - அ.மணி

8 ) திருவண்ணாமலை - சி.என்.அண்ணாதுரை

9 ) சேலம் - செல்வ கணபதி

10 ) கள்ளக்குறிச்சி - மலையரசன்

11 ) நீலகிரி (தனி) - ஆ.ராசா

12 ) பொள்ளாச்சி - கே.ஈஸ்வரசாமி

13 ) கோவை - கணபதி ராஜ்குமார்

14 ) தஞ்சாவூர் - ச.முரசொலி

15 ) தூத்துக்குடி - கனிமொழி கருணாநிதி

16 ) தென்காசி (தனி) - ராணி ஸ்ரீ குமார்

17 ) ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

18 ) பெரம்பலூர் - அருண் நேரு

19 ) தேனி - தங்க தமிழ்செல்வன்

20 ) ஈரோடு - பிரகாஷ்

21 ) ஆரணி - தரணி வேந்தன்

ஆ. ராசா: வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் இவர்கள் பலரும் கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஆ. ராசா நேற்று சிபிஎம் அலுவலகத்திற்கு சென்றார்.

தி நகரில் உள்ள சிபிஎம் அலுவலகத்திற்கு ஆ. ராசா சென்று அங்கே சிபிஎம் தலைவர்களிடம் ஆலோசனை செய்தார். அதற்கு முன் அவர் பாஜக அலுவலகம் வழியாக சிபிஎம் அலுவலகம் சென்றார். அங்கே போக்குவரத்து நெரிசல் நிலவியது.

இதனால் ஆ. ராசாவின் கார் மெதுவாக நகர்ந்தது. அப்போது பாஜகவினர் ஆ. ராசாவை காரில் பார்த்துவிட்டு.. பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டனர்.

இதையடுத்து உடனே ஆ. ராசா காரை நிறுத்த சொல்லி.. கண்ணாடியை திறந்து.. தமிழ்நாடு வாழட்டும்.. பாரதமும் வாழட்டும் என்றார். உடனே அங்கிருந்த இன்னொரு பாஜக நிர்வாகி.. நீங்க பேசும் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் உங்களின் பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறி பாராட்டினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+