சாலையில் திக்திக் சம்பவம்.. குரோம்பேட்டையில் அப்படியே ஸ்டன் ஆகி நின்ற மக்கள்.. இப்படிலாம் நடக்குமா?
சென்னை: சென்னை குரோம்பேட்டையில் நடந்த சம்பவம் ஒன்று அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் திடீரென எலக்ட்ரிக் பைக்குகள் வெடிப்பதும், தீ பற்றி எரிவதும் அடிக்கடி நடந்து வருகிறது. அதிலும் சமீபத்தில் நடந்த பல்வேறு சம்பவங்கள் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளன. சமீபத்தில் வேலூர் மாவட்டத்தில் இ பைக் எனப்படும் எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை, மகள் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. சின்ன அல்லாபுரத்தில் எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்ததில் துரைவர்மா மற்றும் அவரது மகள் மோகனப்ரீத்தி ஆகியோர் பலியானார்கள்.

புனே சம்பவம்: இரவில் சார்ஜ் போடும் போது பைக் பேட்டரி வெடித்து புகை ஏற்பட்டுள்ளது. இந்த புகையில் மூச்சு முட்டி இருவரும் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல் கடந்த வாரம் புனேவில் ஓலா நிறுவனத்தின் எஸ்1 ப்ரோ பைக் திடீரென தீ பிடித்தது. சாலையில் நின்று கொண்டு இருந்த பைக் திடீரென தீ பிடித்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பைக்கில் அப்போது யாரும் இல்லை. பார்க் செய்யப்பட்டு இருந்த பைக் திடீரென வெயிலில் பற்றி எரிந்தது. இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி வைரலாகி உள்ளது.
விளக்கம் அளித்த ஓலா: இதற்கு ஓலா நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், புனேவில் நடந்த விபத்து குறித்து நாங்கள் அறிந்தோம். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம். விபத்துக்கு பின் என்ன காரணம் இருக்கும் என்று விசாரித்து விரைவில் முடிவுகளை அறிவிப்போம். தொடர்ந்து வாடிக்கையாளர்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அந்த பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர் நன்றாக இருக்கிறார். பாதுகாப்புதான் எங்களுக்கு முக்கியம், இதை மிகவும் சீரியசாக எடுத்துக்கொண்டு உள்ளோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்சார வாகனங்கள்: மின்சார வாகனங்கள் இப்படி தீ பிடிப்பது பலருக்கும் தெரிந்ததுதான். இ பைக்குகள் வெடிக்க முக்கியமான காரணம் அதன் பேட்டரிதான். போன், லேப்டாப் சில இடங்களில் தீ பிடிக்கும், பவர் பேங்க் வெடிக்கும் அல்லவா? அது போலத்தான் இதுவும். இ பைக்குகள் பொதுவாக லித்தியம் அயான் பேட்டரிகளை பயன்படுத்தும்.இது தீ பிடிக்கும், வெடிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
பிஎம்டபிள்யூ: ஆனால் அதிசயமாக சென்னையில் பிஎம்டபிள்யூ கார் ஒன்று தீ பிடித்துள்ளது. டீசல் காரான இது திடீரென தீ பிடித்துள்ளது. குரோம்பேட்டை ஜி.எஸ்.டி. சாலையில், தாம்பரம் நோக்கி சென்ற BMW கார், தீடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரை ஓட்டிச் சென்ற போதே தீ பிடித்து உள்ளது. இதையடுத்து காரை ஓட்டிச் சென்ற பார்த்தசாரதி, வெளியே குதித்து தப்பித்தார். அவர் தப்பிய நிலையில் கார் அப்படியே சாலையில் தீ பிடித்தது. பச்சை கலர் கொழுந்து விட்டு எரிந்ததை பார்க்க அங்கே மக்கள் பலரும் கூடினர். ஸ்டன் ஆகி இந்த சம்பவத்தை மக்கள் கண்கள் விரிய பார்த்துக்கொண்டு இருந்தனர்.
இதனால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். அங்கே ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த தற்போது போக்குவரத்து போலீசார் களமிறக்கப்பட்டு உள்ளனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications