Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாம் எப்போ மாற போறோம்? என் உணர்ச்சிகள் கொதிக்கின்றன.. "ஜெய் பீம்" பார்த்துவிட்டு கலங்கிய குமாரசாமி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெய் பீம் படம் காரணமாக தன்னுடைய உணர்ச்சிகள் கொதிப்பு அடைந்ததாகவும், இந்த படம் பல உண்மைகளை தோலுரித்து காட்டியதாகவும் கர்நாடக முன்னாள் முதல்வர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி பார்த்து ரிவ்யூ கொடுத்துள்ளார்.

இயக்குனர் த.செ ஞானவேல் இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி இருக்கும் ஜெய் பீம் படம் அமேசான் பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. கடந்த வருடத்தில் தமிழின் மிக முக்கியமான படமாக ஜெய் பீம் உருவெடுத்தது.

பொய் கேசில் சிறைக்கு செல்லும் ராஜாக்கண்ணுவிற்கு என்ன நடக்கிறது.. என்ற ஒற்றை புள்ளிதான் படத்தின் கதை. இருளர்கள் உள்ளிட்ட பழங்குடி மக்களும், தாழ்த்தப்பட்டவர்களும் எதிர்கொள்ளும் அதிகார அழுத்தம், இன்னல்கள், போலீஸ் டார்ச்சர், சட்ட போராட்டம், உரிமைக்கான குரல் என்று பல விஷயங்களை ஜெய் பீம் அதிரடியாக பேசுகிறது.

 குமாரசாமி

குமாரசாமி

இந்த நிலையில்தான் ஜெய் பீம் படத்தை கர்நாடக முன்னாள் முதல்வர், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி பார்த்து ரிவ்யூ கொடுத்துள்ளார். அதில், நான் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டதால் கடந்த வாரம் வீட்டில் இருந்தேன். அப்போது வீட்டில் புத்தகங்களை படித்துக்கொண்டும், படங்களை பார்த்துக்கொண்டும் இருந்தேன். நான் இரண்டு படங்களை பார்த்தேன். ஒன்று ஜெய் பீம், இன்னொன்று ஜனகன மன. இரண்டு படங்களில் மிகவும் உணர்ச்சிகரமான விஷயங்களை பற்றி பேசி என் இதயத்தை தொட்டது. என் உணர்ச்சிகளை தூண்டியது.

ஜெய் பீம்

ஜெய் பீம்

விசாரணை கைதிகளின் நிலை பற்றிய கசப்பான உண்மைகளை சமீபத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பகிர்ந்தார். ஜெய் பீம் படம் அதை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது. நானும் அதை பற்றித்தான் யோசித்துக்கொண்டு இருக்கிறேன். இந்திய நீதித்துறை தலித் மக்களுக்கும், ஏழைகளுக்கும் தூரத்தில் இருக்கிறதா? குற்றஞ்சாட்டப்பட்ட பணக்காரருக்கு நொடியில் பெயில் கிடைக்கிறது.

 தலைமை நீதிபதி ரமணா

தலைமை நீதிபதி ரமணா

ஆனால் ஏழை மட்டும் சிறை கம்பிகளுக்கு பின் இருக்க வேண்டுமா? ஜெய் பீம் படம் சிறை கம்பிகளுக்கு பின்னால் இருக்கும் கொடூரத்தை பற்றி பேசி உள்ளது. தலைமை நீதிபதியும் இதைத்தான் சொன்னார். ஒரு குற்றஞ்சாட்டப்பட்ட நபரை விசாரணை இன்றி சிறையில் அடைப்பது கேள்விக்குரியது. 6.10 லட்சம் சிறை கைதிகளில் 80 சதவிகிதம் பேர் விசாரணை கைதிகள். விசாரணை முடியாமல், அவர்கள் நடை பிணங்களாக சிறைக்கு பின் உள்ளனர்.

 பழங்குடி

பழங்குடி

2017ல் 121 பழங்குடி மக்கள் சிஆர்பிஎப் வாகனம் மீது தாக்குதல் என்று சட்டீஸ்கரில் கைது செய்யப்பட்டனர். 5 வருடம் இவர்கள் சிறையில் இருந்தனர். இப்போது என்ஐஏ இவர்கள் குற்றவாளி இல்லை என்று கூறி உள்ளது. இவர்கள் அனுபவித்த கஷ்டங்களுக்கு யார் பதில் சொல்வது? இவர்களுக்கு கொடுக்கப்பட உள்ள இழப்பீடு என்ன? ஜெய் பீம் இது போன்ற சம்பவங்கள் மீது வெளிச்சம் போட்டு காட்டி உள்ளது.

சார்ஜ் சீட்

சார்ஜ் சீட்

தவறான சார்ஜ் சீட், தவறான கைதுகள், பெயில் கிடைப்பதில் உள்ள சிக்கல்களை அந்த படம் பேசி உள்ளது. தலைமை நீதிபதியும் இதை பற்றித்தான் பேசி உள்ளார். அவரின் பேச்சை மொத்த நாடு கேட்டது. அப்படி என்றால் எப்போது நாம் மாற போகிறோம். எப்போது நாம் மாற்றங்களை கொண்டு வருவோம். இதற்கான முயற்சிகளை நான் செய்வேன்.

 பெயில் சிக்கல்

பெயில் சிக்கல்

நம்முடைய அரசியலமைப்பு சட்டம் மிக சிறப்பான சட்டங்களை வழங்கி உள்ளது. பணக்காரர் முதல் ஏழை வரை எல்லோருக்கும் பிரச்சனை வரும் போதெல்லாம் அவர்கள் கோர்ட்டைதான் நம்பி இருக்கிறார்கள். ஜெய் பீம் படம் தமிழ்நாட்டில் கடலூரில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. ஜனகன மன படம் இன்றைய அரசியல் நிலையை தோலுரித்து காட்டுகிறது.

Recommended Video

    JAI BHIM ஏற்படுத்திய தாக்கம் | Ameer Speech in Naan Kadavul Illai, Samuthirakani
    பாசாங்குத்தனம்

    பாசாங்குத்தனம்

    இன்றைய அரசியலில் உள்ள பாசாங்குத்தனம், தந்திரம் மற்றும் விபச்சாரம் ஆகியவற்றை பற்றி இந்த படம் பேசுகிறது. அரசியல் வாதிகளில் கைகளில் சிஸ்டம் எப்படி சிக்கி தவிக்கிறது என்பதை இதை காட்டுகிறது. இந்த சிஸ்டத்தை கண்ணாடி போல பிம்பமாக காட்டி இருக்கிறது சினிமா. இரண்டு படங்களின் இயக்குனர்களுக்கும் எங்களுடைய பாராட்டுக்கள், என்று குமாரசாமி தனது ரிவ்யூவில் குறிப்பிட்டுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+