"மெசேஜ்".. கதர்களை பதற வைத்த ராகுல் காந்தி.. "இது"தான் காரணமா.. கூல் திமுக.. நொறுங்கும் பாஜக கணக்கு
ராகுல்காந்தியின் ட்வீட் முக்கிய மெசேஜை தொண்டர்களுக்கு தெரிவித்துள்ளது
சென்னை: ராஜீவ்காந்தியின் நினைவுநாளையொட்டி, ராகுல்காந்தி பதிவிட்டுள்ள ட்வீட் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது... என்ன காரணம்?
பேரறிவாளனை முதல்வர் ஸ்டாலின் கட்டிப்பிடித்து தோளில் தட்டி கொடுத்ததால், காங்கிரஸ் கட்சி மென்று விழுங்கி கொண்டிருக்கிறது.. கூட்டணிக்கு உள்ளே நட்பையும், வெளியே எதிர்ப்பையும் வெளிப்படுத்தி வருகிறது.. கூட்டணி கட்சியாக இருந்தாலும் ராஜீவ் கொலையை நியாயப்படுத்துவது போல் இந்த நிகழ்வுகள் இருப்பதாக காங்கிரஸ் தொண்டர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்..
பதவிக்காக அலையும் தலைவர்களே கூட்டணியை உதறிவிட்டு வெளியே வாருங்கள் என்ற முழக்கமும் சோஷியல் மீடியாடிவில் வெடித்து கிளம்பி வருகிறது.. இந்த விவகாரத்தில் தலைவர்கள் அனைவரும் மவுனம் காத்து வருகிறார்கள். ஆனால் இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் தொண்டர்களும் கடுமையான ஆத்திரத்தில் இருக்கிறார்கள்.

செல்வபெருந்தகை
"கொலை வழக்கில் வெளியே வந்தவரை கொண்டாடுபவர்கள் தங்கள் குடும்பங்களில் இப்படி ஒரு சம்பவம் நடந்து இருந்தால் கொண்டாடுவார்களா?... முன்னாள் பிரதமரை கொன்றவரே 31 வருடங்களில் விடுதலை ஆகலாம் என்றிருக்கும் போது, சாமானியர்களை கொன்றால் சில மணி நேரங்களிலேயே கூட வெளியே வர முடியும் என்ற நம்பிக்கை அதிகரிக்காதா? கொலை குற்றங்கள் அதிகரிக்காதா? இனிவரும் காலங்களில் கொடுங்குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு முன் உதாரணமாகி விடாதா?" என்று சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வ பெருந்தகை கேட்கும் கேள்விகளில் நியாயம் இருக்கவே செய்கிறது என்கிறார்கள் பலர்.

நியாயமா?
அதேபோல, தமிழர்கள் என்பதால் மட்டுமே பேரறிவாளனை விடுதலை செய்துவிட முடியுமா? மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஏன் இவர்களை விடுதலை செய்யவில்லை அண்ணாமலை கேட்கும் கேள்வியும் நியாயம் என்கிறார்கள் பலர்... அடுத்ததாக, ஒவ்வொருவராக ராஜினாமா செய்ய ஆரம்பித்துள்ளனர்.. தருமபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவி.சிற்றரசு தன்னுடைய பதவியை ராஜினமா செய்து, அந்த கடிதத்தையும் மாநில தலைமைக்கு அனுப்பி வைத்துவிட்டார்..

ஸ்டாலின்
அத்துடன், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்றும் மாநிலம் முழுவதும் குரல்கள் வெடிக்க ஆரம்பித்துவிட்டன.. இதன்விளைவு, காங்கிரஸ் கட்சி உச்சக்கட்ட குழப்பத்திலும், பதற்றத்திலும், தர்மசங்கடத்திலும் உள்ளது.. என்ன முடிவு எடுப்பது என்று தெரியாமல், முதல்கட்ட தலைவர்கள் விழிபிதுங்கி உள்ளனர்.. இப்படிப்பட்ட சூழலில்தான், இன்றைய தினம் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31வது நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது.. இன்றைய தினம் ராகுல்காந்தி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்..

மன்னிப்பு
"எனது தந்தை தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவராக இருந்தார், அவருடைய கொள்கைகள் நவீன இந்தியாவை வடிவமைக்க உதவியது.. அற்புதமான தந்தை அவர்.. ஒரு இரக்கமுள்ள மற்றும் கனிவான மனிதர், எனக்கும் பிரியங்காவுக்கும் ஒரு அற்புதமான தந்தை.. அவர் மன்னிப்பு மற்றும் பச்சாதாபத்தின் மதிப்பைக் கற்றுக் கொடுத்தார்... நான் அவரை மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.. தந்தையின் நினைவுநாளில், மகனின் நெஞ்சை பிழியும் உணர்வு வரிகள் என்று மட்டுமே இவைகளை எடுத்து கொள்ள முடியாது.. பேரறிவாளன் விடுதலையை காங்கிரஸ் கட்சியினர் எதிர்த்து வரும் நிலையில் ராகுல் பதிவிட்ட வார்த்தைகள் வலிமை நிறைந்தவை.. ஆழப்பொருள் பொதிந்தவை.

