உறுதியா? எடப்பாடி தரப்பிடம் கேட்ட நீதிபதி.. நிம்மதி பெருமூச்சு விட்ட ஓபிஎஸ்! ஆனா.. அங்கேதான் சிக்கலே
சென்னை: அதிமுக வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு எடப்பாடி பழனிசாமிக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் வழக்கு விசாரணைக்கு வந்தது.
சுமார் 20 நிமிடம் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது.

எடப்பாடி பழனிசாமி
இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு இரண்டு விதமான உத்தரவுகளை உச்ச நீதிமன்றம் விதித்து உள்ளது. முதல் உத்தரவு, அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான ஓபிஎஸ் மனு மீது பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதாவது பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க வேண்டும். பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே கூட்ட வேண்டும் என்று வாதம் வைத்தது. இதற்கு எடப்பாடி பழனிசாமி அடுத்த அமர்வில் பதில் அளிக்க வேண்டும்.

ஓ பன்னீர்செல்வம்
இன்னொரு பக்கம் பொதுக்குழு வழக்கில் அடுத்த விசாரணை அல்லது உத்தரவு வரும் வரை தற்போது நிலை நீடிக்க வேண்டும். பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த கூடாது. இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்ததும் உடனே.. எடப்பாடியிடம் இது உறுதியா என்று கேட்டனர். அதாவது தேர்தல் நடத்த கூடாது என்று உறுதி அளிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதற்கு நீதிபதிகளிடம்.. கண்டிப்பாக தேர்தல் நடத்த மாட்டோம் என்று எடப்பாடி தரப்பு உறுதி அளித்தது.

நிம்மதி
இதன் காரணமாக ஓ பன்னீர்செல்வத்திற்கு தற்காலிக நிம்மதி கிடைத்து உள்ளது. அதாவது ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. அதில் இருந்து 6 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடப்பதாக முடிவு செய்யப்பட்டது. ஜனவரி 11ம் தேதிக்குள் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் எடப்பாடி வேகத்தை பார்த்தால் அவர் பொதுச்செயலாளர் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் வாய்ப்புகள் உள்ளன.முன்கூட்டியே பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தினால் தொண்டர்கள் தன் பக்கம் என்று எடப்பாடி வாதம் வைக்க முடியும்.

ஆனால் என்ன?
பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமின்றி தொண்டர்களும் என் பக்கம்தான். தொண்டர்கள் ஆதரவோடுதான் நான் பொதுச்செயலாளர் ஆகி உள்ளேன் என்று வாதம் வைக்க முடியும். தேர்தல் மூலம் பொதுச்செயலாளர் ஆகும் பட்சத்தில் எடப்பாடியை தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்க வேண்டும். இது எடப்பாடிக்கு ஆதரவாக முடியும். அதன்பின் கட்சியை மீட்க முடியாத நிலைக்கு ஓ பன்னீர்செல்வம் செல்வார். இதனால்தான் பொதுச்செயலாளர் தேர்தலை எப்படியாவது ஓ பன்னீர்செல்வம் தடுக்க வேண்டும்.

சிக்கல்
இந்த நிலையில்தான் கோர்ட்டே பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த இடைக்கால தடை விதித்து உள்ளது. இது ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக உத்தரவுதான். அடுத்த உத்தரவு வரும் வரை தேர்தல் நடக்காது என்று அவர் நிம்மதியாக இருக்கலாம். ஆனால் இது இடைக்கால தடைதான். இதில் முழுமையான தீர்ப்பு வந்த பின்பே அதிமுகவில் யாருடைய கை ஓங்கும் என்று தெரியும். இப்போதைக்கு எடப்பாடி பழனிசாமியால் தேர்தலை நடத்த முடியாது என்பதே ஓ பன்னீர்செல்வத்திற்கு வந்திருக்கும் ஒரே குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications