சென்னை வங்கியில் 32 கிலோ தங்கநகை கொள்ளை.. காவலாளி, போலீசார் வெளியிட்ட அதிர வைக்கும் தகவல்
சென்னை: சென்னை அரும்பாக்கம் தனியார் வங்கியில் பலகோடி ரூபாய் மதிப்பிலான நகை கொள்ளை நடந்துள்ளது பற்றி காவலாளி மற்றும் போலீசார் அதிர வைக்கும் சில முக்கிய தகவல்களை கூறியுள்ளனர்.
சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் பெடரல் வங்கி உள்ளது. இந்த வங்கியின் நகைக்கடன் வழங்கும் பிரிவில் இன்று வழக்கம்போல் ஊழியர்கள் பணி செய்து வந்தனர்.
இந்நிலையில் வங்கிக்குள் மாஸ்க் அணிந்து நுழைந்த 3 மர்மநபர்கள் ஊழியர்களை கட்டிப்போட்டு நகை, பணம் கொள்ளையடித்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

4 தனிப்படை போலீசார்
முதற்கட்ட விசாரணையில் பணம், நகைகள் என கொள்ளைப்போன பொருட்களின் மொத்த மதிப்பு கோடிக்கணக்கில் இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அந்த வங்கியில் பணிபுரிந்த ஊழியரே தனது நண்பர்களுடன் இணைந்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கொள்ளையர்களை 4 தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

கழிவறையில் பூட்டிவைத்து
இந்த கொள்ளை சம்பவம் குறித்து தற்போது காவலாளி மற்றும் போலீசார் சில முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். கொள்ளை தொடர்பாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது: வங்கியில் பணி செய்யும் முருகன் என்பவர் 2 பேருடன் வந்துள்ளார். அவர் கவாலாளியான சரவணனுக்கு குளிர்பானம் வாங்கி கொடுத்துள்ளார். அதில் மயக்க மருந்து கலந்திருந்ததால் அவர் மயங்கினார். இதையடுத்து உள்ளே சென்றனர். வங்கியின் லோளாளர் சுரேஷ் மற்றும் வாடிக்கையாளர் சேவை எக்ஸ்சிகியூட்டிவ்வாக உள்ள விஜயலட்சுமி ஆகியோரை கத்தியால் மிரட்டி கழிவறையில் அடைத்தனர்.

32 கிலோ தங்க நகைகள்
மேலும் அவர்களிடம் இருந்து சாவியை பறித்தவர்கள் லாக்கரை திறந்து நகைகளை அள்ளி சென்றனர். இதன் மதிப்பு பலகோடி ரூபாயாகும். மொத்தம் 32 கிலோ தங்க நகைகள் வரை கொள்ளையடித்துள்ளனர். வங்கி ஊழியர் முருகன் பற்றிய விபரங்களை சேகரித்துள்ளோம். விரைவில் கைது செய்வோம்'' என போலீசார் கூறியுள்ளனர். இதற்கிடையே வங்கி கொள்ளையில் முக்கிய நபராக கருதப்படும் நபரின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். முருகன் என்பவரின் படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர். அதோடு வங்கி கொள்ளையர்களை பிடிக்க சென்னை நகரில் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவலாளி கூறுவது என்ன?
இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக வங்கியின் காவலாளி சரவணன் கூறுகையில், ‛‛மயக்கமருந்து கலந்த குளிர்பானத்தை எனக்கு கொடுத்தனர். நான் வேண்டான் என்று கூறினேன். ஒரு மாதிரியாக உள்ளது எனக்கூறி நான் சாப்பிடவில்லை என்று கூறினேன். ஆனால் அவர்கள் வலுக்கட்டாயப்படுத்தி கூறினர். இதையடுத்து குடித்தேன். அது ஒருமாதிரியாக இருந்ததால் கீழே ஊற்றிவிட்டேன். கொஞ்சம் தலைசுற்றியது. இதனால் சாப்பாடு சாப்பிட்டேன். எனக்கு குளிர்பானம் கொடுத்தவர் இங்கு பணியாற்றுபவர் தான். இதற்கு முன்பு இதுபோல் நடந்தது இல்லை'' என்றார்.
-
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ












Click it and Unblock the Notifications