Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ட்விஸ்ட்".. பாஜக நாராயணன் என்ன இப்படி சொல்லிட்டாரே.. ஷாநவாஸை விடுங்க.. பிடிஆருக்கு நச் கேள்வி

பிடிஆருக்கு முக்கிய கேள்வி கேட்டுள்ளார் பாஜகவின் திருப்பதி நாராயணன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் கிண்டல் பேச்சுக்கு, விசிக ஆளூர் ஷாநவாஸ் பதிலடி தந்தள்ளார்.

தமிழ் புத்தாண்டையொட்டி தமிழக அரசியல் கட்சிகளுக்கு நேற்று மாலை தேநீர் விருந்தில் பங்கேற்க ஆளுநர் ரவி அழைப்பு விடுத்திருந்தார்.

இதனை புறக்கணிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதலில் அறிவித்தது.. அதை தொடர்ந்து விசிகவும், இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆளுநர் செயல்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது விருந்தில் பங்கேற்கவில்லை என்று அடுத்தடுத்து அறிவித்தன.

 விடுதலை சிறுத்தைகள்

விடுதலை சிறுத்தைகள்

அதனைத் தொடர்ந்து பாமகவும் ஆளுநர் விருந்தை புறக்கணித்தது... இறுதியாக, திமுகவும், காங்கிரஸ் கட்சியும் ஆளுநர் ரவியின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்தன... ஓட்டுமொத்த கட்சிகளும் இப்படி ஆளுநர் அழைத்தும் அந்த விருந்தில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தது தமிழக அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.. இவர்கள் எல்லாரும் எப்போது இந்த முடிவு எடுத்தார்கள்? ஆளுநருக்கு எதிரான பிடி இறுகி கொண்டே போகும் நிலையில், அடுத்து என்னாகும் என்ற கேள்விகளும் எழுந்தன.

 வெள்ளை அறிக்கை

வெள்ளை அறிக்கை

அதனால், ஆளுநர் தந்த விருந்தில், அதிமுகவும், பாஜகவும் மட்டுமே பங்கெடுத்து கொண்டன.. கட்சிகளின் இந்த புறக்கணிப்பு குறித்து பாஜக தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணாமலை கிண்டலாக அளித்த பதில் இதுதான்: "ஆளுநருக்கு டீ செலவு மிச்சம்.,.. மக்கள் வரிப்பணம் கொஞ்சம் மிச்சமாகிறது. ஆளுநர் என்பவர் தமிழக மக்களின் பிரதிநிதி. ஆளுநர் விருந்துக்கு அழைப்பது என்பது காலம் காலமாக உள்ள மரபு.

 இதுவா மாண்பு?

இதுவா மாண்பு?

தமிழக அமைச்சரவை எடுத்த முடிவு என்பதற்காக மாண்பு கருதியே திமுக அரசு எழுதி கொடுத்ததை அப்படியே படித்தார் ஆளுநர். அப்போது மாண்பு இருந்தது, இப்போது இல்லையா? அனைத்தையும் அரசியல் செய்ய வேண்டும் திமுக நினைக்கிறது. ஆளுநர் 11 மசோதாக்களையும் திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளார். அதை திமுக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிடுமா?"

 கன்னத்தில் அடித்தால்..

கன்னத்தில் அடித்தால்..

அண்ணல் அம்பேதகர் வைத்து தான் அரசியல் செய்ய முடியும் என இருக்கும் தலைவர்களை திருத்த முடியாது. அம்பேதகர் சித்தாந்தத்தை முழுமையாக பின்பற்றும் கட்சி பாஜக... அதனால், ஒருபோதும் வன்முறைக்கு, வன்முறைக்கு தீர்வாகாது. ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காட்டும் அளவில் அமைதியின் வழியில் நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம்" என்றார்.

விசிக

விசிக

அண்ணாமலையின் இந்த கிண்டல் பேச்சிற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்எல்ஏ ஆளூர் ஷாநவாஸ் பதிலடி கொடுத்திருந்தார்.. "பெட்ரோல், டீசல் விற்கும் விலையில் ஆளுநர் மாளிகைக்கு சென்றுவர ஆகும் டீசல் செலவு மிச்சம் என எங்களாலும் சொல்ல முடியும்... தமிழ்நாட்டின் உரிமை பிரச்சனைக்கான புறக்கணிப்பை தேநீர் செலவு மிச்சம் என்று மலினப்படுத்தக்கூடாது" என்று காட்டமான பதிலை பாஜக மாநில தலைவருக்கு ஷாநவாஸ் தந்திருந்தார்.

அம்சம்

அம்சம்

இதற்கு தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உடனடியாக ரியாக்ட் செய்திருந்தார்.. பதிலுக்கு ஷாநவாஸுக்கு அவர் ஒரு ட்வீட் போட்டிருந்தார்.. "இன்னொரு அம்சத்தையும் குறிப்பிட மறந்து விடாதீர்கள், ஷானவாஸ் சகோதரரே. இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழ் மக்களின் பணம் செலவிடப்படுகிறது. சொன்னது போல் சேமிப்பு இருந்ததா இல்லையா என்பதை அறிய, பில் (கோப்பு) வரும் வரை காத்திருப்போம்" என்று தெரிவித்திருந்தார்

ஷநவாஸ்

ஷநவாஸ்

ஒருபக்கம் ஷாநவாஸ், இன்னொரு பக்கம் பிடிஆர் என இரண்டு பேரின் ட்வீட்களும் நேற்றைய தினம் சோஷியல் மீடியாவில் வைரலானது.. பலரும் இந்த ட்வீட்களுக்கு வரவேற்பு தந்து கமெண்ட்களை பதிவுட்டு வந்தனர்.. இது பாஜக தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தி வந்த நிலையில், தற்போது பிடிஆருக்கு ஒரு பதிலடியை தந்துள்ளது.

திருப்பதி நாராயண்

திருப்பதி நாராயண்

அந்தவகையில், தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி பிடிஆரிடம் முக்கிய கேள்வி ஒன்றை எழுப்பி ட்வீட் பதிவிட்டுள்ளர்.. அதில், ''துபாய் கண்காட்சியில் பலநூறு கோடி செலவில் இந்திய அரங்கை கட்டமைத்தது மத்திய அரசு தானே? ஏதோ தமிழக அரசு செலவு செய்து முதலீட்டை பெருக்க முயற்சித்தது போல் மார்தட்டி கொண்டது ஏன்?'' என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் நாராயணன்.. இதற்கு பிடிஆர் என்ன சொல்ல போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Recommended Video

    Annamalai vs Aloor Sha Navas: Discussion on TN Governors Party | OneIndia Tamil
    கருத்து

    கருத்து

    இந்த கருத்தை ட்வீட்டிலும் நாராயணன் பதிவிட்டிருந்த நிலையில், இதற்கு ஏராளமானோர் திரண்டு பதிலளித்து கொண்டிருக்கிறார்கள்.. "மத்திய அரசுக்கு ஏது பணம்? மக்களின் வரிப்பணம்தானே? வரியை வாங்கி, மாநிலங்களை நம்பிதானே அரசு பிழைக்கிறது.. மொதல்ல 29,000 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகைய தாங்க, அதை கேட்டு வாங்கி தாங்க" என்றும், ஒருமுறை முதல்வர் வெளிநாடு சென்றதுக்கே இத்தனை கேள்விகள் என்றால், பிரதமர் பலமுறை வெளிநாடு சென்று வருகிறாரே" என்றும் பதிலடி தந்து கொண்டிருக்கிறார்கள்..

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+