"சுக்கு நூறாக போயிடும்".. நட்சத்திர ஹோட்டலில் சீறிய ஓபிஎஸ்! "ஏய் கருப்ப்பா".. கையை பிசையும் எடப்பாடி
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்ற அதே நேரத்தில் ஓ பன்னீர்செல்வம் தனியாக இன்னொரு கூட்டம் நடத்தி இருக்கிறார்.
அதிமுக உட்கட்சி மோதல் முடிவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அதிமுக பொதுக்குழுவிற்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கில் அடுத்தகட்ட விசாரணை நவம்பர் மாதம்தான் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதற்கு இடைப்பட்ட காலத்தில் நிர்வாகிகளை தங்கள் பக்கம் இழுப்பதற்கான வேலைகளை ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி தரப்பு செய்து வருகிறது.
வழக்கு ஒரு பக்கம் நடக்கட்டும், நாம் நிர்வாகிகளை நம் பக்கம் இழுப்போம் என்று இரண்டு தரப்பும் தீவிரமான பணிகளை செய்து வருகிறது.

ஓ பன்னீர்செல்வம்
இதில் ஓ பன்னீர்செல்வம் கை ஓங்கி இருக்கிறது என்றுதான் கூற வேண்டும். ஏனென்றால் சமீபத்தில்தான் பண்ருட்டி ராமசந்திரன் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இவர் சசிகலாவுடனும் நெருக்கமாக இருந்து வருகிறார். இவர்கள் மெதுவாக அதிமுகவை கைப்பற்றுவதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்த முயற்சியின் ஒரு கட்டமாகவே எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி ஓ பன்னீர்செல்வம் அணியில் மைத்ரேயன் இணைந்தார். பண்ருட்டி ராமசந்திரன் போட்டுக்கொடுத்த திட்டத்தின் மூலம் மைத்ரேயன் அணி மாறியதாக கூறப்படுகிறது.

வலிமை
இவர்கள் இருவரையும் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் இருந்தே நீக்குவதாகவும் அறிவித்து உள்ளார். இரண்டு பெரிய ஓ பன்னீர்செல்வம் பக்கம் சென்றுள்ளது கொஞ்சம் எடப்பாடி தரப்பை அதிர்ச்சிக்குத்தான் உள்ளாக்கி இருக்கிறதாம். இனியும் நிர்வாகிகள் யாரும் ஓ பன்னீர்செல்வம் அணியில் இணைத்துவிட கூடாது என்றுதான் நேற்று எடப்பாடி பழனிசாமி மாவட்ட செயலாளர்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தை அவசரமாக நடத்தினார். ஓ பன்னீர்செல்வம் அணியில் யாரும் இணையாமல் தடுக்கும் விதமாக எடப்பாடி இந்த கூட்டத்தை நடத்தி இருக்கிறார்.

கண்டிப்பு
இந்த கூட்டத்தில் கண்டிப்பாக பேசிய எடப்பாடி, ஒற்றை தலைமை மட்டுமே அதிமுகவை காக்க உதவும். இல்லையென்றால் கட்சி சுக்குநூறாக நொறுங்கிவிடும். கட்சியை பிளவுபடுத்த சதி நடக்கிறது. நிர்வாகிகளை இழுக்க சதி நடக்கிறது. அதற்கு யாரும் மசிந்துவிட கூடாது. நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். உச்ச நீதிமன்ற தீர்ப்பு நமக்கே சாதகமாக வரும் என்று எடப்பாடி பழனிசாமி இந்த மீட்டிங்கில் எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களிடம் பேசி இருக்கிறாராம். யாரும் அணி மாற நினைக்காதீர்கள் என்று நேரடியாகவே எடப்பாடி சொன்னதாக கூறப்படுகிறது.

சீறிய ஓ பன்னீர்செல்வம்
இன்னொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் அதே நேரத்தில் சென்னை தனியார் ஹோட்டலில் மீட்டிங் ஒன்றை நடத்தி இருக்கிறார். கருப்பு சாமி தொடங்கி காசி விசுவநாதன் வரை வரிசையாக பல்வேறு கோவில்களுக்கு சென்று வழிப்பாடு செய்து வந்தார் ஓ பன்னீர்செல்வம். பெரிதாக அரசியலில் கவனம் செலுத்தாமல் வரிசையாக கோவில் வழிபாடுகளை செய்து வந்தார். அதிலும் சமீபத்தில் கருப்ப சாமி கோவிலில் சிறப்பு பூஜையும் செய்தார். அங்கு இருந் சாமிக்களிடம் வாக்கும் பெற்றார். இந்த நிலையில்தான் வழிப்பாடுகளை முடித்துவிட்டு நீண்ட நாட்கள் கழித்து நேற்று நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார். தனியார் ஹோட்டலில் சுமார் 2 மணி நேரம் இந்த ஆலோசனை நடந்தது.

அதிமுக
அதிமுக பொதுக்குழு வழக்கு, எடப்பாடி பழனிசாமி நடத்தும் மாவட்ட செயலாளர்கள் மீட்டிங் ஆகியவை குறித்து இதில் ஓ பன்னீர்செல்வம் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்கள் 60 பேர், எம்எல்ஏக்கள் 60 பேர் என்று பெரும்பாலானோர் எடப்பாடி கூட்டத்தில் கலந்து கொண்டதால் ஓ பன்னீர்செல்வம் நேற்று மீட்டிங்கில் கொஞ்சம் சோர்வாகவே இருந்தார் என்றும் கூறப்படுகிறது. எடப்பாடி கூட்டத்திற்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அவருக்கு போட்டியாக பெரிய கூட்டம் நடத்த வேண்டும்.

கூட்டம்
அதிமுக தொடக்க விழாவின் போது நாம் பெரிய கூட்டம் நடத்தி பவரை காட்ட வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் இதில் கண்டிப்புடன் பேசியதாக கூறப்படுகிறது. அதிமுக கட்சி 1972ம் வருடம் அக்டோபர் 17ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கட்சியை எம்ஜிஆர் தொடங்கி 50 வருடங்கள் ஆகிவிட்டது. 51வது வருடத்தில் அந்த கட்சி அடியெடுத்து வருகிறது. இந்த நிலையில்தான் அதிமுக சார்பாக இதற்கான விழா நடத்தப்பட உள்ளது. அதே நாளில் ஓ பன்னீர்செல்வம் பெரிய கூட்டம் ஒன்றை நடத்தவும் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications