‛ரெக்யூஸ்ட்’.. ரஜினியை சந்தித்து மேட்டரை உடைத்த ஓ.பன்னீர் செல்வம்! திரும்பும் எடப்பாடி! பரபர பின்னணி
சென்னை: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வம் இன்று திடீரென்று நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அரசியல் களத்தில் இது பேசும்பொருளாகி உள்ள நிலையில் பின்னணியில் மறைந்திருக்கும் பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக ஒருங்கிணைப்பாளராக இருந்த ஓ பன்னீர் செல்வம் தற்போது கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மேலும் அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார். இதன்மூலம் தற்போது அதிமுக தற்போது எடப்பாடி பழனிச்சாமியின் கட்டுப்பாட்டில் உள்ளது

இதனை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால் எதிலும் அவருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை. இத்தகைய சூழலில் தான் ஓ பன்னீர் செல்வம் மாவட்ட வாரியாக நிர்வாகிகளை நியமனம் செய்து தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.
மேலும் ஓ பன்னீர் செல்வம், டிடிவி தினகரனின் அமமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்க திட்டமிட்டுள்ளது. மேலும் விரைவில் ஓ பன்னீர் செல்வம் தனிக்கட்சியை தொடங்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு பண்ருட்டி ராமச்சந்திரன் ஆலோசனைகளை வழங்கியதோடு, அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தான் நாளை முதல் தமிழகம் முழுவதும் ஓ பன்னீர் செல்வம் சுற்றுப்பயணத்தை தொடங் உள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் இருந்து அவர் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். மேலும் விரைவில் புதிய கட்சி அறிவிப்பும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில் தான் இன்று சென்னையில் நடிகர் ரஜினிகாந்தை திடீரென்று ஓ பன்னீர் செல்வம் சந்தித்தார். இந்த சந்திப்பு என்பது போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டில் நடந்தது. நாளை முதல் தமிழகத்தில் ஓ பன்னீர் செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் அவரது இந்த சந்திப்பு என்பது அனைவரையும் வியக்க வைத்தது. இந்நிலையில் தான் ஓ பன்னீர் செல்வம்-ரஜினிகாந்த் சந்திப்பில் நடந்தது என்ன? என்பது பற்றிய முழு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஓபன்னீர் செல்வம் 2 வாரங்களுக்கு முன்பே ரஜினியை தொடர்புகொண்டு, "உங்களை சந்திக்க வேண்டும்" என கேட்டுள்ளார்.அதற்கு ரஜினி, "சென்னை வந்ததும் சொல்கிறேன். சந்திக்கலாம்" என்று தெரிவித்திருக்கிறார். அதன்படியே ஓ பன்னீர் செல்வம்-ரஜினி இடையேயான இன்றைய சந்திப்பு நடந்துள்ளது. மேலும் இந்த சந்திப்பின்போது சினிமா முதல் அரசியல் குறித்து இருவரும் பேசியுள்ள தகவல்களும் வெளியாகி உள்ளது.
அதாவது ஓ பன்னீர் செல்வம், " ஜெயிலர் படம் பார்த்தேன். என்னம்மா ஸ்டைல் பண்ணியிருக்கீங்க ? 1980-களில் இருந்த சுறுசுறுப்பை ஜெயிலரிலும் கண்டேன். உங்களின் மாஸ் அப்படியே தான் இருக்கிறது. கொஞ்சம் கூட குறையல" என சொல்லியிருக்கிறார். அதற்கு நடிகர் ரஜினிகாந்த் சிரித்தபடியே நன்றி தெரிவித்துள்ளார். இதையடுத்து தான் சினிமாவில் இருந்து இருவரும் பேச்சும் அரசியல் பக்கம் திரும்பி உள்ளது.
அதாவது அரசியல் ரீதியாக ரஜினிகாந்திடம், ஓ பன்னீர் செல்வம், "பாஜகவுக்கு தவறான தகவல்களை தந்து எனக்கு எதிராக பாஜகவை நம்ப வைத்திருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் அரசியல் கேவலமான அரசியலாக இருக்கிறது. அவரை நம்பினால் பாஜகவுக்கு மோசமான அனுபவம் தான் கிடைக்கும். வாய்ப்பிருந்தால் இதனை அவர்களுக்கு (பாஜக) பாஸ் பண்ணுங்கள். இது ரெக்யூஸ்ட் தான். கட்டாயம் இல்லை. நான் அரசியல் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். உங்களின் ஆதரவு எனக்கு வேண்டும் " என ஓபனாகவே ஓ பன்னீர் செல்வம் கேட்டுள்ளார்.
இதைடுத்து நடிகர் ரஜினிகாந்த், "உங்களின் பயணம் வெற்றி பெறட்டும். வாழ்த்துகள் " என்று சொன்னதைத் தவிர,வேறு எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லையாம். மேலும் நடிகர் ரஜினிகாந்த தற்போது பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளார். தற்போது இவரிடம் கூறும் வார்த்தைகள் பாஜகவுக்கு செல்ல வாய்ப்புள்ளது எனவும், மாநிலம் முழுவதும் அவருக்கு அதிக ரசிகர்கள் உள்ளதால் இந்த சந்திப்பு அரசியல் ரீதியாகவும் பயனளிக்கலாம் எனவும் ஓ பன்னீர் செல்வம் கணக்கீட்டுள்ளார். இதுதான் இந்த சந்திப்பின் பின்னணியில் உள்ள சாராம்சம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications