மாதவிடாய் இருப்பதாக கூறியும்.. விடாத கும்பல்.. அண்ணா பல்கலை. மாணவி பலாத்காரம்.. போலீஸ் சொன்ன தகவல்
சென்னை; சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சென்னை போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
சென்னை போலீசார் அளித்த விளக்கத்தில், அண்ணா பல்கலையில், 2ம் ஆண்டு பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிக்கும் பெண் மாணவி பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கிறார். 24.12.2024 அன்று அவர் எழுத்துப்பூர்வ புகாரை அளித்த நிலையில் வழக்கு பதியப்பட்டு உள்ளது.

23.12.2024 அன்று இரவு 7.45 மணிக்கு தன் காதலனுடன் இருந்தபோது, அண்ணா பல்கலைக்கழக நெடுஞ்சாலை ஆய்வகத்தின் பின்புறம், இரண்டு ஆண்கள் தன் காதலனையும் தன்னையும் திடீரெனத் தாக்கியதாகக் குறிப்பிட்டு உள்ளார்.
இதனால் பயந்து போன காதலன் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அந்த 2 பேர் அந்த மாணவியை தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு மிரட்டி உள்ளார். தனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதாக அந்த பெண் கூறியபோதும், அவருடன் "வேறு வழியாக" உடலுறவு கொள்ளுமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர்.
இது தொடர்பாக விசாரணை செய்யப்பட்டு வருகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட பாலியல் துன்புறுத்தல் பாதுகாப்புக் குழுவால் அவரது குறைகள் விசாரிக்கப்பட்ட நிலையில்.. போலீஸ் வழக்கும் பதியப்பட்டு உள்ளது..
இதனால், மேற்கண்ட புகாரின் அடிப்படையில், AWPS கோட்டூர்புரத்தில் http://Cr.No.3/2024 u/s 63(a), 64(i), 75(I)(ii)(iii) என்ற முகவரியில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். சந்தேக நபர் ஒருவரும் ஏற்கனவே பாதுகாப்பாக வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மோசமான நிலை: தமிழ்நாட்டில் மோசமாகும் சட்ட ஒழுங்கு பிரச்சனைகளுக்கு எடுத்துக்காட்டாக மாறி உள்ளது. தமிழ்நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுவரை இந்த நடவடிக்கையில் கைது எதுவும் செய்யப்படவில்லை.
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது; திமுக ஆட்சியில் பெண்கள் கல்வி நிலையங்கள் மற்றும் பணியிடங்களில் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத அளவிற்கு சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளதற்கு எனது கடும் கண்டனம் என்று எடப்பாடி பழனிசாமி இதற்கு கண்டனம் தெரிவித்து உள்ளார்.
வழக்கு பதிவு: கோட்டூர்புரம் ஜே4 போலீசில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) பிரிவு 64 (பாலியல் வன்கொடுமையான் தண்டனை) கீழ் டிசம்பர் 24 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் (ஏசிபி) பாரதிராஜன் மற்றும் அவரது குழுவினர் விசாரித்து வருகின்றனர். போலீஸ் அதிகாரிகள் குழு வளாகத்தில் விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிகளை அடையாளம் காண சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகிறது.
இதுவரை இந்த நடவடிக்கையில் கைது எதுவும் செய்யப்படவில்லை. முக்கியமாக அந்த 2 பேர் யார் என்று அடையாளம் காணப்படவில்லை. போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications