2 பேருக்கும் அடிதடி! "இதுக்குத்தான்" அமைதியா இருக்கோம்! உடைத்த உதயநிதி! அப்போ எடப்பாடி டீம் சொன்னது?
சென்னை: அதிமுகவில் கடுமையான உட்கட்சி மோதல் நிலவி வரும் நிலையில் திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் இதை பற்றி முதல்முறை மௌனம் கலைத்து இருக்கிறார்.
சென்னையில் உள்ள பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் நேற்று தயாளு அம்மாள் தொண்டு நிறுவனம் சார்பாக உடன் பிறப்பே எங்கள் உயிர்ச்சொல் முக்கியமான நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில்.. பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
பலருக்கு லேப்டாப், கல்வி உதவித்ததோகை வழங்கப்பட்டன. அதேபோல் சிலருக்கு இலவச ஆட்டோவும் வழங்கப்பட்டது. இந்த நலத்திட்ட உதவிகளை திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ வழங்கினர்.
அமைச்சர் சேகர் பாபுவும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்.

உதயநிதி ஸ்டாலின்
இந்த நிகழ்வில் அரசியல் ரீதியாக பல்வேறு விமர்சனங்களை உதயநிதி ஸ்டாலின் வைத்தார். முக்கியமாக அதிமுக பற்றிய விமர்சனங்களையும் உதயநிதி ஸ்டாலின் வைத்தார். அதில், இன்று திமுக ஆட்சியில் இருக்கிறது. ஆட்சி அமைத்து 1 வருடம் 3 மாதம் ஆகிவிட்டது. வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். தலைவர் கட்சியில் தீவிரமாக பணிகளை வருகிறார்.

வாக்குறுதிகள்
50 சதவிகிதத்திற்கும் அதிகமாக வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம், இந்தியாவிலேயே சிறந்த முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஆட்சி நிலையாக சென்று கொண்டு இருக்கிறது. எதிர்பக்கம் அதிமுக எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதிமுக ஒன்றாக இருக்கிறதா? இரண்டாக இருக்கிறதா? மூன்றாக இருக்கிறதா? என்று தெரியவில்லை. அவர்கள் உண்மையில் இருக்கிறார்களா இல்லையா என்பதே தெரியவில்லை.

மோசமான நிலை
அந்த அளவிற்கு மோசமான நிலை உள்ளது. ஒரு பக்கம் ஒருவர் அறிக்கை விடுகிறார்.. பொதுக்குழுவை நடத்துவேன் என்று கூறுகிறார். நான் சொல்வது எல்லோருக்கும் புரியும் என்று நினைக்கிறேன். இன்னொரு பக்கம் இன்னொருவர் போட்டி பொதுக்குழு நடத்துவேன் என்று கூறுகிறார். இப்படி இவர்கள் மாறி மாறி அடித்துக்கொள்கிறார்கள். இரண்டு பேருக்கும் கட்சியில் பெரிய அடிதடி நடந்து கொண்டு இருக்கிறது. அவர்கள் கட்சிதான் பாதிக்கப்பட்டுள்ளது.

தலையிடவில்லை
ஆனால் இதில் நாங்கள் தலையிட்டுக்கொள்ளவில்லை. நாங்கள் தலையிட்டால் தேவையில்லாத பிரச்சனை ஏற்படும் என்று அமைதியாக இருக்கிறோம், என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். முன்னதாக ஓ பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி மோதலில் ஆளும் திமுக தரப்பு ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி டீம் புகார் வைத்தது. இந்த நிலையில்தான் அதை மறுக்கும் வகையில் நாங்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கிறோம் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

எடப்பாடி ஆதரவாளர்
சமீபத்தில் எடப்பாடி ஆதரவாளர் கே.பி முனுசாமி அளித்த பேட்டியில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, ஓ பன்னீர்செல்வத்திற்கு மறைமுகமாக முதல்வர் ஸ்டாலின் உதவி செய்கிறார். மறைமுகமாக ஓ பன்னீர்செல்வத்திற்கு பல்வேறு வகைககளில் ஸ்டாலின் உதவி செய்கிறார். தன்னை எதிர்க்க கூடிய, தனக்கு எதிராக அரசியல் செய்ய திறமை கொண்ட ஒரே தலைவர் எடப்பாடி பழனிசாமிதான் என்று ஸ்டாலினுக்கு தெரியும். மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் எடப்பாடி என்று ஸ்டாலினுக்கு தெரியும். அதனால் அவர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தருகிறார் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில்தான் உதயநிதி அதை மறுத்து பேசி உள்ளார்.
-
அத்தனை பேரும் இன்ஸ்டாகிராம் வீடியோ போடுங்க.. ஐடி விங் கூட்டத்தில் ராஜ் சத்யனை வறுத்தெடுத்த எடப்பாடி! -
இனிமே சிங்கப் பாதை தான்..ஆக்ஷனுக்கு ரெடியான அதிமுக! திமிறி எழுந்த எடப்பாடி பழனிசாமி! கையில் லிஸ்ட்! -
ஐசியூவில் அதிமுக.. ஆபரேசனுக்கு தயாராவாரா எடப்பாடி? குறுக்கே ஆம்புலன்ஸோடு விஜய்! பரபர பாலிடிக்ஸ் -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
விஷப் பரிட்சைக்கு தயாரான எடப்பாடி! 5 தொகுதி இடைத் தேர்தல்.. அதிமுகவின் ’மாஸ்டர்’ பிளான் என்ன? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு












Click it and Unblock the Notifications