ஆப்சென்டான உதயநிதி! தனி தனியாக 15 நிமிடம் பேசிய ஸ்டாலின்! நினைப்பு இங்கதான் இருக்கும்! மிரட்டிட்டாரே
சென்னை: தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. உதயநிதி அமைச்சரான தற்கு பிறகு அவரில்லாமல் நடக்கும் முதல் அமைச்சரவைக் கூட்டம் இது தான். வெளிநாட்டில் இருந்ததால் அவர் வரவில்லை. ஏற்கனவே போடப்பட்ட பயணத் திட்டம் என்பதால் அதை ரத்து செய்துவிட்டு திரும்ப முடியவில்லை.
இதனை முதல்வர் ஸ்டாலினிடம் உதயநிதி தெரிவித்து விட்டார் என்கிறார்கள். இந்த அமைச்சரவை கூட்டத்தில் தொழில் துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட 44 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானத் திட்டங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டம் முடிந்ததும் அமைச்சர்களிடம் தனி தனியாக 15 நிமிடம் மட்டுமே பேசியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அமைச்சரவை மாற்றம், துணை முதல்வர் பதவி உள்ளிட்டவைகள் அமைச்சரவைக் கூட்டத்தில் ஸ்டாலின் ஆலோசனை செய்யவிருக்கிறார் என்று பரவலாக சொல்லப்பட்டது. ஆனால், இது குறித்த எந்த விவாதமும் அங்கு நடக்கவில்லை.
தனது வெளிநாடு பயணத் திட்டம் பற்றி மட்டுமே முதல்வர் வெளிப்படுத்தினார். அதுவும் அட்வைஸ் பண்ணுகிற தொணிதான் இருந்தது. எங்கிருந்தாலும் எனது சிந்தனையும் நினைப்பும் உங்களைச் சுற்றியும் தமிழகத்திலும் தான் இருக்கும் என உணர்வுபூர்வமாகச் சொன்னார் என்கிறார்கள் நாம் பேசிய அமைச்சர்கள் தரப்பில்.
அரசியல் மாற்றம்: வரும் நாட்களில் தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாக பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக ஆளும் திமுகவில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழ்நாட்டில் விரைவில் அமைச்சரவை மாற்றம் நடக்க உள்ளது. 2 அமைச்சர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட உள்ளார்களாம். அதேபோல் 1 புதிய அமைச்சர் களமிறக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தமிழ்நாடு முதலவர் ஸ்டாலின் ஆகஸ்ட் 27ம் தேதி வெளிநாடு செல்ல உள்ளார். இதற்காக மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து திமுகவில் அதிரடி மாற்றங்கள் நடக்க உள்ளதாக கூறப்படுகிறது.
முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லும் நிலையில், விரைவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராகும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வருகின்றன. தமிழகத்திற்கான வெளிநாட்டு தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக இந்த பயணத்தை அவர் மேற்கொள்வதாகச் சொல்லப்பட்டது.
அமைச்சரவை மாற்றம்: இதற்கு முன்பாக தமிழ்நாட்டில் விரைவில் புதிய அமைச்சரவை பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சில அமைச்சர்களுக்கான இலாக்காக்கள் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனியர்கள் பலர் அமலாக்கத்துறை, வருமான வரித்துறை விசாரணை வளையத்தில் இருப்பதால்.. முதல்வர் ஸ்டாலின் மொத்தமாக ஆட்டத்தை கலைத்து ஆடும் திட்டத்தில் இருக்கிறாராம். இதனால் 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து சில வாரங்களில் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் மாற்றங்கள் இருக்கும் என்று கூறப்படுகிறது. முக்கியமாக அமைச்சரவையில் பெரிய அளவில் மாற்றங்கள் இருக்கும் என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications