பச்சை துரோகம்.. குருமூர்த்தியை விடுங்க.. எடப்பாடி தோள்தொட்டு "தம்பி" என்றாரே சசிகலா: மருது அழகுராஜ்
ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ் ஒன் இந்தியாவுக்கு பேட்டி தந்துள்ளார்
சென்னை: எடப்பாடி பழனிசாமி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து திமுக அரசு ஏன் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? திமுகவுடன் நெருக்கமாக இருப்பது எடப்பாடிதான் தவிர, ஓபிஎஸ் கிடையாது என்று அதிமுகவின் மூத்த தலைவர் மருது அழகுராஜ் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் ஆதரவாளரும் மூத்த தலைவருமான மருது அழகுராஜ் நம் ஒன் இந்தியாவுக்கு சிறப்பு பேட்டி ஒன்றை தந்துள்ளார்..
அப்போது, அதிமுக விவகாரத்தில் பாஜக தலையிட வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பு ஏன் நினைக்கிறது? என்ற கேள்வியை முன்வைத்தோம்.. அதற்கு மருது அழகுராஜ் அளித்த பதில்கள்தான் இவை:

அட்வைஸ்
"அதிமுக விவகாரத்தில் பாஜக பஞ்சாயத்து செய்ய வேண்டும் என்று நினைப்பது உண்மைதான்.. காரணம், அதிமுக நலனில் அக்கறை இருப்பவர்கள் பாஜக.. அதனால்தான் ஓபிஎஸ், அதிமுக விவகாரத்தில் பாஜகவின் தலையீட்டை விரும்புகிறார்.. அன்று துணை முதல்வராக பதவியை ஏற்றுக்கொள்ள சொல்லி பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக, ஓபிஎஸ்ஸே வெளிப்படையாக சொல்லி உள்ளார்.. அவர்கள் சொல்லி துணைமுதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டதாலும், நாலரை வருட ஆட்சி காலத்தின்போது, எடப்பாடியுடன் தன்னை இணைந்து போக சொன்னதாலும், அனைத்திற்குமே ஓபிஎஸ் கட்டுப்பட்டார்..

வைகோ
அன்று நீங்கள் சொன்னதற்கெல்லாம் கட்டுப்பட்டு நடந்தேனே, இன்று கட்சியில் பிளவு உள்ளதால், மூத்த சகோதரர்கள் போல் உங்கள் அறிவுரைகள் தேவை என்று பாஜக தலையீட்டை ஓபிஎஸ் விரும்புகிறார்.. எப்போதுமே வலுவான தலைமை உருவாகும்வரை, இதுபோல் பிறர் தயவில் இருக்க வேண்டிய நிலைமை யாருக்கானாலும் வரத்தான் செய்யும்.. ஏன் அன்று வைகோவுக்கும் திமுகவுக்கும் பிளவு வந்தபோது, திமுகவைதான் மறைமுமாக காங்கிரஸ் ஆதரித்தது.. 1989-ல் ஜானகி - ஜெயலலிதா அணிக்கு பிரச்சனை வந்தபோது, ராஜீவ்காந்தி ஜெயலலிதாவை ஆதரிக்கவில்லையா?

அர்ஜெண்ட்
விரைவில் எம்பி தேர்தல் வரப்போகிறது.. அதனால் அதிமுக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற அவசியமும், அவசரமும் பாஜகவுக்கு உள்ளது.. அதனால் எதிர்பார்ப்பு உள்ள கட்சியிடம், அதிமுகவின் நலனுக்காக, பிளவை நீக்கி ஒன்றுபடுத்துங்கள், எடப்பாடி தரப்புக்கு உரிய அறிவுரையை சொல்லுங்கள் என்று பாஜகவிடம் நாங்கள் கேட்பதில் எந்தவிதமான தவறும் இருப்பதாக எனக்கு இல்லை.. வெளிப்படையாக எதிர்ப்பது போல் நடித்துக் கொண்டு, உள்ளுக்குள் அடிமைப்பட்டுக் கிடப்பதைவிட, உண்மைகள் என்ன என்பது வெளிப்படையாக சொல்லி நடந்து கொள்வதில், ஓபிஎஸ் இப்போதுவரை சரியாகவே இருக்கிறார்.

குருமூர்த்தி
குருமூர்த்தி என்ன சொல்றார், "அதிமுக தொடர்ந்து இதே போல் இருந்தால் அது சின்ன கட்சியாக மாறிவிடும். அதிமுகவின் அடையாளமாக எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே இருந்தால் அதிமுக சின்னக்கட்சி ஆக மாறிவிடும்" என்கிறார்.. இதுதான் யதார்த்தம்.. ஓபிஎஸ் மூலம் கட்சியை ஒன்றுபடுத்த பாஜக முயற்சித்து கொண்டிருக்கிறது.. தமிழகத்தில் ஒரு பெரிய சீட் வெற்றியை பெற வேண்டும் என்ற பாஜகவுக்கு சுயநலம் இருக்கிறது.. அதனால்தான் அறுவடை செய்யலாம் என்று பாஜக கனவு கண்டது.. அதை எடப்பாடி நொறுக்கிவிட்டார்.. அதனால்தான் ஒற்றுமைக்கு முயற்சிக்கிறார்கள்..

தோள் தொட்டு
அதற்கும் எடப்பாடி ஒப்புக்கொள்ளாவிட்டால், சசிகலாவை சிறைக்கு அனுப்பி, தினகரனை திகாருக்கு அனுப்பி, ஆட்சியும், கட்சியும் இங்கே எப்படி ஒப்படைக்கப்பட்டதோ, அதுபோல் எடப்பாடியை சிறைக்கு அனுப்பிவிட்டு, அதிமுகவின் பிரிவுகளை ஒன்றுபடுத்தக்கூட பாஜக முயற்சிக்கலாம்.. அரசியலில் எதுவும் சாத்தியம்.. சசிகலா காலில் விழவே இல்லை என்று பொன்னையன் சொல்கிறாரே, அதுபோல் எடப்பாடி பழனிசாமி இதுவரை சொன்னாரா? எத்தனையோ விஷயங்களை மறுக்கிறாரே, சசிகலா காலில் விழுந்ததை மறுத்துள்ளாரா? எனக்கு தெரிந்து சசிகலா ஒருவரின் தோளில் தொட்டு தட்டிக்கொடுத்து, அருமை தம்பி என்று சொன்னது எடப்பாடியைதான்..

தண்ணீர்பாட்டில்
3 முறை முதல்வராக இருந்தவர், மூத்தவர், 71 வயது பெரியவர், பொதுக்குழுவுக்கு வரும்போது, அடியாட்களையும், ரவுடிகளையும் அடைத்து வைத்துக் கொண்டு, தண்ணீர்பாட்டில்களை வீசி, தாயை ஏசி அசிங்கம் செய்தீர்களே... அதை ஓரக்கண்ணில் ரசித்தீர்களே.. இதுவா தலைமைப்பண்பு? பெறுவதற்கு ஆசை இருக்கும்போது, அதற்கேற்ப பக்குவமும் இருக்க வேண்டும்.. இன்றைக்கு வரை ஓபிஎஸ்ஸுடம் இருந்து ஒரு தடித்த வார்த்தை வந்துள்ளதா? யார் பச்சோந்தி? அம்மாவுக்குதான் நிரந்தர இருக்கை என்று சொல்லிவிட்டு, 10 நாளில் மாறிய பச்சோந்தி யார்? பதவி கொடுத்த சசிகலாவை நாய் என்று சொன்ன பச்சோந்தி யார்? ஆர்கே நகரில் தொப்பி போட்டுக்கொண்டு, தினகரனுக்கு ஓட்டுச்சேகரித்துவிட்டு, தினகரனுக்கும் அதிமுகவுக்கும் என்ன சம்பந்தம் என்று மதுரையில் நின்று பேசிய பச்சோந்தி யார்?" என்றார்.
-
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications