சென்னை செங்குன்றத்தில் ஐஸ்கிரீமுக்காக கோபப்பட்ட மாமியார் சித்ரா.. உடனே அவசரப்பட்ட மருமகள் அனுப்பிரியா
சென்னை: சென்னை செங்குன்றம் அடுத்த எம்.ஏ.நகரை சேர்ந்தவர் அஸ்வின் ராஜ் என்பவர் அனுப்பிரியா என்பதை காதலித்து திருமணம் செய்தார். பெற்றோர்களின் சம்மதத்துடன் கடந்த 3 வருடம் முன்பு இருவருக்கும் திருமணம் நடந்தது. அனுப்பிரியா பிரிட்ஜில் ஐஸ்கிரீமை அண்மையில் வைத்துள்ளார். அப்போது அது கீழே கொட்டியிருக்கிறது. பார்த்து வைக்க மாட்டியா என்று மாமியார் கண்டித்தாராம். இதனால் விரக்தி அடைந்து அனுப்பிரியா செய்த செயல், மாமியார், கணவர் உள்பட அனைவரையும் ஆடிப்போக வைத்துள்ளது.
காதல் திருமணம் செய்தவர்களாக இருந்தாலும் சரி, பெற்றோர் பார்த்து திருமணம் செய்து வைத்தவர்களாக இருந்தாலும் சரி, முதலில் சந்திக்கும் பிரச்சனை என்றால் அது மாமியார் தான். இரு பெண்களிடையே ஏற்படும் ஈகோ தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக உள்ளது. இதில் யார் யாரை அடக்கி ஆள்கிறார்கள்.. யார் விட்டுக்கொடுத்து போகிறார்கள் என்பதே பிரச்சனை எப்படி சுமூகமாக முடிகிறது என்பதை தீர்மானிக்கிறது.

அதேநேரம் சின்ன சின்ன பிரச்சனைகளுக்கு எல்லாம் தம்பதிகளுக்கு இடையே ஈகோ உருவாகும் இந்த காலத்தில், மாமியாரை அனுசரித்து போகவோ அல்லது மருமகளை மாமியார் அனுசரித்து போகவோ தயாராக இல்லை.. இருவரும் ஒரே வீட்டில் இருந்தாலே அல்லது அவர்கள் ஒற்றுமையாக இருந்தாலே பரிசு கொடுக்கும் அளவிற்கு தான் சமூகத்தில் நிலைமை இருக்கிறது. அதேநேரம் மாமியார் எழுப்பும் சிறிய பிரச்சனைகளுக்கு எல்லாம் 2 கே கிட்ஸ் பெண்கள் தவறான முடிவெடுக்கிறார்கள்.. சென்னை செங்குன்றத்தில் நடந்த சம்பவம் பற்றி பார்ப்போம்.
சென்னை செங்குன்றம் அடுத்த எம்.ஏ.நகரை சேர்ந்த அஸ்வின் ராஜ் என்பவர் 27 வயதாகும் அனுப்பிரியா என்பவரை காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்திருக்கிறார். இந்த தம்பதிக்கு ஒரு வயதில் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் அனுப்பிரியா வீட்டில் உள்ள பிரிட்ஜில் ஐஸ்கிரீமை வைத்திருக்கிறார். பிரிட்ஜில் வைத்த ஐஸ்கிரீம் கீழே கொட்டியதாக கூறப்படுகிறது.
இதை பார்த்த அவரது மாமியார் சித்ரா, கவனமாக வைக்க மாட்டாயா? என கோபமாக கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாம். மாமியாருடன் ஏற்பட்ட தகராறால் விரக்தி அடைந்த அனுப்பிரியா வீட்டிற்குள் சென்றுள்ளார். அங்குள்ள உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு வாழ்க்கையை முடித்துக் கொண்டார். இதைகண்டுஆடிப்போன மாமியார் சித்ரா மற்றும் குடும்பத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு சென்ற செங்குன்றம் போலீசார் உயிரிழந்த அனுப்பிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஸ்கிரீம் கொட்டிய தகராறில் இளம்பெண் வாழ்க்கையை முடித்து கொண்ட சம்பவம் செங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -2464000 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)












Click it and Unblock the Notifications