லாஸ்ட் சான்ஸ்! ராகுல் காந்தி வழக்கறிஞர் சொன்ன "அந்த பாயிண்ட்".. வழக்கில் நடந்த ட்விஸ்ட்.. பரபர வாதம்
சென்னை: ராகுல்காந்திக்கு எதிரான 2 ஆண்டுகள் தண்டனை இன்று உச்ச நீதிமன்றம் மூலம் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வைத்த வாதம் வழக்கில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஏப்ரல் 13, 2019 அன்று, லோக்சபா பொதுத் தேர்தலுக்கு முன் ராகுல் காந்தி பிரதமர் மோடி குறித்து பேசிய விஷயம் ஒன்று தேசிய அளவில் கவனம் பெற்றது. கர்நாடகா மாநிலம் கோலாரில் நடந்த அரசியல் பேரணியின் போது ராகுல் காந்தி"நிரவ் மோடி, லலித் மோடி அல்லது நரேந்திர மோடி என்று எல்லா திருடர்களும் ஏன் தங்கள் பெயர்களில் மோடியை வைத்திருக்கிறார்கள்? என்று கிண்டலாக பேசினார்.

மோடி பெயரை கிண்டல் செய்யும் விதமாக அவர் பேசியதை மோடி என்ற ஜாதிக்கு எதிராக, பிறப்படுத்தப்பட்ட மக்களுக்கு எதிராக ராகுல் காந்தி பேசியதாக பாஜகவினர் புகார் வைக்க தொடங்கினர். இதன் ஒரு கட்டமாக சூரத் மேற்குப் பகுதியைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் (BJP) எம்எல்ஏவான பூர்ணேஷ் மோடி என்பவர் வழக்கு தொடுத்தார்.
இதனால் ராகுல் காந்திக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது, அவர் மோடி என்ற குடும்பப்பெயரால் காந்தி அனைத்து மக்களையும் அவதூறு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சூரத் கீழமை நீதிமன்றம் அந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை கொடுத்தது. இந்திய தேர்தல் விதிப்படி 2 ஆண்டு தண்டனை பெற்றால் எம்எல்ஏ, எம் பி பதவி நீக்கப்படும். அதன்படி ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த தண்டனையை நீக்க குஜராத் உயர் நீதிமன்றமும் மேல்முறையீட்டில் மறுத்துவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. .
இந்த வழக்கில் இன்று ராகுல்காந்திக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ராகுல்காந்திக்கு எதிரான 2 ஆண்டுகள் தீர்ப்பு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச 2 ஆண்டு சிறை தண்டனை குறித்த விளக்கம் இல்லை, 2 ஆண்டுகளுக்கு பதிலாக ஒரு நாள் குறைவாக தண்டனை விதித்திருந்தாலும் தகுதி நீக்கம் வந்திருக்காது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறி உள்ளது. இதனால் ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
வாதம்: இந்த வழக்கில் ராகுல் காந்தி சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வைத்த வாதம் வழக்கில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அவர் வைத்த வாதத்தில், இதுதான் சட்ட ரீதியாக ராகுல் காந்திக்கு இருக்கும் கடைசி சான்ஸ். அவர் இதன் மூலம் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும். பாராளுமன்றம் செல்ல முடியும். ஏற்கனவே ராகுல் காந்திக்கு எதிராக தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் 66 நாட்கள் கிடப்பில்.
போட்டது இதனால் இரண்டு பாராளுமன்ற கூட்ட தொடருக்கு ராகுல் காந்தியால் செல்ல முடியவில்லை. ராகுல் காந்திக்கு எதிரான தீர்ப்பு வழங்கிவிட்டனர். அவர் குற்றமானவர் என்றும் கூறிவிட்டனர். ஆனால் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.
அவர் ஒரு பெயரை சொன்னதை எதோ 30 கோடி பேருக்கு எதிராக பேசியது போல மாற்றி உள்ளனர். மோடி என்ற பெயர் பலருக்கு உள்ளது. பல ஜாதிக்கு, பல மதத்தில் கூட மோடி என்ற பெயர் உள்ளது. ராகுல் காந்தி மோடி என்ற பெயரில் எந்த ஜாதியையும் அவமதிக்கவில்லை. அவர் குறிப்பிட்ட நபர்களை பற்றி மட்டும்தான் குறிப்பிட்டார்.
