லோக்சபா தேர்தலுக்கு முன்.. இதை பண்ணியே ஆகணும்.. எடப்பாடி சொன்னதும்.. உள்ளே கேட்ட எதிர்க்குரல்.. அடடே
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வைத்த ஆலோசனை ஒன்றிற்கு மாஜி அமைச்சர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட,செயலாளர்கள் கூட்டம் நேற்று நடந்தது. அதிமுக கூட்டத்தில் கோடநாடு வழக்கு விசாரணை மற்ற மாஜி அமைச்சர்கள் மீதான வழக்குகள் பற்றி விசாரணை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு வந்தால் எதிர்கொள்வது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. தேர்தல் எப்போது நடந்தாலும் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பது குறித்து கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை செய்யப்பட்டது என்கிறார்கள். இந்த கூட்டத்தில் பேசிய எடப்பாடி.. எனக்கு தெரிந்த வரை லோக்சபா தேர்தல் சட்டசபை தேர்தல் ஒன்றாக நடக்க உள்ளது. டெல்லியில் இருந்து எனக்கு வந்த தகவல் இது.
டெல்லியில் உள்ளவர்கள் சொன்னபடி பார்த்தால் தமிழ்நாட்டில் லோக்சபா தேர்தலோடு சட்டசபை தேர்தலும் நடக்கும். அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். தேர்தல் எப்போது நடந்தாலும் அதற்கு தயாராக இருங்கள். இதுதான் மிக முக்கியம், என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார். இதில் பாஜக கூட்டணி குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது என்கிறார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல்: அதன்படி லோக்சபா தேர்தலை முன்கூட்டியே சில மாநில தேர்தல்களோடு சேர்த்து நடத்தவும், இதன் மூலம் ஒரே நாடு தேர்தல் முறையை கொண்டு வரவும் பாஜக முயல்வதாக கூறப்படுகிறது.
குழு அமைப்பு: அதாவது இந்த வருட இறுதியிலேயே லோக்சபா தேர்தல் வரலாம் என்கிறார்கள். பல மாநில தேர்தல்களோடு சேர்ந்து இந்த தேர்தல் நடக்கலாம் என்று கூறப்படுகிறது. 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய அரசு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாகத் தகவல்கள் வரும் நிலையில்தான் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடந்து வருகிறது. செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் அந்த மசோதா தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ள நிலையில்தான் இந்த குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில்தான் லோக்சபா தேர்தலுக்கு முன்பாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற முடிவை எடப்பாடி பழனிச்சாமி எடுத்துள்ளாராம். அதிமுகவில் கூடுதலாக 5-6 மாவட்டங்களை அதிகரிக்கலாம் என்ற திட்டத்தில் எடப்பாடி இந்த ஐடியாவை சொல்லி இருக்கிறார்.
தற்போது ஒரு மாவட்ட செயலாளருக்கு 4- 5 தொகுதிகள் உள்ளன. ஒரு மாவட்ட செயலாளர் 5 சட்டசபை தொகுதிகளை பார்ப்பது சிரமம். இதை 3 ஆக குறைப்போம். இதன் மூலம் கூடுதலாக வரும் தொகுதிகளுக்கு புது மாவட்ட செயலாளர் போடுவோம் என்று எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறாராம்.
ஆனால் இதை கேட்டதும் மாஜி அமைச்சரும், மூத்த தலைவருமான ஒருவர் குறுக்கிட்டு.. அதெல்லாம் முடியாது. அப்படி மாற்றினால் இருக்கிற மாவட்ட செயலாளர்கள் அதிர்ச்சி அடைவார்கள்.
அவர்கள் சிறப்பாக செயல்பட்டதால்தான் மதுரை மாநாட்டை நன்றாக நடத்த முடிந்தது. அவர்களே இருக்கட்டும். அது அவர்களின் பவரை குறைப்பது போல ஆகிவிடும். அப்படி நடக்க விடக்கூடாது. இருப்பது அப்படியே இருக்கட்டும். தேர்தல் நெருங்கி நேரத்தில் இப்படி செய்வது சரியாக இருக்காது என்றுள்ளார்.
இதை கேட்டதும் எடப்பாடி பழனிசாமியே கொஞ்சம் யோசித்து இருக்கிறாராம். பொதுச்செயலாளராக அவர் வைத்த யோசனைக்கு மாஜி அமைச்சர் எதிர்ப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா பொதுச்செயலாளராக இருந்த சமயத்தில் அவர் எடுப்பதே முடிவு என்று இருக்கும். ஆனால் இப்போது எடப்பாடி காலத்தில் அப்படி இல்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications