எல்லாரும் இறங்குங்க.. இதுக்கு மேல போகாது! கிளாம்பாக்கத்தில் அதிகாலையில் சம்பவம்.. அடுத்து நடந்த ஷாக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் இன்று அதிகாலை ஆம்னி பேருந்திலிருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னைக்கு உள்ளே ஆம்னி பேருந்துகள் நேற்று மாலையில் இருந்து அனுமதிக்கப்படுவது இல்லை. அதேபோல் நேற்று மாலையில் இருந்து ஆம்னி பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க அனுமதிப்பது இல்லை. கிளாம்பாக்கத்தில் மட்டுமே பயணிகளை ஏற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. அதேபோல் காலையில் கோயம்பேடு உள்ளே வரும் பேருந்துகளை தடுத்து கிளாம்பாக்கத்தோடு நிறுத்தும் முடிவும் எடுக்கப்பட்டு உள்ளது.

 What happened early in the morning at the Kilaampakkam Bus Stand? Travelers struggled for many reasons

ஈசிஆர் வழி செல்லும் பேருந்துகள் மட்டுமே.. கோயம்பேடு, சின்னமலை, ராஜிவ் காந்தி சாலை வழியாக ஈசிஆர் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. இவை மட்டுமே கோயம்பேடில் இருந்து இயங்க அனுமதிக்கப்படுகிறது. மற்றபடி செங்கல்ப்ட்டு, பெருங்களத்தூர் ரூட் எடுக்கும் வாகனங்கள் எல்லாம் கிளாம்பாக்கத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து மட்டுமே பயணிகளை ஏற்றிக்கொள்ள, இறக்கிக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

இறக்கி விடப்பட்டனர்: நேற்று மாலையில் இருந்து இந்த விதிமுறை அமலில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னை கிளாம்பாக்கத்தில் இன்று அதிகாலை ஆம்னி பேருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டது விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆம்னி பேருந்தில் ஏற்கனவே புக் செய்தவர்கள் பலர் சிட்டியின் உள்ளே வருவதற்கு டிராப் பாயிண்ட் புக் செய்து இருந்தனர். ஆனால் ஆம்னி பேருந்துகள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. இதனால் பேருந்து உள்ளே இருந்தவர்கள்.. இறக்கி விடப்பட்டனர்.

கிளாம்பாக்கத்தில் இருந்து மினி பேருந்துகள், நகர பேருந்துகள் 10 நிமிடத்திற்கு ஒரு முறை நகரத்தின் எல்லா பகுதிகளுக்கும் பேருந்துகள் செல்கின்றன. ரூ. 10ல் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இங்கே பேருந்துகள் உள்ளன. அதிகாலையே இந்த பேருந்துகளில் பலரும் சிட்டி உள்ளே வந்தனர்.

அதே சமயம் கிளாம்பாக்கத்தில் இருந்து கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் அருகிலேயே உள்ளது. இதற்கு நடந்தும், மினி பேருந்திலும் கூட செல்லலாம். இதிலும் 7 மணிக்கு பிறகு சிலர் சென்று பயணம் மேற்கொண்டனர்.

இன்னும் சிலர் ஆட்டோ, காரில் செல்ல விருப்பப்பட்டனர். இதில் காரில் செல்ல 2000 வரை, ஆட்டோவில் செல்ல 1000 வரை வாங்கப்பட்டது. சென்னைக்கு திருச்சியில் இருந்து வரவே குறைந்தபட்ச டிக்கெட் ரூ. 400தான். ஆனால் கிளாம்பாக்கத்தில் இருந்து சிட்டி உள்ளே வர ரூ. 1000 வரை கூட ஆட்டோவில் வாங்கப்பட்டது.

கட்டுப்பாடு: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு பின் மிக முக்கியமான காரணம் உள்ளது. இது தொடர்பாக தமிழக போக்குவரத்து துறை அதிகாரிகள் சில முக்கியமான விவரங்களை நம்மிடம் தெரிவித்துள்ளனர்.

அதன்படி கிளாம்பாக்கத்தோடு அரசு பேருந்துகள் நின்றுவிடுவதால் பலரும் தனியாரின் புக் செய்ய தொடங்கி விட்டனர். தனியார் பேருந்துகள் கோயம்பேடு வரை செல்வதால் இந்த புக்கிங் மாற்றம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அரசு பேருந்துகளுக்கு கடுமையான இழப்பு ஏற்பட்டு உள்ளது.

அரசு பேருந்துகள் உள்ளே வராது என்பதால் அதற்கான புக்கிங் வெகுவாக குறைந்ததை அடுத்து ஆம்னி பேருந்துகளை இனி உள்ளே வர விடக்கூடாது என்ற முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.உள்ளே வருவதற்க்கு ஆம்னி மட்டுமே ஒரே வழி என்பதால் மக்கள் பலரும் அதையே விரும்புகிறார்கள் என்பதே இந்த பிரச்சனைக்கு காரணம். இதை சரிகட்டவே புதிய கட்டுப்பாடு வந்துள்ளது.

இதுவரை கோயம்பேடு வரை இயக்கப்பட்ட அரசு விரைவு பேருந்துகள் கடந்த 18ம் தேதி முதல் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் முடிந்த நிலையில் இனி பேருந்துகள் கோயம்பேடு வரை வராது.

அதாவது சென்னை உள்ளே வராமல் இனி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தோடு இந்த பேருந்துகள் நிற்கும். முக்கியமாக கோயம்பேடு வரை இந்த பேருந்துகள் இனி வராது. சென்னை உள்ளே வர இனி நீங்கள் வேறு பேருந்து பிடித்துதான் வர வேண்டும். இது தனியார் பேருந்துகளுக்கு பொருந்தாது என்று முதலில் அறிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+