மீண்டும் அண்ணாமலை கிளப்பிய மேட்டர்.. அமித்ஷா டேபிளில் ‘ஃபைல்’ இதுக்காகதான் வெய்ட்டிங்! ப்ரியன் பளிச்
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீண்டும் அதிமுக கூட்டணி குறித்து பரபரப்பாகப் பேசி இருக்கும் நிலையில், பாஜக தலைமை அண்ணாமலைக்கு இந்த விவகாரத்தில் ஸ்ட்ரிக்ட்டான ஆர்டரை போட்டிருக்கிறது, கர்நாடகா தேர்தல் வரை தான் கெடு என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
அதிமுக கூட்டணி தொடர்பாக அண்ணாமலை பேசியது சர்ச்சைக்குள்ளான நிலையில், அவரை டெல்லிக்கு அழைத்துப் பேசியது பாஜக தலைமை. இதைத்தொடர்ந்து அமித் ஷாவே, தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணி என்பதை உறுதி செய்தார்.
இந்நிலையில், அண்ணாமலை தேர்தல் சீட் ஒதுக்கப்பட்ட பிறகு தான் கூட்டணி உறுதிப்படுத்தப்படும். அது வரை எதையும் உறுதியாக கூற முடியாது. கூட்டணியில் இருக்கிறோம் என அமித்ஷா கூறினாரே தவிர, கூட்டணியை உறுதி செய்யவில்லை எனத் தெரிவித்தார்.
அண்ணாமலையின் இந்தப் பேச்சு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில் இதுகுறித்து ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.

சேஃப்டி
மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் பேசுகையில், "அதிமுக - பாஜக கூட்டணி மாறுவதற்கு வாய்ப்பில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் இருந்தாலும் இந்தக் கூட்டணி இப்போதே உறுதியானதுதான். 2 கட்சிகளும் ஒருவருக்கொருவர் இணைந்திருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது. அதிமுகவைப் பொறுத்தவரை பாஜக ஒரு பாதுகாப்பான கூட்டணி கட்சியாக இருக்கிறது. பாஜகவுக்கு அதிமுகவின் ஓட்டு வங்கி தேவையாக இருக்கிறது. அமித் ஷாவே சொன்ன பிறகு வேறு யார் மறுத்துப் பேச முடியும்? கடைசி நேரத்தில் கூட சீட் ஷேரிங் பிரச்சனைகள் எல்லாம் வந்தாலும் கூட அதையெல்லாம் தீர்த்து விடுவார்கள். பலமான திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்றால் அவர்கள் ஒன்றாக இருக்கவே விரும்புவார்கள்.

பாமக - திமுக
பாமக, திமுக கூட்டணியில் சேர்வதற்கு விரும்ப வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், பாமகவை திமுக அணியில் சேர்ப்பதற்கு ஸ்டாலின் விரும்பமாட்டார். 2019 முதல் பாமக இல்லாமல் தான் ஸ்டாலின் வெற்றி பெற்று வருகிறார். பாமகவை சேர்த்தால் பட்டியலின மக்கள் மற்றும் வன்னியர் அல்லாதோர் வாக்குகள் கிடைப்பதில் மத்திய மாவட்டங்களில் சிக்கல் ஏற்படும். அதனால், தற்போது இருக்கும் கூட்டணியே கம்ஃபர்டபிளாக இருப்பதால், திமுக பாமகவை சேர்க்க வாய்ப்பில்லை. 2024-ஐ பொறுத்தவரை பாஜக கூட்டணியில் பாமக தொடரவே வாய்ப்புகள் அதிகம். 2026ல் வேண்டுமானால் பாமகவின் நிலை மாறலாம்.

உண்மையில்
எந்தவொரு தேசியக் கட்சியிலும் கூட்டணியை முடிவு செய்வது தேசிய தலைமை தான். தேசிய தலைமை சொல்வதைத்தான் மாநில தலைமை கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கும். வெளியே பார்க்கும்போது தமிழ்நாட்டில் பாஜக வளர்ந்திருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால், பாஜகவில் இருந்து விலகிய ஐடி விங் நிர்வாகி சிடிஆர் நிர்மல் குமார், 2019ல் இருந்ததில் கட்சி 20% தான் இருக்கிறது எனக் குற்றம்சாட்டியுள்ளார். அண்ணாமலை மீது வார் ரூம், ஆடியோ, வீடியோ, கட்சி தலைவர்கள் உளவு பார்க்கப்படுவது, மூத்த தலைவர்களை மதிக்காதது, மோசடி நபர்களுடன் தொடர்பு போன்ற பல புகார்கள் உள்ளன.
அமித் ஷா டேபிளில்
அண்ணாமலை பற்றிய பெரிய புகார் பட்டியல் அமித் ஷாவின் டேபிளில் இருக்கிறது. 2024 தேர்தலில் அதிமுகவுடன் தான் கூட்டணி என்பதை தேசிய தலைமை அண்ணாமலையை அழைத்து உறுதியாகச் சொல்லிவிட்டது. நீங்கள் அதிமுக உடனான கூட்டணியை சுமூகமாக எடுத்துச் செல்ல முடியும் என்றால் நீங்கள் மாநில தலைவராக இருங்கள், இல்லையென்றால் வேறு பொறுப்பிற்குச் சென்றுவிடுங்கள், உங்கள் விருப்பம், ஆனால், கூட்டணி கட்சியை டிஸ்டர்ப் செய்யும் வேலைகளில் ஈடுபடாதீர்கள் என்று சொல்லிவிட்டார்கள்.

தலைமை விரும்பாது
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்காகத்தான் பாஜக தலைமை தாமதிக்கிறது. கர்நாடகாவில் தேர்தல் பொறுப்பாளராக இருக்கும் சமயத்தில், பதவியில் இருந்து தூக்குவது சரியாக இருக்காது என்பதுதான் பாஜகவின் நிலைப்பாடு. அண்ணாமலை தன் இமேஜை பில்டப் செய்கிறார் என தலைமைக்கு புகார் போயிருக்கிறது. அண்ணாமலை பாஜகவுக்கு ஓட்டு வாங்கித் தரப்போவதில்லை. மோடியின் முகமும், கீழ்மட்டத்தில் கட்சித் தொண்டர்களின் உழைப்பும் தான் ஓட்டு வாங்கித் தரப்போகிறது. அதனால், கட்சியின் பெயரை டேமேஜ் செய்யும் அண்ணாமலையை தக்கவைத்துக்கொள்ள பாஜக விரும்பாது." எனக் கூறியுள்ளார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications