மெட்ரோ பார்க்கிங்கில்.. பைக் பார்க் பண்ண போனவர்களுக்கு ஷாக்.. அட என்னங்க இது?
சென்னை: சென்னை மெட்ரோவில் பைக் பார்க் செய்ய சென்ற பலருக்கு அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்து உள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில், மின்சார ரயில், பேருந்து சேவை சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல இந்த மூன்று ஆப்ஷன்கள் மக்களுக்கு உள்ளன. ஆனால் இது மூன்றிற்கும் மக்கள் தனி தனியாக டிக்கெட் எடுத்து வருகிறார்கள்.
இவை அனைத்துக்கும் ஒரே பயணச்சீட்டை பயன்படுத்தும் முறையை கொண்டு வர தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக National Common Mobility Card (NCMC) அல்லது சிங்காரச் சென்னை கார்டு கொண்டு வரப்பட்டு உள்ளது. எஸ்பிஐ மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இந்த கார்டை பெற முடியும்.

இந்த ஒரே டிக்கெட்டை பயன்படுத்தி இது மூன்றிலும் பயணிக்க முடியும். இதற்காக ஒரு கார்ட் அல்லது பாஸ் போன்ற அட்டை வழங்கப்படும். இந்த கார்டை மெட்ரோ நிலையத்தில் ஸ்கேன் செய்து அதில் பயணிக்க முடியும். மின்சார ரயில்களில் செக்கர் சோதனை செய்யும் சமயங்களில் இந்த கார்டை ஸ்கேன் செய்து கொள்ள முடியும்.
பேருந்துகளிலும் நடத்துனர்களிடம் ஸ்கேன் செய்யும் கருவிகள் வழங்கப்படும். எனவே இந்த ஒரு கார்டை ரீ சார்ஜ் செய்து அதன் மூலம் மூன்று சேவைகளையும் பயன்படுத்திக்கொள்ள முடியும்.ஆனால் மின்சார ரயில் நிலையில் இன்னும் 2 மாதங்களிலும், பேருந்துகளில் இன்னும் 10 மாதங்களிலும் இந்த கார்டை பயன்படுத்தும் வசதி அமலுக்கு வரும். அதுவரை நாடு முழுக்க எல்லா மெட்ரோவில் இந்த கார்டை பயன்படுத்தலாம்,
ஆனால் இந்த கார்ட் இன்னும் மெட்ரோ ரயில் நிலைய பார்க்கிங்கோடு இணைக்கப்படவில்லை. இதனால் இந்த கார்டை பயன்படுத்தி நீங்கள் மெட்ரோ ரயில் நிலையத்தில் பைக்கை பார்க் செய்ய முடியாது.பொதுவாக நீங்கள் மெட்ரோ பாஸை வைத்து பைக் பார்க் செய்யலாம். ஆனால் இந்த சிங்கார சென்னை கார்ட் இன்னும் பார்க்கிங்கோடு இணைக்கப்படவில்லை. 3 மாதம் ஆகி இன்னமும் கூட இந்த கார்டை இணைக்காத காரணத்தால் இன்னும் இந்த கார்டு வைத்துள்ளவர்கள் மெட்ரோ கார்டை வைத்து தனியாக பார்க் செய்து வருகின்றனர்.
அதனால் ஏற்கனவே இருக்கும் மெட்ரோ பாசை பயன்படுத்த வேண்டும். அல்லது பார்க்கிங் டிக்கெட் வாங்க வேண்டும். இதை பயன்படுத்தி பார்க் செய்ய நினைத்தால் உங்கள் கார்ட் டிக்ளைன் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மெட்ரோ சேவை: சென்னையில் தற்போது விம்கோ நகரில் இருந்து அண்ணா சாலை வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் சேவை உள்ளது. இன்னொரு மார்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரை மெட்ரோ சேவை உள்ளது.
இன்னொரு பக்கம் கோயம்பேடு வழியாக செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரயில் சேவை சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகள் நடந்து வருகின்றன.
சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ 3 வழித்தடங்களில் கொண்டு வரப்பட உள்ளது. 118.9 கிமீ தூரத்திற்கு இந்த மெட்ரோ பாதை கொண்டு வரப்பட உள்ளது. முதல் கட்டத்திற்கு ஆலந்தூர் எப்படி மையமாக இருந்ததோ இரண்டாம் கட்டத்திற்கு ஓஎம்ஆர் மையமாக இருக்கும். இதன் காரணமாக சென்னையில் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த வருடம் மெட்ரோ பயன்பாடு 6 கோடி என்ற அளவை எட்டியது குறிப்பிடத்தக்கது.
இன்னொரு பக்கம் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி செங்கல்பட்டு முதல் பீச் வரை, தாம்பரம் முதல் பீச் வரை, வேளச்சேரி முதல் பீச் வரையும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications