கலக்கிட்டீங்க.. பாராட்டிய ராகுல்.. நீங்கதான் தலையிட்டு சரி செய்யணும்.. பட்டென சொன்ன கனிமொழி! பின்னணி
சென்னை: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் ராகுல் காந்தி இடையிலான உயர்மட்டச் சந்திப்பு நேற்று தீவிரமாக நடந்தது. இதில் கூட்டணி தொடர்பான இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என்றாலும் இரண்டு தரப்பிலும் பல முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி மோதலுக்கு முற்றுப்புள்ளி
திமுக எம்பி கனிமொழி மற்றும் ராகுல் காந்தி இடையிலான சந்திப்பு மிகவும் இணக்கமான முறையில் நடந்து முடிந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இரு கட்சிகளுக்கும் இடையே நிலவி வந்த கசப்பான சூழலை இந்தச் சந்திப்பு மாற்றியுள்ளது.
கனிமொழி வந்த போது.. முதலில் வாங்க மேடம்.. எப்படி இருக்கீங்க.. என்று சில நிமிடம் பேசி உள்ளனர். டெல்லி கிளைமேட் குறித்தும் பேசி உள்ளனர். அதேபோல் சில நிமிடங்கள் அஜித் பவாரின் விமான விபத்து தொடர்பாக கலக்கத்துடன் பேசி உள்ளனர்.
இது போக.. தமிழ்நாட்டில் தேர்தல் ஏற்பாடுகள் எப்படி நடக்கின்றன.. மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி எல்லாம் பேசி உள்ளனர். மகளிரணி நடத்திய மாநாடு பற்றி கேள்விப்பட்டேன்.. நன்றாக இருந்தது.. கலக்கிட்டீங்க.. என்றும் ராகுல் காந்தி கனிமொழியிடம் பாராட்டும் விதமாக பேசி இருக்கிறாராம். இந்த அளவிற்கு தமிழக அரசியலை ராகுல் ஃபாலோ செய்வதை கனிமொழி வியந்து பார்த்துள்ளார்.
சந்திப்பின் முக்கிய முடிவுகள்:
ஆட்சியில் பங்கு இல்லை: கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தும் எந்தவொரு கோரிக்கையையும் (ஆட்சியில் பங்கு போன்றவை) காங்கிரஸ் முன்வைக்காது என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார்.
விஜய்யுடன் கூட்டணி இல்லை: நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கைகோர்க்கும் எண்ணம் காங்கிரசுக்கு இல்லை என்பதையும், திமுகவுடனான கூட்டணியே தொடரும் என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
யூகங்களுக்கு முற்றுப்புள்ளி: வெறும் 30 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்தச் சந்திப்பு, கடந்த பல மாதங்களாக நீடித்து வந்த அரசியல் யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மோதலுக்கான பின்னணி:
தமிழகத்தில் 'தனிப்பெரும்பான்மை ஆட்சி' என்பதே திமுகவின் நீண்டகால கொள்கை. ஆனால், காங்கிரஸ் தரப்பிலிருந்து மாணிக்கம் தாகூர் எம்பி மற்றும் ராகுல் காந்தியின் உதவியாளர் பிரவீன் சக்ரவர்த்தி போன்றோர் சமூக வலைதளங்களில் வெளியிட்ட கருத்துகள் திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தின. மேலும், காங்கிரசுக்கு அதிக இடங்களை ஒதுக்கினால், அது விசிக, மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டை பாதிக்கும் என திமுக அஞ்சியது.
இருதரப்பு புகார்கள்:
ராகுல் காந்தியின் கோரிக்கை: தமிழகத்தில் சில திமுக நிர்வாகிகள் காங்கிரஸ் தலைவர்களை நடத்தும் விதம் குறித்து ராகுல் அதிருப்தி தெரிவித்ததுடன், அதை சரி செய்ய கனிமொழியிடம் கேட்டுக்கொண்டார். எங்க கட்சியில் இருக்குறவங்க சொன்ன கேட்டுப்பாங்க.. நீங்க கொஞ்சம் காங்கிரஸ் தலைகளிடம் பேசி அமைதியாக்க வேண்டும் என்று கனிமொழி கூறி உள்ளார்.
திமுகவின் புகார்: காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தொடர்பான பிரச்சனைகளை திமுக தரப்பு விளக்கியது. இதனைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையின் போது சுமுகமான சூழலை உருவாக்க மூத்த தலைவர் முகுல் வாஸ்னிக் உடன் இருப்பார் என முடிவு செய்யப்பட்டது.
தொகுதிப் பங்கீடு: நீடிக்கும் இழுபறி
கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும், தொகுதிகளின் எண்ணிக்கையில் இன்னும் தெளிவு பிறக்கவில்லை.
காங்கிரஸ் கோரிக்கை: ஆரம்பத்தில் 70 இடங்கள் எனக் கூறி வந்த காங்கிரஸ், பின்னர் 42 இடங்களைக் கேட்டது. தற்போது 38 இடங்களாவது வேண்டும் என எதிர்பார்க்கிறது.
திமுகவின் நிலைப்பாடு: கடந்த முறை 25 இடங்களை வழங்கிய திமுக, இந்த முறை அதை 28 இடங்களாக மட்டுமே உயர்த்த முன்வந்துள்ளது. 36 வரை போக ரெடி என்று கூறப்படுகிறது. 2021-ல் வெற்றி பெற்ற 18 இடங்களை விட இந்த முறை கூடுதல் இடங்களை வெல்ல வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
கனிமொழி - ராகுல் சந்திப்பு தற்காலிகமாகப் பதற்றத்தைத் தணித்திருந்தாலும், அடுத்து வரவிருக்கும் முறையான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையே இந்தக் கூட்டணியின் பலத்தைத் தீர்மானிக்கும்.
-
விஜய் வேட்பு மனு பெரம்பூரில் தள்ளுபடி செய்யப்படுமா? சட்ட ரீதியாக விஜய்க்கு உள்ள வாய்ப்பு என்ன? -
கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி.. தேர்தல் பொறுப்பில் இருந்து விலகிய மாணிக்கம் தாகூர்! -
தமிழக நிர்வாகிகளுக்கு அனுமதியில்லை.. காங்கிரஸ் வேட்பாளர் யார் யார்? மேலிட தலைவர்கள் எடுக்கும் முடிவு -
விஜய் தொகுதியில் திமுகவின் வெற்றி முகம்! - யார் இந்த சத்தியவாணி முத்து? -
ராகுல் களத்தில் இறங்கியவுடன் காங்கிரஸுக்கு நல்ல செய்தி! கேரளாவில் மாபெரும் வெற்றி உறுதி! புதிய சர்வே -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
“இன்று இரவுக்குள் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலை ராகுல் காந்தி வெளியிடுவார்"- ஈரோட்டில் சொன்ன ஸ்டாலின் -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
Vijay: உங்கள் விஜய்.. நா வரேன்.. விசிலடிக்க ரெடியா? தவெகவின் தேர்தல் பிரச்சார பாடல் வெளியீடு!












Click it and Unblock the Notifications