இரவு 9 மணி வரை.. நின்ற ஓபிஎஸ்.. ஸ்டாலினுக்கு அவ்வளவு நெருக்கமாக நின்று.. பேசியது என்ன? பின்னணி
சென்னை: முரசொலி செல்வத்தின் மறைவை அடுத்து நேற்று மாலை 6 மணிக்கு கோபாலபுரம் சென்ற ஓபிஎஸ், முதல்வர் ஸ்டாலினுடம் தனது துயரத்தை பகிர்ந்து கொண்டார். இரவு 9 மணி வரை முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரம் வீட்டிலேயே இருந்தார்
நேற்று ஓபிஎஸ் வந்த போது.. செல்வத்தின் உடல் சென்னைக்கு வந்து சேரவில்லை. ஓபிஎஸ் வந்ததை அடுத்து, செல்வத்தின் உடலை ஏற்றிக்கொண்டுவரும் ஆம்புலன்ஸ் எங்கே வந்து கொண்டிருக்கிறது ? என முதல்வர் ஸ்டாலின் விசாரிக்க, அம்பத்தூரை கடந்து வந்துக்கொண்டிருக்கிறது ; இன்னும் 40 நிமிடத்தில் வந்து விடும் என்று உதயநிதி சொல்லியிருக்கிறார். உதயநிதிதான் இந்த பணிகளை எல்லாம் கவனித்துக்கொண்டார். அதிகாரிகளிடம் செல்வத்தின் உடல் தொடர்பாக அடிப்படை விசாரித்தபடி இருந்தார். இதனை அப்படியே ஓபிஎஸ்சிடம் பகிர்ந்து கொண்டார் முதல்வர் முதல்வர் ஸ்டாலின்.

ஓபிஎஸ் சிடம், கலைஞருக்கும் தனக்கும் முரசொலி மாறன் எப்படி பொது வாழ்க்கைக் கான வழிகாட்டிகளாக இருந்தாரோ, அதேபோல, மாறன் மறைவுக்கு பிறகு அந்த இடத்தை பூர்த்தி செய்தவர் செல்வம் மாமாதான். அப்பாவின் (கலைஞர்) கண் அசைவைப் பார்த்தே முரசொலியில் முடிவுகளை எடுக்கும் திறன் செல்வத்துக்கு இருந்தது.
தலைவரின் (கலைஞர்) மனசாட்சியாக மாறன் இருந்த மாதிரி, எனது மனசாட்சி செல்வம் மாமா தான் என கண் கலங்கியவாறு சொல்லியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அவரை ஆறுதல் படுத்திய ஓபிஎஸ், கோபாலபுரத்திற்கு செல்வத்தின் உடல் வந்ததும் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார் ஓபிஎஸ்.
கண்ணீர் விட்ட முதல்வர் ஸ்டாலின்: முரசொலி செல்வம் உடலை பார்த்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கதறி அழுத சம்பவம் அவரின் குடும்பத்தினரை கலங்க வைத்துள்ளது. முரசொலி செல்வம் உடலை பார்த்து இன்று அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் உடைந்து போய் கண்ணீர்விட்டனர்.
முரசொலி செல்வமின் இறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட போஸ்டில், சிறுவயது முதலே எனக்கு அண்ணனாக - வழிகாட்டியாக, இயக்கப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, நெருக்கடி நேரங்களில் தெளிவான தீர்வுகளை முன்வைத்து, கழகத்துடனான என் வளர்ச்சியில் தோளோடு தோள் நின்றவர், என் பேரன்பிற்குரிய அண்ணன் முரசொலி செல்வம்.
தலைவர் கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்த பிறகு, நான் சாய்வதற்குக் கிடைத்த அந்தக் கடைசித் தோளை - கொள்கைத் தூணை இன்று இழந்து நிற்கிறேன்., என்று கலக்கத்துடன் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில்தான் அவரின் உடலை பார்த்த முதல்வர் ஸ்டாலின் கதறி கண்ணீர்விட்டார்.
இதையடுத்து முதல்வர் ஸ்டாலின் அருகே வந்து ஓபிஎஸ் அவரை தேற்றினார். இரவு 9 மணி வரை முதல்வர் ஸ்டாலின் கோபாலபுரம் வீட்டிலேயே இருந்தார். அதன் பிரகு கிளம்பிச் சென்றார். முதல்வர் ஸ்டாலின் சென்றதும், அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்ட பலரும் கிளம்பி சென்றனர்.
அதேசமயம், இரவு 12 மணி வரை கோபாலபுரத்திலேயே இருந்தார் உதயநிதி. அஞ்சலி செலுத்த வந்தவர்கள் உதயநிதியிடம் துக்கம் பகிர்ந்து சென்றனர். உதயநிதி இருந்ததால், அமைச்சர்கள் சிவசங்கர், சேகர்பாபு, அன்பில் மகேஷ் ஆகியோரும் இரவு 12 வரை இருந்தனர். உதயநிதி கிளம்பியதும் அவர்களும் கிளம்பிச் சென்றனர்.
-
தண்ணீர் பாட்டில் வீசுனாங்க.. ஆனால் இன்னைக்கு! ஓபிஎஸ் சொன்னதுமே ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன் -
தவெக ஆட்சி முடிவில் தமிழக கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும்.. சவால்விட்டு சொன்ன தங்கம் தென்னரசு! -
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
'Sofa Model' தவெக ஆட்சியில் எம்எல்ஏ-க்களை கொள்முதல் செய்றாங்க.. உதயநிதி ஸ்டாலின் நேரடி அட்டாக்! -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
ஆட்டம் போடாதீங்க! சிறுபான்மை மக்களும் நிரந்தரமாக குட்பை சொல்லிடுவாங்க.. திமுகவை எச்சரித்த காங்கிரஸ் -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்! -
தவெகவுக்கு முக்கியத்துவம்?.. மாங்குடியில் ப.சிதம்பரம் செய்த சம்பவம்..அதிருப்தியில் திமுக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications