"தமிழ்நாடா? தமிழகமா?" பிரஸ் மீட்டில் வந்த கேள்வி.. யோசிக்காமல் டக்கென பதிலளித்த லோகேஷ் கனகராஜ்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அல்லது தமிழகம் என்பது குறித்துத் தொடர்ந்து விவாதம் நடந்து வருகிறது. இந்தச் சூழலில் மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இது குறித்து தனது கருத்துகளைக் கூறியுள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு என்பதைக் காட்டிலும் தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று கூறியது மிகப் பெரிய அளவில் பேசுபொருள் ஆனது.
திமுக உள்ளிட்ட பல கட்சிகள் ஆளுநரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தச் சூழலில் மாஸ்டர், விக்ரம் உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இது குறித்து தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆளுநர் ரவி
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் ரவி, "இந்தியாவிலேயே தமிழகத்தில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. இங்கு தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் உள்ளன. இதை நாம் அனைவரும் சேர்ந்து ஒழிக்க வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. அமெரிக்காவைப் போலத் தேசங்களால் இணைந்து இல்லை.. தமிழர்கள் தங்களைத் திராவிடர்களாக உணர்கிறார்கள். தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்'' என்று கூறியதே விவாதத்திற்குக் காரணமாக அமைந்தது.

கோவை நிகழ்ச்சி
இந்த சூழலில் கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இது பற்றி கருத்து கூறியுள்ளார். தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு கோவை வருமானவரித்துறை சார்பில் துடியலூர் பகுதியில் இளம் தொழில் முனைவோர்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருமான வரித்துறை உயர் அதிகாரிகள் பூபால் ரெட்டி, சந்தனா, ரங்கராஜ் ஆகியோர் கலந்து கொண்டு இளம் தொழில் முனைவோர்களுக்கான விருதுகளை வழங்கினர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ்
இந்நிகழ்ச்சியில் கோவை திருப்பூர் ஈரோடு சேலம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 17 பேருக்கு இளம் தொழில் முனைவோர் விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திரைப்பட இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கும் விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மேடையில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நம்முடைய வரி எங்கே செல்கிறது எனத் தெரிந்தால் மகிழ்ச்சியுடன் வரிப்பணத்தைச் செலுத்தலாம் என்பதைக் கோரிக்கையாகவே விடுப்பதாகத் தெரிவித்தார்.

தளபதி 67
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாம் செலுத்தும் வரி எங்குச் செல்கிறது எனத் தெரிந்தால் அதைச் சுமையாகப் பார்க்காமல் மகிழ்ச்சியாகச் செலுத்துவோம்.. எனவே அது குறித்து விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.. வாரிசு படம் வெளியாவதை ஒட்டி "தளபதி 67" அப்டேட் ஏதும் கொடுக்காமல் இருந்தோம்.. தற்போது படம் வெளியாகிவிட்டது, இன்னும் 10 நாட்களில் "தளபதி 67" அப்டேட் எதிர்பார்க்கலாம்.. ஏற்கனவே படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடா அல்லது தமிழகமா
சினிமாவில் யார் நம்பர்.1 என்று எழும் பேச்சுகள் குறித்துக் கேட்கிறீர்கள்.. சினிமாவை பொறுத்தவரை அனைத்து படங்களும் ஓட வேண்டும், அனைத்து ரசிகர்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பது எனது கருத்து" என்றார். தொடர்ந்து தமிழ்நாடு தமிழகம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று அழைப்பதையே விரும்புகிறேன்" என்று பளிச்சென அவர் பதிலளித்தார்.

உயிர் போகும் அளவுக்குக் கொண்டாட்டம் வேண்டாம்
சமீபத்தில் துணிவு கொண்டாட்டத்தில் ரசிகர் ஒருவர் உயிரிழந்த நிலையில் அது குறித்த கேள்விக்கு, "படம் வெளியாகும் கொண்டாட்டங்களில் ஏற்படும் இறப்புகளைத் தவிர்க்கத் தான் வேண்டும்.. ரசிகர்களும் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும்.. உயிரை விடும் அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை.. இது பொழுதுபோக்கு என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.. சந்தோஷமாகச் சென்று படம் பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் என நினைக்கிறேன்.. உயிரைக் கொடுக்கும் அளவிற்கு ஏதும் இல்லை.. உயிரிழக்கும் அளவிற்கான கொண்டாட்டம் தேவையில்லை" என்று அட்வைஸ் வழங்கினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications