ஒரு பாயிண்ட் சொன்னாலும்.. முக்கியமான பாயிண்ட்.. ஸ்டாலின் மீட்டிங்கில் ரேவந்த் ரெட்டி சொன்ன வார்த்தை

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று சென்னையில் நடக்கும் கூட்டு நடவடிக்கை குழு மீட்டிங்கில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறிய கருத்துக்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன.

நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக தலைவரும், முதல்வருமான மு.க ஸ்டாலின் தலைமையில், கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் இன்று சென்னையில் நடந்து வருகிறது. பல்வேறு மொழிகள், பண்பாடுகள், உடைகள், வழிபாட்டு நம்பிக்கைகள் உள்ளிட்டவை கொண்டதுதான் இந்தியா. இத்தகைய மாநிலங்கள் சுயாட்சி தன்மையுடன் செயல்பட்டால்தான் இந்தியாவின் உண்மையான கூட்டாட்சி உருவாக முடியும். இந்திய ஜனநாயகத்தை காக்க ஒன்று கூடியுள்ளோம் என்று கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

தெலுங்கானா முதல்வர் பேச்சு

இன்று சென்னையில் நடக்கும் கூட்டு நடவடிக்கை குழு மீட்டிங்கில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறிய கருத்துக்கள் பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளன.

What did Telangana CM Revanth Reddy say in the All-Party Delimitation Meeting

அவர் தனது பேச்சில், நமது மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனைதான் தொகுதி மறுவரையறை. இதற்காக கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். பாஜக நம்மை பேசவே அனுமதிப்பதில்லை; அவர்கள் நினைப்பதை முடிவாக எடுக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக எங்கள் மாநில சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளேன். தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்த்தில் அடுத்த கூட்டம் ஐதராபாத்தில் நடைபெறும். இந்திரா காந்தி ஆட்சி காலத்திலும் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டது. ஆனால் தொகுதிகளின் எண்ணிக்கையில் மாற்றம் செய்யப்படவில்லை.

எனது முதல் கருத்து மக்களவை தொகுதியை அதிகரிக்க வேண்டாம். தொகுதி மறுசீரமைப்பால் இந்தியா அரசியல் குரலை இழக்கும். மக்கள் தொகை அடிப்படையிலான வரம்பை நாங்கள் ஏற்க மாட்டோம், சிறப்பாக செயல்பட்டதற்கான தண்டனையே தொகுதி மறுவரையறை. கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். டெல்லியில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என்று சென்னை கிண்டியில் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசி உள்ளார்.

நவீன் பட்நாயக் உரை

இந்த நிகழ்வில், தமிழகம், பஞ்சாப் மக்கள் மட்டுமல்ல, மக்கள்தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களும் பாதிக்கும். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை தீர்மானிக்க கூடாது. மாநில உரிமைகளை பறிக்கும் செயல்களிலையே மத்திய பாஜக அரசு ஈடுபட்டு வருகிறது. தென் மாநிலங்கள் மக்கள்தொகையை கட்டுப்படுத்தாமல் இருந்திருந்தால் பெரும் பிரச்சினை ஏற்பட்டிருக்கும். மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களை ஒன்றிய அரசு தண்டிக்கிறது. இந்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தை ஏற்பாடு செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி என்று நவீன் பட்நாயக் கூறினார்.

ஸ்டாலின் கருத்து

தொகுதி மறுவரையறை தொடர்பாக அரசியல் மற்றும் சட்ட வல்லுனர்கள் குழு அமைக்க தீர்மானத்தை முன்மொழிந்தார் முதல்வர் ஸ்டாலின், என்று தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி உள்ளார்.

சென்னையில் நடைபெறும் நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒற்றுமை உணர்வோடு அனைவரும் ஒன்றுபட்டு போராடினால்தான் வெற்றி பெற முடியும். தமிழ்நாடு 8 முதல் 12 தொகுதிகளை இழக்கும் அபாயம் உள்ளது; இது வெறும் எண்ணிக்கை பற்றியதல்ல, நம் அதிகாரத்தை பற்றியது.

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள்; நியாயமான தொகுதி மறுசீரமைப்பே எங்கள் கோரிக்கை; எந்த சூழ்நிலையிலும் பிரதிநிதித்துவம் குறையக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் நமது பிரதிநிதித்துவம் குறையக் கூடாது, குறைய விடவும் கூடாது. இந்திய ஜனநாயகத்தையும் கூட்டாட்சியையும் காப்பதற்கான முன்னெடுப்பு இது; தொகுதிகள் குறைந்தால் நிதி பெறுவதிலும் சிரமம் ஏற்படும். மாநில உரிமைகளை பறிக்கும் கட்சியாக பாஜக எப்போதும் இருந்து வருகிறது.

இந்தியக் கூட்டாட்சியைக் காக்கும் வரலாற்றின் மிக மிக முக்கியமான நாள்; மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் நம்மைப் போன்ற மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+