பொதுக்குழு கூடியது எப்படி? நீதிபதி கேட்ட கேள்வி! பாயிண்டை பிடித்த ஓபிஎஸ்.. கோர்ட்டில் என்ன நடக்கிறது
சென்னை: அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு முக்கிய வாதங்களை வைத்து வருகிறது.
கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு மாற்றியது.
இதையடுத்து கடந்த வாரம் இந்த வழக்கு உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருஷ்ணன் முன் பட்டியலிடப்பட்டது. ஆனால் தனி நீதிபதி கிருஷ்ணன் முன் வழக்கை பட்டியலிட கூடாது என்று ஓபிஎஸ் தரப்பு தலைமை நீதிபதி பண்டாரியிடம் மனு கொடுத்தது. பிறகு அதற்கு மன்னிப்பும் கேட்டது.

நீதிபதி கேள்வி
இதையடுத்து பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயசந்திரன் முன் இன்று பட்டியலிடப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடங்கியதும் நீதிபதி முதலில் கேள்வி எழுப்பினார். அதில்
நீதிபதி கேள்வி: பொதுக்குழு எப்படி கூடியது. பொதுக்குழு விதிகளின்படி கூடியதா? பொதுக்குழு கூடிய அன்று என்னென்ன விதிகளின் படி கூட்டம் நடத்தப்பட்டது. எல்லா விதிகளும் முறையாக பின்பற்றப்பட்டதா என்று கேள்வி எழுப்பினார்.

வாதம்
ஓபிஎஸ் தரப்பு: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர்தான் பொதுக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பளார் பதவிகள் தொண்டர்கள் மூலம் தேர்வு செய்யப்படும் பதவிகள். இதற்காக அதிமுக தேர்தல் விதிகளில் மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இதற்காக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எடப்பாடி தரப்பு: ஆனால் இந்த பதவிகள் இன்னும் பொதுக்குழுவில் அங்கீகரிக்கப்படவில்லை. பொதுக்குழுவில் பதவிகள் அங்கீகரிக்கப்படாத காரணத்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகின்றன.

யார் கூட்டுவது?
நீதிபதி கேள்வி: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லாதபட்சத்தில் பொதுக்குழுவை யார் கூட்ட முடியும்?
ஓபிஎஸ் தரப்பு: பொதுக்குழுவை தலைமை கழக செயலாளர் மற்றும் பொருளாளர் கூட்ட முடியும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லாதபட்சத்தில் பொதுக்குழுவை தலைமை கழக நிர்வாகி கூட்ட முடியும். ஆனால் பொதுக்குழுவில் பதவிகள் அங்கீகரிக்கப்படாத காரணத்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகின்றன என்று வாதம் வைக்க முடியாது.

வாதம் வைக்க முடியாது
ஏனென்றால் பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு தேர்தல் முடிவுகளுக்கும் இன்னும் பொதுக்குழு ஒப்புதல் அளிக்கவில்லை.
அப்படி பார்த்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டுமின்றி மொத்தமாக பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிகளும் காலாவதியாகிவிடும். பொதுக்குழுவே செல்லாதாகிவிடும் என்று வாதம் வைத்தது.
அதாவது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை பொதுக்குழு அங்கீகரிக்காத மாதிரி பொதுக்குழு உறுப்பினர்களின் தேர்தலையும் பொதுக்குழு அங்கீகரிக்கவில்லை.

ஓபிஎஸ் கூடுதல் வாதம்
அதனால் பொதுக்குழு உறுப்பினர்களும் பதவியை இழக்கிறார்கள் என்று ஓபிஎஸ் தரப்பு வாதத்தில் குறிப்பிட்டுள்ளது. அதோடு ஓபிஎஸ் வைத்த கூடுதல் வாதத்தில்.. இந்த பொதுக்குழு கூடியதே சட்ட விரோதமானது. விதியை பின்பற்றாமல் பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுக்குழுவில் விதியை பின்பற்றாமல் இருக்கிறதா என்று ஆய்வு செய்து வருகிறோம். ஒருவேளை பொதுக்குழுவை விதிகளை மீறி கூட்டப்பட்டு இருந்தால் அதற்கு ஏற்றபடி தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் கூறியது.
-
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications