ஓகே வா? கையை காட்டி ரஜினி கேட்டதும்.. சின்சியராக "எஸ்" சொன்ன உதயநிதி.. விழாவில் பேசியது என்ன?
சென்னை; செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்தும், திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினும் நீண்ட நேரம் பேசி ஆலோசனை செய்தனர்.
சென்னை 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா நேரு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. சர்வதேச தரத்தில் பிரம்மாண்டமாக இந்த விழா நடைபெற்று வருகிறது.
இந்த நீண்ட தொடர் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் நட்சத்திர விடுதியில் நடக்க உள்ளது. இன்று முதல் ஆகஸ்டு மாதம் 10-ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது.

ரஜினிகாந்த்
இந்த தொடக்க விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார். நீண்ட நாட்களுக்கு பின் ரஜினிகாந்த் முதல்முறையாக குடும்பத்துடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இந்த நிகழ்வில் உடன் இருந்தார். பிரதமர் மோடி வருவதற்கு முன்பே நிகழ்விற்கு வந்த நடிகர் ரஜினிகாந்த் முன் வரிசையில் அமர்ந்து இருந்தார். விழா நிகழ்வுகளை பிரமிப்புடன் ரஜினிகாந்த் ரசித்தார்.

செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவில் மேடையில் இன்று லிடியன் பியானோ வாசித்து அசத்தினார். வெளிநாட்டினர் பலர் இவரின் வாசிப்பு திறமையை பார்த்து சிலிர்த்து போனார்கள். ரஜினிகாந்தும் இதை வியந்து பார்த்தார். ஒரு கையில் ஹாரி பாட்டர் மற்றும் மற்றொரு கையில் மிஷன் இம்பாசிபிள் ஆகிய பாடல்களை லிடியன் ஒரே நேரத்தில் வாசித்தார். இதை ரஜினிகாந்த் வியந்து பார்த்தார்.

எம்எல்ஏ
இந்த நிகழ்விற்கு பின்பாக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை பார்த்து ரஜினிகாந்த் எதோ ஒன்று சொன்னார். இவர்கள் இருவரும் நீண்ட நட்பாக பேசிக்கொண்டு இருந்தனர். இடையில் ரஜினிகாந்த் சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு "ஓகேவா" என்று கேட்டார். இதை பார்த்து உதயநிதி ஸ்டாலின் பின்னர்.. கையை அசைத்து எஸ் என்று கூறினார்.
Recommended Video

கமல்ஹாசன்
அதன்பின் மீண்டும் கமல்ஹாசன் குரலில் நிகழ்ச்சி வந்த போதும் இவர்கள் இருவரும் சில நொடிகள் பேசினர். உதயநிதி ஸ்டாலின்.. கையை சூப்பராக இருக்கிறது என்று வைத்துக்கொண்டு சைகை செய்தார். இதற்கு ரஜினிகாந்தும் ஓகே சொல்வது போல சைகை காட்டினார். இவர்கள் நீண்ட நேரம் மேடைக்கு கீழே சீரியஸாக பேசிக்கொண்டு இருந்தது, விழா அரங்கில் கவனம் ஈர்த்தது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications