அங்க வீங்கிருக்கே! பல்லுக்கு எதும் ஆகலியே? வேட்டியை மடிச்சு கட்டிய ஜெயக்குமார்! ஓபிஎஸ் மீது ஆக்ரோஷம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுக தீர்மானக்குழு கூட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளான தனது ஆதரவாளரை ஜெயக்குமார் நேரில் சென்று சந்தித்தார். இந்த சந்திப்பில் ஜெயக்குமார் கோபமாக காணப்பட்டார்.

Recommended Video

    ரத்தம் சிந்திய தொண்டர் ஓடோடி வந்து நலம் விசாரித்த ஜெயகுமார் - வீடியோ

    அதிமுகவில் இரண்டு நாட்களுக்கு முன் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில்தான் பொதுச்செயலாளர் பதவி குறித்து ஆலோசனை செய்துள்ளனர். கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் பலர் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். ஒற்றை தலைமை இருந்தால் கட்சியை காக்க முடியும்.. எடப்பாடி பழனிச்சாமிதான் ஒற்றை தலைமையாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்துள்ளனர்.

    இதற்கு ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

     பொதுக்குழு தீர்மனம்

    பொதுக்குழு தீர்மனம்

    இந்த நிலையில்தான் அதிமுக தீர்மானக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இரண்டாவது நாளாக நேற்று நடைபெற்ற இந்த கூட்டத்தில்தான் அதிமுகவில் பொதுக்குழுவில் என்னென்ன தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்படும். அதாவது இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் தீர்மானங்கள்தான் பொதுக்குழுவிற்கு செல்லும். இந்த தீர்மானக்குழுவில் மொத்தம் 12 பேர் உள்ளனர். இதில் 8 பேர் எடப்பாடி ஆதரவு நிர்வாகிகள். இதனால் எப்படியாவது ஒற்றை தலைமை குறித்த தீர்மானத்தை, தீர்மான லிஸ்டில் சேர்க்கலாம் என்று அவர்கள் பிளான் செய்தனர்.

    சிவி சண்முகம்

    சிவி சண்முகம்

    இந்த நிலையில் முதல் கூட்டம் நேற்று முதல்நாள் சிவி சண்முகம் தலைமையில் நடந்தது. இதில் ஜெயக்குமார் கலந்து கொண்டார். இந்த கூட்டத்திற்கு கலந்து கொள்ள ஓ பன்னீர்செல்வம் வருகிறார் என்று தெரிந்ததும் கூட்டம் பாதியில் முடிக்கப்பட்டது. ஜெயக்குமாரும் அவசரமாக வெளியேறினார். ஆனால் ஓபிஎஸ்ஸுக்காக கூட்டத்தை நாங்கள் முடிக்கவில்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்.

    ஜெயக்குமார்

    ஜெயக்குமார்

    இந்த கூட்டம் முடிந்து வெளியே சென்ற ஜெயக்குமாரை வழி மறித்த ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்தனர். ஜெயக்குமார் கார் மீது தாக்கி மோசமான வார்த்தைகளை பேசினர்.. ஹே ****** என்று கூறி அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளை குறிப்பிட்டு தாக்கி பேசினார். இந்த நிலையில் நடந்த கூட்டத்தில் ஓபிஎஸ், ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

     ஓபிஎஸ்

    ஓபிஎஸ்

    இதில் உள்ளே கூட்டம் நடக்கும் போதே ஓபிஎஸ், ஜெயக்குமார் ஆதரவாளர்கள் உள்ளேயே மோதலில் ஈடுபட்டு உள்ளனர். மாறி மாறி இரண்டு தரப்பினரும் தாக்கிக்கொண்டு உள்ளனர். இதில் மோதல் பெரிதாகி உள்ளது. இதில் மாறி மாறி தாக்குதல் நடத்தப்பட்டதில் ஜெயக்குமார் ஆதரவாளர் ஒருவர் ரத்த காயத்துடன் வெளியே வந்தார். அந்த நபரின் பெயர் பெரம்பூர் மாரிமுத்து என்று தெரியவந்தது. அப்போது ரத்தக்காயங்களுடன் ஒருவர் வந்து எடப்பாடி ஆளா நீ என்று கேட்டு சிலர் தாக்கியதாக கூறினார்.

    தாக்குதல்

    தாக்குதல்

    இந்த சம்பவம் பெரிய சர்ச்சையானது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களும் வெளியாகின. இந்த நிலையில், இவரை ஜெயக்குமார் நேரில் சென்று சந்தித்தார். அதிமுக தீர்மானக்குழு கூட்டத்தில் தனது ஆதரவாளரை தாக்கிவிட்டார்கள் என்று தெரிந்ததும் வேட்டியை மடித்துக்காட்டிக்கொண்டு ஜெயக்குமார் வேகமாக காரில் அங்கு சென்றார். மருத்துவமனையில் பெரம்பூர் மாரிமுத்துவை சந்தித்தார். இந்த சந்திப்பில் ஜெயக்குமார் கோபமாக காணப்பட்டார்

    கோபம்

    கோபம்

    கோபமாக காணப்பட்ட அவர்.. என்ன இவர் வாய் வீங்கி இருக்கு. உட்பக்கமும் வீங்கி இருக்கு. சட்டை எல்லாம் ரத்தமா இருக்கே. அவருக்கு பல்லு உடைஞ்சு இருக்கா பாருங்க.. உங்களுக்கு பல்லு உடைஞ்சு இருக்கா? என்று ஜெயக்குமார் அன்பாக கேட்டார். பல்லு உடையல அண்ணே.. சதை கிழிஞ்சிட்டு என்று அவர் குறிப்பிட்டார். அவரை நலம் விசாரித்துவிட்டு ஜெயக்குமார் வெளியே வந்தார். தொடர் மோதல்கள் காரணமாக ஓபிஎஸ் மீது ஜெயக்குமார் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+