"அடைக்கலம்" தேடி வந்த பெண்ணை.. கருமுட்டை விற்க சொல்லி தம்பதி டார்ச்சர்.. என்ன நடந்தது சென்னையில்?
கருமுட்டை விற்பனை விவகாரத்தில் இளம்பெண் சித்ரவதை செய்யப்பட்டுள்ளார்
சென்னை: அடைக்கலம் தேடி வந்த பெண்ணை சித்ரவதை செய்து, கருமுட்டை விற்பனைக்கு கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட விவகாரம் இன்னும் கொதிப்பை தந்து வருகிறது.
அது தொடர்பாக சிறுமியின் அம்மா சுமையா, அவரது இரண்டாவது கணவர் சையத் அலி, புரோக்கர் மாலதி ஆகியோரை ஈரோடு தெற்கு காவல் துறையினர் கைது செய்தனர்.

காதலன்
இதில், சிறுமியின் வயதை அதிகப்படுத்திக்காட்டும் வகையில், போலியாக ஆதார் தயாரித்து கொடுத்த ஜான் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.. கருமுட்டை விற்பனை தொடர்பாக ஈரோடு, பெருந்துறை, சேலம், ஓசூர் மாவட்டங்களில் உள்ள 4 தனியார் மருத்துவமனைகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.. தமிழகம் முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை கிளப்பியது.. இதன் பரபரப்பு இன்றுவரை அடங்காத நிலையில், மேலும் ஒரு சம்பவம் இதுபோல் சென்னையில் நடந்துள்ளது.

ஐஸ்வர்யா
சென்னை எர்ணாவூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்தவர் விஜய்.. இவர் பிரபல ரவுடி.. இவரது மனைவி பெயர் சுருதி 22 வயதாகிறது.. பிஏ பட்டதாரி.. 4 வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது... ஆனால், சமீபகாலமாகவே தம்பதி இடையே தகராறு இருந்து வந்துள்ளதாக தெரிகிறது.. இதில், விஜய் தன் மனைவி சுருதியை கடுமையாக தாக்கியிருக்கிறார்.. இது குறித்து விசாரித்த எண்ணுார் போலீசார் விஜய்யை கைது செய்து சிறையிலும் அடைத்தனர்.

சுருதி - ஐஸ்வர்யா
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, ஜாமீனில் வெளியானார் விஜய்.. மீண்டும் கணவனால் பிரச்சனை ஏற்படும் என்று பயந்துபோன சுருதி, திருவொற்றியூரில் உள்ள தன்னுடைய தோழி ஐஸ்வர்யா என்பவரிடம் தஞ்சம் அடைந்தார்.. அடைக்கலமாக வந்தவரை நல்லபடியாக பார்த்து கொண்டனர் ஐஸ்வர்யாவும் அவரது கணவர் சூரஜ்ஜும்.. ஆனால், சில தினங்களிலேயே, ஐஸ்வர்யாவின் கணவரான சூரஜ் ஜெனிஸ் கண்ணன் என்ற 29 வயது ரவுடியும், வேலைக்காரியை போல் சுருதியை நடத்தியதாக கூறப்படுகிறது..

40 ஆயிரம் ரூபாய்
கருமுட்டையை விற்றால் 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் என்று சுருதியை மூளை சலவை செய்துள்ளனர்.. மேலும், பெண் புரோக்கர் ஒருவர் மூலம் தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் கருமுட்டையை விற்கவும் முடிவு செய்யப்பட்டது. தனியார் மருத்துவமனையில் சென்று விசாரித்தபோது, கருமுட்டை பெற 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் தருவதாக சொல்லி உள்ளார்கள்.. இதனால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த சுருதி, பயந்து போய் பிரிந்து சென்ற கணவர் விஜய்யை தேடி ஓடினார்..

புரோக்கர்
நடந்ததை எல்லாம் சொல்லவும், மனைவியை வீட்டிற்கு வந்துவிடும்படி அவர் அறிவுறுத்தியுள்ளார்... சுருதியும் கணவரிடமே செல்லலாம் என்று முடிவெடுத்து, ஐஸ்வர்யா மற்றும் அவரது கணவரிடம் சொல்லி விட்டு வரலாம் என்று சென்றுள்ளார்.. கருமுட்டையை இனி விற்க ஐஸ்வர்யா சம்மதிக்க மாட்டார் என்பதை அறிந்து, ஆத்திரமடைந்த ஐஸ்வர்யாவும், சூரஜ்ஜூம் சுருதியை சரமாரியாக தாக்கி அடித்து துன்புறுத்தியுள்ளனர்... கொடுமைப்படுத்தி உள்ளனர்.. கருமுட்டை விற்க மாட்டேன், தனக்கு பயமாக இருக்கிறது என்று ஐஸ்வர்யா அழுதுள்ளார்.
Recommended Video

சுருதி
அவர்களிடமிருந்து தப்பிய சுருதி, திருவொற்றியூர் போலீசில் புகார் அளித்தார்.. போலீசார் இதுகுறித்து விசாரித்து இருவரையும் கைது செய்தனர்... மேலும் தாம்பரத்தில் கருமுட்டை விற்றதாக கூறப்பட்ட, தனியார் மருத்துவமனைக்கு சென்றும் விசாரிக்கவுள்ளனர்... இதற்குள் பெண் புரோக்கர் தலைமறைவாகிவிட்டார்.. அவரையும் போலீசார் தேடிவருகின்றனர்... கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தமிழக அரசு பல்வேறு கெடுபிடிகளை பிறப்பித்தும், இதுபோன்ற சம்பவம் மீண்டும் தலைதூக்கி உள்ளது அதிர்ச்சியை கூட்டி வருகிறது.












Click it and Unblock the Notifications