இங்கே வழக்கு தொடுத்த புர்னேஷ் மோடியின் உண்மையான பெயரில் மோடி இல்லை. இந்த வழக்கிற்கு முன் அவர் மோடி என்ற பெயரை இணைத்துள்ளார். அவர் மோத் வணிகா சமாஜ் என்று பிரிவை சேர்ந்தவர். அவர் மோடியே கிடையாது. ராகுல் யாரை பற்றி பேசினாரா அவர்கள் யாருமே ராகுலுக்கு எதிராக வழக்கு தொடுக்கவில்லை.
ராகுல் சிலரின் பெயரை குறிப்பிட்டார், ஆனால் அவர்கள் யாருமே ராகுலு எதிராக வழக்கு தொடுக்கவில்லை. ராகுலுக்கு எதிராக வழக்கு தொடுத்தவர்கள் எல்லாம் பாஜக நிர்வாகிகள் மட்டுமே. இதில் ராகுல் காந்திக்கு எதிராக ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று குஜராத் உயர் நீதிமன்றம் கூறி உள்ளது.
13 கிரிமினல் கேஸ்களை அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் அந்த 13 கேஸ்களிலும் ராகுலுக்கு எதிராக இன்னும் தீர்ப்பு வரவில்லை. இந்த கேஸ்கள் எல்லாமே பாஜகவினர் மூலம் போடப்பட்ட வழக்குகள். அதை குஜராத் நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது. ராகுலுக்கு எதிராக எங்குமே குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அப்படி இருக்க அதை எல்லாம் மோடி பெயர் பற்றி வழக்கில் உதாரணமாக பயன்படுத்தி உள்ளனர். இது போன்ற அவதூறு வழக்கில் எல்லாம் 2 ஆண்டு தண்டனை இதற்கு முன் கொடுக்கப்பட்டதே இல்லையே, என்று ராகுல் காந்தி சார்பாக மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதம் வைத்துள்ளார்.
இந்த வாதம் இன்று பெரிய அளவில் கவனிக்கப்பட்ட நிலையில், ராகுல்காந்திக்கு எதிரான தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. ராகுல்காந்திக்கு எதிரான 2 ஆண்டுகள் தீர்ப்பு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது
-
ஒரே நாளில் 4 கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு.. திமுக கூட்டணியில் சீட் ஷேரிங் ஓவர்! -
ஸ்டாலின் சொல்லியும் சீட் தரல.. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தளர்ந்து விட்டது.. கம்யூனிஸ்ட் ஆதங்கம் -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
காங்கிரஸ் போட்டியிடும் 16 தொகுதிகள் அறிவிப்பு.. சிட்டிங் சீட்களில் 2-ஐ விட்டுக் கொடுத்தது காங்! -
திமுக பிடிவாதம் காட்டும் 5 தொகுதிகள்.. 23 தொகுதிகளை அடையாளம் கண்ட காங்கிரஸ்! செல்வப்பெருந்தகை அப்டேட் -
அறிவாலயம் vs சத்தியமூர்த்தி பவன்.. ராகுல் மீது கடும் கோபத்தில் ஸ்டாலின்.. வெடித்தது யுத்தம்? -
காங்கிரசில் 60 ஆண்டு உறுப்பினர்! தவெகவில் 96 வயது மூதாட்டி.. விஜய்யை சந்தித்து கட்சியில் ஐக்கியம் -
கேப்பில் கால் பதிக்கும் பாஜக! கேரளாவில் இடதுசாரிகள் vs காங்கிரஸ் கடும் போட்டி! புதிய சர்வே முடிவுகள் -
திமுக vs காங்கிரஸ்.. 5 தொகுதிகளில் நேரடி போட்டி! பீகார் ஸ்டைலில் புதுவையிலும் நடக்கும் சம்பவம் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன்












Click it and Unblock the Notifications