Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோர்ட் வரை போன சைவம்- வைணவ பேச்சு! பொன்முடி மீது அமைச்சரவை கூட்டத்திலும் கோபத்தை காட்டிய ஸ்டாலின்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமைச்சர் பொன்முடியின் பேச்சால் முதல்வர் ஸ்டாலின் கடும் அதிருப்தியிலும் கோபத்திலும் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் வரும் ஏப்ரல் 29ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

mk stalin tamilnadu cabinet

இந்த நிலையில் தமிழக அரசின் பட்ஜெட், புதிய திட்ட அறிவிப்புகளுக்கு ஒப்புதல் வழங்க தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம், அரை மணி நேரம் நீடித்தது. அப்போது தமிழக அரசின் புதிய விண்வெளி தொழில் கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பட்ஜெட்

அது போல் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்த நிலையில் இவையெல்லாம் இருக்க அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஒரு எச்சரிக்கையையும் விடுத்ததாக சொல்லப்படுகிறது.

அமைச்சர்

அதாவது பொதுவெளியில் அமைச்சர் பெருமக்கள் பேசும் போது கவனத்துடன் பேச வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் எதையும் செய்ய வேண்டாம், எதையும் பேச வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

முதல்வர் அதிருப்தி

முதல்வரின் இந்த அதிருப்திக்கு பின்னால் இருப்பது பொன்முடி என்பது அனைவருக்கும் தெரியும். அண்மையில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்ட ஒரு விழாவில் விலை மாதர்கள் குறித்தும் சைவம், வைணவம் என்ற இந்து மத பிரிவிற்கான குறியீட்டை மிகவும் ஆபாசமாக விவரித்து பேசியிருந்தார்.

கொந்தளிப்பு

இது பல்வேறு தரப்பினர் கொந்தளித்தனர். மேலும் ஒரு அமைச்சர், பொதுவெளியில் பேசும் போது இப்படிப்பட்ட கருத்தையா பேசுவது, அதிலும் பெண்கள் இருக்கும் கூட்டத்தில் எதை பேச வேண்டும் என்ற சபை நாகரீகம் கூட அவருக்கு தெரியாதா என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது.

நெருக்கடி

இதனால் ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு பொன்முடியின் கட்சி பதவியை பறித்தார். எனினும் அவரது அமைச்சர் பதவியையும் பறிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில் நேற்றைய தினம் பொன்முடிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஆனந்த் வெங்கடேஷ்

அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், திடீரென பொன்முடி பேசிய வீடியோவை திரையிட செய்தார். மேலும் அவர் கூறுகையில், இந்தப் பேச்சு முழுக்க முழுக்க துரதிஷ்டவசமானது என்றும் அமைச்சர் பொறுப்பை வகிப்பவர் பொறுப்புடன் பேச வேண்டாமா என்றும் கேள்வி எழுப்பினார்.

பெண்கள் மீது அவதூறு

அவரது பேச்சு பெண்களை சைவ வைணவ மதங்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாகவும், வெறுப்பு பேச்சு தொடர்பாக புகார் அளித்தாலும் இல்லாவிட்டாலும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதன்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது என சுட்டிக் காட்டினார். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தமிழக காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

பொன்முடிக்கு சிக்கல்

இதனால் பொன்முடிக்கு சிக்கல் எழ கூடும் என தெரிகிறது. ஏற்கெனவே சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த வழக்கும் அவரை நெருக்கி வருகிறது. அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் , மீண்டும் திமுகவே ஆட்சியை தொடர, அரசுக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் ஸ்டாலின் செயல்பட நினைக்கிறார்.

கொந்தளித்த முதல்வர்

ஆனால் குறிப்பிட்ட சில அமைச்சர்கள் இது போன்று பேசுவது முதல்வருக்கு கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் அமைச்சரவைக் கூட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+