சென்னை கல்லூரி மாணவியின் 'ஒரு நிமிட' வீடியோ கால்.. உல்லாசத்துக்கு ஆசைப்பட்ட இளைஞருக்கு சம்பவம்
சென்னை: சென்னை எர்ணாவூர் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர் சமூக வலைதளம் மூலம் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 24 வயது இளைஞருடன் நட்பாக பழகி உள்ளார். அப்போது மாணவியிடம் நெருங்கி பழகிய அந்த இளைஞர், வீடியோ காலில் ஆடையில்லாமல் தோன்றி பேசுமாறு கூறியிருக்கிறார். அப்படி பேசியதை ஸ்கீரின் ரெக்கார்ட் செய்த அந்த இளைஞர், அவரை உல்லாசமாக இருக்குமாறு மிரட்டியுள்ளார். அதன்பிறகு நடந்ததை பார்ப்போம்.
சமூக வலைதளங்களில் தெரியாத நபர்களுடன் பழகும் பெண்களை உல்லாச வலையில் வீழ்த்த பல வேலைகளை செய்கிறார்கள்.உருகி உருகி பேசி காதலிப்பதாக கூறி காதல் வலையில் வீழ்த்துகிறார்கள். அதனை உண்மை என்று நம்பி, உல்லாச வலையில் சிக்கி விடுகிறார்கள். திருமணத்திற்கு முன்பே சிலர் எல்லை மீறுகிறார்கள். சிலர் உடன்படாத பட்சத்தில் மிரட்டும் சம்பவங்கள் நடக்கிறது. அப்படித்தான் சென்னையில் நடந்துள்ளது.

சென்னை எர்ணாவூர் பகுதியை சேர்ந்த 20 வயதாகும் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த 2 மாதங்களாக கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தாலுகா மாவிடந்தல் பகுதியை சேர்ந்த 24 வயதாகும் தமீம் கான் ( என்ற வாலிபருடன் விளையாட்டாக 'ஸ்னாப் ஷாட்' செல்போன் செயலி மூலம் அறிமுகம் ஆகியிருக்கிறார்.
முதலில் இருவரும் நட்பாக பழகியிருக்கிறார்கள். பின்னர் அந்த பெண்ணை தன் காதல் வலையில் அந்த இளைஞர் வீழ்த்தினாராம். பின்னர் தமீம் இளம்பெண்ணை வீடியோ காலில் ஆடையை கழற்றி விட்டு பேச வற்புறுத்தினாராம். இதை நம்பிய அந்த கல்லூரி மாணவியும் வீடியோ காலில் ஆடை இல்லாமல் தோன்றியவாறு அந்த வாலிபரிடம் பேசியிருக்கிறார். உடனே அதை தமீம்கான் செல் போனில் 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து வைத்தாராம்.
இதைத்தொடர்ந்து அந்தரங்க புகைப்படத்தை கல்லூரி மாணவிக்கு அனுப்பியதுடன், 'என்னுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும். மறுத்தால் சமூக வலைத்தளங்களில் உன்னுடைய அந்தரங்க புகைப்படத்தை வெளியிட்டு பரப்பி விடுவேன்' என்று கூறி மிரட்டல் விடுத்தாராம். இதைக்கண்டு ஆடிப்போன அந்த மாணவி, 'உன்னை நம்பினேன். இப்படி செய்து விட்டாயே'. 'தயவு செய்து என்னை விட்டுவிடு. என் பெற்றோருக்கு தெரிந்தால் அவர்கள் உயிரையே விட்டுவிடுவார்கள் . என் வாழ்க்கை சீரழிந்து விடும்' என்று கூறி கெஞ்சினாராம்.
ஆனாலும் ஏற்காத தமீம்கான் கல்லூரி மாணவியின் அந்தரங்க புகைப்படத்தை தனது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்து உள்ளார். அவரது நண்பர்களும் அந்த புகைப்படத்தை ரசித்தது மட்டுமல்லாமல், கல்லூரி மாணவிக்கு செல்போனில் தொடர்பு கொண்டு அசிங்கமாக பேசி கொடுத்து வந்துள்ளனர்.
இதையடுத்து அந்த மாணவி எண்ணூர் மகளிர் போலீசாரிடம் கல்லூரி மாணவி புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.இதையடுத்து மாணவியை உல்லாசத்துக்கு வருமாறு மிரட்டிய புகாரில் இளைஞர் தமீம் கானை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சமூக வலைத்தளங்களில் நட்பு தேடுவோர், கடைசியில் இப்படி சிக்கலில் சிக்குவது அடிக்கடி நடக்கிறது.
-
அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை! கொஞ்சம் கூட பொறுப்பே இல்லையே! லதா ரஜினிகாந்த் வேதனை! -
சென்னை டாஸ்மாக் கடையில் ‘ஏ.ஐ.’ மேஜிக்! குப்பையாகும் பாட்டில்களை கொடுத்தால் கொட்டும் சில்லறை! -
சென்னை அம்பத்தூரில் பரபரப்பு.. 2 சிறுமிகள் கடத்தப்பட்ட வழக்கில் வாலிபர்கள் இருவர் அதிரடி கைது -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை!












Click it and Unblock the Notifications