திருமங்கலம்: மதுபோதையில் நீயா? நானா? வானத்தை நோக்கி 'சீறிப் பாய்ந்த தோட்டக்கள்'.. நடந்தது என்ன?
சென்னை: மதுரை அருகே திருமங்கலத்தில் கோவில் கறிவிருந்தில் மதுபோதையில் நடந்த தகராறில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கறிஞர் வேதகிரி கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து கைத் துப்பாக்கியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் டி.கொக்குளத்தைச் சேர்ந்த தனசேகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். தனசேகரன் நேர்த்திக்கடனுக்காக திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோவிலில் கிடாய் விருந்து வைத்துள்ளார். தனசேகரன் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர் என்பதால் அது தொடர்பான நண்பர்களை கிடாய் விருந்துக்கு அழைத்துள்ளார்.
இந்த விருந்திற்காக மதுரையைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் வழக்கறிஞர் வேதகிரி மற்றும் திருமங்கலம் அருகே தொட்டியபட்டி பகுதியை சேர்ந்த கணபதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். விருந்திற்கு வந்தவர்கள் கோவிலுக்கு பின்புறம் உள்ள மரத்தடி ஒன்றில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர்.

மதுபோதையில் நீயா? நானா?
மது போதை அதிகமாகவே அங்கிருந்த கணபதி மற்றும் வேதகிரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த வேதகிரி நீ பெரிய ஆளா.? நான் பெரிய ஆளா.? நீயா? நானா? என காண்பிக்கிறேன் பார் எனக் கூறி தனது காரில் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கி சுட்டதில் அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடி விட்டனர்.

மூன்று பேரிடம் விசாரணை
இச்சம்பவம் குறித்து அங்கிருந்தவர்கள் திருமங்கலம் நகர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டிஎஸ்பி வசந்தகுமார் தலைமையிலான விசாரணை மேற்கொண்டனர். கோவிலுக்கு போலீசார் வருவதை கண்ட வேதகிரி தனது காரில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். போலீசார் விசாரணை நடத்தி கிடாய் விருந்து வைத்த தனசேகரன் மற்றும் தப்பி ஓடிய வேதகிரி அலுவலக உதவியாளர் சக்திவேல் மற்றும் கணபதி ஆகிய 3 பேரை பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

வக்கீல் வேதகிரி கைது
கைத் துப்பாக்கியால் சுட்ட வேதகிரியை உடனடியாக பிடிக்க தனிப்படை போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்நிலையில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்ட சம்பவத்தை அடுத்து திருமங்கலம் கோட்டாட்சியர் செளந்தர்யா மற்றும் வட்டாட்சியர் சிவராமன் உள்ளிட்டோர் பத்ரகாளி கோவில் வளாகம் அருகே விசாரணை மேற்கொண்டு வந்தனர். கைதுப்பாக்கியால் சுட்டு காண்பித்து விட்டு தலைமறைவாக இருந்த வேதகிரியை நேற்று இரவு தனிப்படை போலீசார் பிடித்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

லைசென்ஸ் ரத்து?
வேதகிரி வைத்திருந்த கைதுப்பாக்கிக்கு உரிமம் உள்ளதா என விசாரணை நடத்தியதில் கைத்துப்பாக்கிகான ஆவணங்களை வேதகிரி வைத்திருந்தார். தொடர்ந்து., அவர் மீது சட்ட விதிமுறைகளை மீறி ஆயுதம் பயன்படுத்தியதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சட்ட விதிகளை மீறி கைதுப்பாக்கி பயன்படுத்திய குற்றத்திற்காக அவரது கைதுப்பாக்கி உரிமம் திரும்ப வாங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
-
திருச்சியில் மாஸ்டர் பட வில்லன் பவானி பாணியில் ஸ்கெட்ச்.. திமுக கவுன்சிலர் வழக்கில் ட்விஸ்ட் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications