இது காகித பேப்பர் அல்ல! தமிழ்நாடு புது உயரம் தொடப்போகிறது! சென்னை திரும்பிய முதல்வர் -என்ன சொன்னார்?
சென்னை: இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்த முதல்வர் ஸ்டாலின், தனது அமீரக பயணம் குறித்து விரிவாக பேசினார்.
Recommended Video
முதல்வர் ஸ்டாலின் நான்கு நாள் அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பி உள்ளார். கடந்த வியாழக்கிழமை மாலை துபாய் புறப்பட்டவர் இன்று அதிகாலை சென்னைக்கு திரும்பினார். துபாயில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
முதலீட்டாளர் அமைப்பு உறுப்பினர்கள் & முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். அதோடு துபாய், அபுதாபி வாழ் தமிழர்களை முதல்வர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.

ஸ்டாலின் பேட்டி
இதையடுத்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின் தனது பேட்டியில், தமிழ்நாடு முதல்வராக பதவி ஏற்றபின் முதல்முறை வெளிநாடு பயணம் மேற்கொண்டு உள்ளேன். தமிழ்நாட்டிற்கு முதலீட்டை ஈர்க்கும் வகையில் இந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளேன். இரும்பு தளவாட துறையில் உள்ள நோபல் ஸ்டில்ஸ் நிறுவனத்தோடு 1100 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஜவுளித்துறை சார்ந்த வைட் ஹவுஸ் நிறுவனத்தோடு 500 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தம் போடப்பட்டது. மருத்துவத்துறை சார்ந்த ஆஸ்டர் டிஎம் மற்றும் ஹெல்த் கேர் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

முதலீடு எவ்வளவு
சரக்கு துறை சார்ந்த ஷெராப் நிறுவனத்துடன் 500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது போக லூலூ நிறுவனத்துடன் 3500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. மொத்தமாக 6 நிறுவனங்களுடன் 6100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம், 14700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக போகிறது. இந்த பயணம் மகத்தான வெற்றி பயணமாக அமைந்துள்ளது என்பதை உங்களிடம் மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். துபாய், அபுதாபி சென்று அமைச்சர்கள், தொழிலதிபர்களை சந்தித்தேன்.

ஸ்டாலின் பேச்சு
தமிழ்நாட்டில் மின் உற்பத்தி நிலையங்கள், சிறு துறைமுகங்கள் ஆகியவற்றால் முதலீடு செய்ய அந்த நிறுவனங்கள் முன் வந்துள்ளன. தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஏதுவான சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. 6 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. வரும் நாட்களும் மேலும் மேலும் ஒப்பந்தங்கள் கையெழுத்து ஆகும். அவர்களின் வருகை தமிழ்நாட்டிற்கு மேலும் பயன் அளிக்கும். துபாய் பயணம் தமிழ்நாடு வளர்ச்சிக்கு ஆக்கபூர்வமான அடித்தளம் அமைக்கும்.

ஒப்பந்தம் துபாய்
தமிழ்நாடு தொழில்துறை இப்போது செயல்படுகிறது. இந்த துறை மூலம் தமிழ்நாட்டிற்கு மேலும் ஒப்பந்தங்கள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுக ஆட்சியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காகித கப்பல்கள் மட்டுமே. கடந்த முறை வெறும் ஒப்பந்தங்கள் மட்டுமே போடப்பட்டது. இப்போது போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள், குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். போடப்பட்ட ஒப்பந்தங்களை செயல்பாட்டிற்கு கொண்டு வருவோம்.

துபாய் தமிழர்கள்
இதன் மூலம் வேலைவாய்ப்பை உருவாக்குவோம். இது பற்றி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன். தமிழ்நாடு திரும்பியதும் இங்கு இருக்கும் தொழில்துறை அதிகாரிகளுக்கு இதை பற்றி உத்தரவிட்டேன். அமீரக தமிழர்கள் எனக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தார்கள். எதிர்பார்க்க முடியாத அளவிற்கு சிறப்பான வரவேற்பை கொடுத்தனர். இது அமீரகமா, தமிழ்நாடா என்ற வியக்கும் அளவிற்கு இந்த பயணம் இருந்தது. தமிழர்களுக்கு நன்றி.

எதிர்க்கட்சிகள்
என்னுடைய வெளிநாடு பயணம் பற்றி விமர்சனம் வைக்கிறார்கள். அவர்கள் எதிர்க்கட்சிகள். அப்படித்தான் பேசுவார்கள். வேறு வெளிநாடுகளுக்கு செல்வதை பற்றியெல்லாம் யோசிக்கவில்லை. தமிழ்நாட்டிற்கு தேவைப்பட்டால், புதிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்றால் வெளிநாடு செல்வோம். இப்போது மொத்தமாக 6 நிறுவனங்களுடன் 6100 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இது பெரிய சாதனை, என்று முதல்வர் ஸ்டாலின் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
-
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications