திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்... எல்லோரையும் பாராட்டு மழையில் நனைத்த ஸ்டாலின்
சென்னை: நெருக்கடியான காலகட்டத்தில் காணொலி காட்சி மூலம் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின்.
இன்று காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் தொடங்கிய இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்களிடம் வழக்கத்தை விட உற்சாகமாக பேசியுள்ளார் அவர். கொரோனா அச்சத்தையும் பொருட்படுத்தாமல் தாம் கேட்டுக்கொண்டதற்காக களப்பணியாற்றியதால் மாவட்டச் செயலாளர்களை ஸ்டாலின் பாராட்டு மழையில் நனைத்துள்ளார்.

இது பலருக்கும் டானிக் போல் இருந்ததால் அவர்களும் ஸ்டாலினிடம் உற்சாகம் பொங்க தாங்கள் ஆற்றிய நிவாரணப் பணிகளை பட்டியலிட்டுள்ளனர். அதனை கவனமாக கேட்டுக்கொண்ட ஸ்டாலின், மக்கள் என்ன சொல்கிறார்கள், அவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது எனவும் கேட்டிருக்கிறார். அரசு மீது மக்களுக்கு உள்ள கோபத்தை மூத்த மாவட்டச் செயலாளர்கள் சிலர் அடுக்கியுள்ளனர்.

மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொடுத்து உதவுவதை போல் கட்சிக்காரர்களுக்கும் தங்களால் இயன்ற உதவிகளை கேட்டுச்செய்யுங்கள் என ஸ்டாலின் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், மாவட்ட வாரியாக, நகர வாரியாக என்னென்ன பணிகள் செய்யப்பட்டுள்ளன, யார் யாரெல்லாம் பயன் அடைந்துள்ளார்கள் என்ற விவரத்தை கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், மாவட்டச் செயலாளர்கள் மனம் கோணாத வகையில் புகழாரம் சூட்டியிருக்கிறார்.

இதனிடையே களப்பணிகளை இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டாம் என்றும், தொடர்ந்து தொய்வின்றி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், நம்மால் செய்ய முடியாத காரியங்களை மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைத்து அந்த கோரிக்கை மனுக்கள் மீதான அவர்களின் நடவடிக்கையை (follow-up) பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
திமுக வரலாற்றில் முதல்முறையாகவும், தமிழக அரசியல் கட்சிகளுக்கு முன் மாதிரியாகவும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை மு.க.ஸ்டாலின் நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
“கொளத்தூரில் ஸ்டாலின் தோற்பார் என முன்பே தெரியும்.. திமுகவிடம் சொன்னோம்”.. காதர் மொய்தீன் தடாலடி! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications