காதல் மனைவி ஆர்த்தியை, ஜெயம் ரவி பிரிய என்ன காரணம்? சமூகவலைதளத்தில் டிரென்டாகும் #JayamRavi!
சென்னை: நடிகர் ஜெயம் ரவி தன்னுடைய மனைவியுடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் #JayamRavi என்ற ஹேஷ்டேக் டிரென்டிங்கில் உள்ளது. மேலும் இவர்களுடைய பிரிவிற்கு என்னதான் காரணம் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
கடந்த சில மாதங்களாக புகைந்து கொண்டிருந்த ஜெயம் ரவி- ஆர்த்தி ஜோடி விவாகரத்து இன்று கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு சுஜாதா விஜயகுமார் என்ற சீரியல் தயாரிப்பாளரின் மகள் ஆர்த்தியை, ஜெயம் ரவி காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில் இன்றைய தினம் தனது மனைவியுடனான திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக ஜெயம் ரவி அறிவித்துள்ளார்.
இதுகுறித்த அவர் தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம். ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது. என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும், திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும் திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன்.

எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல. சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது.
இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும் எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்த முடிவு எனது சொந்த முடிவாகும் இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே., நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன் எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
இதையடுத்து ஜெயம் ரவியின் பெயர் டிவிட்டரில் டிரென்டிங்கில் உள்ளது. #JayamRavi என்ற ஹேஷ்டேக் டிரென்டாகி வருகிறது. இந்த நிலையில் ஆர்த்திக்கும் ஜெயம் ரவிக்கும் இடையே என்னதான் ஆச்சு என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜெயம் ரவியை வைத்த ஆர்த்தியின் தாய் சில படங்களை தயாரித்துள்ளதாக தெரிகிறது.

அந்த படங்கள் சரியாக போகவில்லை என்பதால் ஜெயம் ரவி மீது ஆர்த்தி குடும்பத்தினருக்கு அதிருப்தி இருந்ததாக சொல்லப்படுகிறது. அது போல் கதை தேர்விலும் அவருடைய மாமியாரின் தலையீடு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபப்பட்ட ஜெயம் ரவி இந்த முடிவுக்கு வந்ததாக சொல்கிறார்கள். இதெல்லாம் நம்பும்படியாக இல்லை.
மாமியார் தலையிட்டால் விவாகரத்துதான் தீர்வு என்பது இல்லை. ஆனால் இன்னும் சிலர் ஜெயம் ரவி மீது ஆர்த்திக்கு சந்தேகம் என்கிறார்கள். ஷூட்டிங்கில் ரவி போனை எடுக்காவிட்டால் உதவி இயக்குநர், கேமராமேன் என ஒருவரையும் விடாமல் ஆர்த்தி போன் செய்வாராம். அது போல் அவுட்டோர் ஷூட்டிங் என்றால் ஆர்த்தியும் உடன் செல்வாராம். இதெல்லாம் ஜெயம் ரவிக்கு பிடிக்கவில்லை என சொல்லப்படுகிறது. இவை ஆரம்பத்தில் சிறிய சிறிய மோதல்களாக வந்து பின்பு வெடித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இவர்கள் எந்த காரணத்திற்காக விவாகரத்து செய்தார்கள் என தெரியவில்லை. ஆனால் சேர்ந்து வாழ்ந்தவரை இருவரும் அன்பான ஜோடிகளாக இருந்தனர் என்பதை மறுக்க முடியாது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications