முடிஞ்சா பண்ணி பாருங்க.. "பாயிண்டை" பிடித்த ஓபிஎஸ்.. வாட்டமாக காரை எடுத்த தம்பிதுரை.. நடந்தது என்ன?
சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை சமாதானம் செய்ய இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடியின் ஆதரவாளர்கள் தீவிரமாக முயன்று வருகிறார்கள்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை மீண்டும் வேண்டும், பொது செயலாளர் பதவி வேண்டும் என்று வலியுறுத்தியும் பல்வேறு நிர்வாகிகள் பேட்டி அளித்து வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்குதான் இந்த பதவியை வழங்க வேண்டும் என்றும் நேரடி ஆதரவு தெரிவித்து பல மாவட்ட செயலாளர்கள் பேட்டி அளித்து வருகிறார்கள். இதையடுத்து இன்றும் ஒற்றை தலைமை தொடர்பாக மீண்டும் ஓபிஎஸ், இபிஎஸ் வீட்டில் தனி தனியாக ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதோடு 6வது நாளாக அதிமுகவில் இது தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடந்து வருகின்றன. ஓபிஎஸ்ஸை சமாதானம் செய்யும் விதமாக எடப்பாடி தரப்பில் இருந்து ஓபிஎஸ் வீட்டிற்கு தொடர்ந்து தூது அனுப்பப்பட்டு வருகிறது.

நேற்று ஆலோசனை
நேற்று எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் இது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாநிலங்களவை எம்.பி தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தீவிரமாக ஆலோசனை செய்தனர். நேற்று இரவு 2 மணி வரை வரை நீடித்த ஆலோசனை பின்னர் இன்று காலையும் நடந்தது. நேற்று இந்த கூட்டத்திற்கு இடையில் செங்கோட்டையன் எடப்பாடியை சந்தித்துவிட்டு அதன்பின் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து இருக்கிறார். எடப்பாடி சார்பாக செங்கோட்டையன் எடப்பாடியிடம் பேசி இருக்கிறார்.

என்ன சொன்னார்?
அதில் உங்களுக்கு பொருளாளர், அவை தலைவர் இரண்டு பொறுப்புகளையும் தருகிறோம். நீங்கள் பொதுச்செயலாளர் பதவி உருவாக ஒத்துழைக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்று செங்கோட்டையன் ஓபிஎஸ்ஸிடம் கூறி இருக்கிறார். ஆனால்.. அதெல்லாம் முடியாது. பொதுச்செயலாளர் என்ற கேள்விக்கே இடமில்லை. அது ஜெயலலிதா இருந்த இடம். யாருக்கும் கொடுக்க கூடாது என்று ஓபிஎஸ் மறுத்துள்ளார்.

தம்பிதுரை
இதே விஷயத்தை முன் வைத்து நேற்று எடப்பாடி சார்பாக ஓபிஎஸ்ஸிடம் தம்பிதுரை எம்பியும் பேசி உள்ளார். அதன்பின்தான் ஓபிஎஸ் சம்மதிக்காத காரணத்தால் நேராக இபிஎஸ் வீட்டிற்கு சென்று இரவு முழுக்க ஆலோசனை செய்துள்ளார் தம்பிதுரை. இதையடுத்து இன்று காலை மீண்டும் தம்பிதுரை எடப்பாடியின் சென்னை வீட்டிற்கு சென்று ஆலோசனை மேற்கொண்டு இருக்கிறார். அதில் ஓபிஎஸ்ஸுக்கு கொடுக்க வேண்டிய ஆபர் குறித்து பேசி இருக்கிறார்கள்.

என்ன ஆபர்
அந்த ஆபர் குறித்து இன்று தம்பிதுரை ஓபிஎஸ்ஸை அவரின் வீட்டிலேயே சந்தித்து பேசி உள்ளார். இன்று காலை ஓபிஎஸ் வீட்டிற்கு போன தம்பிதுரை,.. அவைத்தலைவர், பொருளாளர் இரண்டு பொறுப்பையும் நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் சின்ன மகனுக்கும் கட்சியில் பதவி கொடுக்கலாம். ஒத்துழையுங்கள். மாவட்ட செயலாளர்கள் பலர் எடப்பாடி பக்கம்தான் உள்ளனர். பொதுக்குழு உறுப்பினர்களும் எடப்பாடி பக்கம்தான் இருக்கிறார்கள். மறக்க வேண்டாம்.

தம்பிதுரை என்ன சொன்னார்?
இதுதான் உங்களுக்கு இருக்கும் நல்ல சான்ஸ். ஒத்துழையுங்கள், பொது தீர்மானத்திற்கு அனுமதியுங்கள். இல்லையென்றால் எடப்பாடி தனித்தீர்மானம் கொண்டு வருவார். அதில் வாக்கெடுப்பு நடந்தால் என்ன செய்வீர்கள், என்று கூறி இருக்கிறார் தம்பிதுரை. ஆனால் இதை கொஞ்சமும் ஓபிஎஸ் கேட்டுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. ஒற்றைத்தலைமை குறித்து பொதுக்குழுவில் தனித்தீர்மானம் கொண்டுவந்தால் உண்டு இல்லை என்று செய்துவிடுவேன் என்று ஓபிஎஸ் கூறி இருக்கிறார்.

உண்டு இல்லை
அதோடு தனி தீர்மானம் கொண்டு வந்தால் பொதுக்குழு கூட்டத்தை ஒத்திவைக்க நேரிடும். இப்போதும் நான்தான் ஒருங்கிணைப்பாளர். பொதுக்குழுவில் நீங்கள் தீர்மானம் கொண்டு வந்தாலும் நான்தான் கையெழுத்து போட வேண்டும் என்று, தம்பிதுரையிடம், ஓபிஎஸ் கூறி இருக்கிறாராம். இந்த நிலையில் தம்பிதுரை காரியத்தை சாதிக்க முடியாததால் தலையை தொங்க போட்டுகொண்டு திரும்பி இபிஎஸ் வீட்டிற்கே வந்து தகவலை தெரிவித்துள்ளாராம்.
Recommended Video

1 மணி நேரம்
சுமார் 1 மணி நேரம் பேசியும் தம்பிதுரையால் ஓபிஎஸ்ஸை சமாதானம் செய்ய முடியவில்லையாம். விரைவில் அடுத்த கட்ட சமாதான கூட்டம் நடக்கும் என்கிறார்கள். இன்னொரு பக்கம் ஓபிஎஸ் தனது ஆதரவை அதிகரிக்கும் வகையில், தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்து வருகிறாராம். இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிச்சாமியோ தங்கமணி, வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் மற்றும் ஆர்.பி.உதயகுமார் ஆகியோருடன் சென்னையில் ஆலோசனை செய்து வருகிறார்.












Click it and Unblock the Notifications