கொலையாளிகள்
கொலையாளிகளை பிரியங்காகாந்தி, ஏற்கனவே வேலூர் ஜெயிலில் போய் நேரில் சந்தித்து பேசியபோதே, அந்த குடும்பத்தினரின் வன்மமும், கொந்தளிப்பும் குறைந்துவிட்டதாகவே பார்க்கப்பட்டது.. படுகோரமாக தன் தந்தையை கொன்ற கொலையாளிகளை, வேறு யாரும் இப்படி சென்று நேரில் சந்தித்ததாக வரலாறு இல்லை.. இதற்கு இன்னொரு உதாரணமும் சொல்லலாம்.. கடந்த 2018-ல் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ராகுல்காந்தி பயணம் மேற்கொண்டார்.

சிங்கப்பூர்
அப்போது சிங்கப்பூரில் மாணவர்களின் ஒரு கேள்வி ராகுல்காந்தி பதிலளித்தார்.. "என்னுடைய அப்பா படுகொலை செய்யப்பட்டதால், நானும் என்னுடைய சகோதரியும் பல வருடங்களாக மிகுந்த வேதனையுடன் இருந்தோம்.. அந்த நிகழ்வு தொடர்பான கோபமும் எங்களுக்கு இருந்தது.. ஆனால், பிற்காலத்தில் எங்கள் அப்பாவை கொன்றவர்களை நாங்கள் இருவரும் முழுமையாக மன்னித்துவிட்டோம்" என்றார்.. ராகுல் இப்படி சொல்வார் என்று அந்த அரங்கில் யாருமே எதிர்பார்க்கவில்லை.. கரவொலி எழுப்பி ராகுலுக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
அடுத்தநாளே, ராகுலின் இந்த பதில் குறித்து நம்முடைய, அப்போதைய முதல்வர் எடப்பாடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.. "அது அவரது கனிவான குணம்.. ஆனால், சட்டம் என்ன சொல்கிறதோ அதன்படி நடப்போம்" என்றார்.. இதே கேள்வியை புதுச்சேரி நாராயணசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.. அதற்கு அவர், குற்றவாளிகளை ராகுல்காந்தி மன்னித்துவிட்டதாக கூறியிருப்பது அவரது பெருந்தன்மையை காட்டுகிறது.. ஆனால், நீதிமன்றம்தான் அதற்கான முறையான தீர்ப்பை வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்..

ராகுல் காந்தி
அன்று ராகுல், பிரியங்காவுக்கு இருந்த மன்னிக்கும் மனோபாவமும், பெருந்தன்மையும் தான் இன்றைக்கும் அவர்களுக்கு உள்ளது என்பதே ராகுலின் இன்றைய ட்வீட் சொல்லும் மெசேஜ் ஆகும்.. திமுக கூட்டணியை விட்டு விலகுவதும், காங்கிரஸ் கட்சியில் இருந்து ராஜினாமா சம்பவங்களும், அக்கட்சியை மேலும் பலவீனமாக்கும் என்பது உண்மையே.. அதுமட்டுமல்ல, எம்பி தேர்தல் நெருங்கும் சூழலில், இந்த முறை தமிழகத்தில் போட்டியிட ராகுல்காந்தி திட்டமிட்டு வரும் நிலையில், கட்சிக்குள் இப்படியெல்லாம் அதிரடி மாற்றங்கள் நடந்து கொண்டிருப்பது, வருத்தத்தை தந்தாலும், இதெல்லாம் பாஜகவுக்கு சந்தோஷத்தை தந்து கொண்டிருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

மன்னித்தல்
அரசியல் என்பதையும் தாண்டி, மனிதாபிமானம் என்ற ரீதியில்தான் ராகுலின் மெசேஜ் இன்று பார்க்கப்படுகிறது.. முன்னாள் பிரதமர் கொலை வழக்கில் தண்டனை பெற்றவருக்கு மரண தண்டனை கிடையாது என்பது காங்கிரஸ்காரர்களுக்கும், கணிசமான மக்களுக்கும் ஏமாற்றம் அளித்திருக்க கூடும் என்பதை, அவர்களது கருத்துக்களில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், 30 வருட தண்டனை என்பது ஏறத்தாழ, ஒரு மனிதனின் பாதி ஆயுட்காலம் ஆகும்.. அளவுக்கு அதிகமான தண்டனையை அனுபவித்ததால் மட்டுமே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்களே தவிர, அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதால் கிடையாது... அதனால்தான், மன்னித்தலும், மறத்தலும் மனித சமுதாயத்துக்கு இன்றியமையாததாக உள்ளது.. காங்கிரஸ்காரர்களுக்கு ராகுல்காந்தி இன்றைய தினம் தந்துள்ள மெசேஜூம் இதுதான்..!
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications