செல்போனில் காதலி சொன்ன வார்த்தை.. தாம்பரத்தில் அதிகாலை 2 மணிக்கு.. காதலன் செய்த முட்டாள்தனம்
சென்னை: சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் கோகுல் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஆருண் பாஷா என்பவர் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மாடியில் அமர்ந்தபடி காதலியுடன் அதிகாலை 2 மணிக்கு செல்போனில் பேசிக்கொண்டிருந்தாராம். ஆனால் காதலியுடன் அப்போது ஏற்பட்ட மனஸ்தாபத்தில் வாழ்க்கையில் எடுக்கவே கூடாத தவறான முடிவெடுத்திருக்கிறார். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
காதல் விவகாரங்களில் காதலன் அல்லது காதலி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது என்பது இன்றைக்கு சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. இப்படியான நிலையில் அதனை பேசி தீர்க்க விரும்பாமல், விட்டுக்கொடுத்து செல்ல விரும்பாமல் சிலர் தவறான முடிவெடுக்கிறார்கள். தாம்பரத்திலும் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 22 வயதாகும் ஆருண் பாஷா என்பவர் பார்மசியில் டிப்ளமோ முடித்துள்ளார். இவருக்கு டாக்டர் ஆக வேண்டும் என்று ஆசை உள்ளது. இதற்காக 'நீட்' தேர்வுக்காக தயாராகி வந்தார். இதற்காக அவர் தனது அண்ணனுடன், சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் கோகுல் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி படித்து வந்திருக்கிறார்.
நேற்று அதிகாலை 2 மணி அளவில் ஆருண் பாஷா, தனது காதலியுடன் செல்போனில் பேசிக்கொண்டிருந்தாக கூறப்படுகிறது. திடீரென அவர், தனது கை மணிக்கட்டு பகுதியில் அறுத்துக்கொண்டு, அந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்துவிட்டாராம். இதில் படுகாயமடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக தாம்பரத்தில் உள்ள மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஆருண்பாஷா பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்துவந்த தாம்பரம் போலீசார், ஆருண் பாஷா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். வாழ்க்கையை முடித்துக் கொண்ட ஆருண்பாஷா, ஏற்கனவே கோவையில் உள்ள தனியார் கல்வி நிறுவனத்தில் 'நீட்' தேர்வுக்காக படித்தாராம். அப்போது இளம்பெண் ஒருவருடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் 2 வருடமாக காதலித்தார்களாம்.
இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை ஆருண் பாஷாவுடன் அவரது காதலி செல்போனில் பேசி சண்டை வந்ததாம். இதனால் விரக்தி அடைந்த அவர், கையை அறுத்துக்கொண்டதுடன், மாடியில் இருந்து குதித்து உயிரைவிட விட்டது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தாம்பரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்கொலை எண்ணம் இருந்தால் அல்லது மன அழுத்தத்தில் இருந்தால், உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டிய இலவச உதவி எண்கள்
Tele MANAS (தேசிய உதவி எண்)14416 : மத்திய அரசின் 24/7 மனநல உதவி மற்றும் ஆலோசனை எண். (1-800-891-4416 என்றும் அழைக்கலாம்).
மாநில உதவி எண் (104) 104 தமிழ்நாடு அரசின் சுகாதார உதவி சேவை (இதுவும் மனநல ஆதரவு வழங்குகிறது).
ஸ்னேகா (Sneha) 044-24640050 சென்னையில் உள்ள தற்கொலை தடுப்பு உதவி அமைப்பு.
AASRA +91-22-27546669 தற்கொலை தடுப்பு மற்றும் ஆலோசனைக்கான 24/7 சேவை.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications