சென்னை கொடுங்கையூரில் காதலனுடன் வாழ்ந்த ஐடி பெண் ஊழியர் நித்யா.. இருந்த கோலம்..பெற்றோருக்கே ட்விஸ்ட்
சென்னை: சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நித்யா என்ற பெண், அம்பத்தூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கொடுங்கையூரைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரை காதலித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன் மனைவி போல் வந்துள்ளனர். நேற்று முன்தினம் பெற்றோர் வீட்டிற்கு சென்றுவருவதாக கூறியிருக்கிறார். இந்நிலையில் காதலன் பாலமுருகன் திரும்பி வந்து பார்த்தால், ஐடி ஊழியர் நித்யா இருந்த நிலையை கண்டு ஆடிப்போனார்.
சென்னை திருவொற்றியூர் காந்தி நகரைச் சேர்ந்த பாஸ்கர் மற்றும் வரலட்சுமி தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் நித்யாவுக்கு 26 வயது ஆகிறது. பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், சென்னை, அம்பத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நித்யா, கடந்த 8 மாதங்களாக தனது வீட்டில் வசிக்கவில்லை. அம்பத்தூரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். இதற்கிடையில் நித்யாவுக்கு சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த 28 வயதாகும் பாலமுருகன் என்பவருடன் காதல் மலர்ந்தது. இருவரும் காதலித்து வந்தனர். பாலமுருகன், ஓட்டல் மேலாண்மை படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்துள்ளார்.

இந்தநிலையில் காதலனுடன் வாழ விரும்பிய நித்யா, கடந்த 2 மாதங்களாக கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனி 7-வது தெருவில் வாடகைக்கு வீடு எடுத்து தனது காதலன் பாலமுருகனுடன் திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மதியம் நித்யா, தனது காதலன் பாலமுருகனிடம், "எனது பெற்றோர் வீட்டுக்கு வருகிறார்கள். இதனால் நீ வீட்டில் இருக்க வேண்டாம்" என்று கூறினாராம். இதையடுத்து பாலமுருகன், தனது நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின்னர் மாலையில் அவர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்துள்ளார்.
வீட்டின் உள்ளே அவரது காதலி நித்யா, வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்ததாக கூறப்படுகிறது. அவருக்கு அருகில் பெயர் தெரியாத நிறைய மாத்திரைகள் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த பாலமுருகன், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விரைந்து வந்து பரிசோதனை செய்தபோது நித்யா, ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார்கள்.
இதுபற்றி போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் நித்யா உடலை பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மகளின் உடலை பார்த்து கதறி அழுத நித்யாவின் பெற்றோர், "எங்கள் மகள் ஒரு வாலிபருடன் பழகி வருவது மட்டுமே எங்களுக்கு தெரியும். இருவரும் கணவன்-மனைவிபோல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்தது பற்றி எங்களுக்கு தெரியாது என்று கண்ணீர் மல்க கூறினார்கள். மேலும் வீட்டில் இருந்த நித்யாவின் 25 பவுன் நகைகளை காணவில்லை என்றும் போலீசாரிடம் புகார் செய்தனர்.
இதுபற்றி நித்யாவின் காதலன் பாலமுருகனிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். பாலமுருகன் போலீசாரிடம் கூறும் போது, "நித்யா அம்பத்தூரில் தங்கி இருந்தபோது, யாருக்கும் தெரியாமல் வீட்டில் வைத்தே அவரது கழுத்தில் நான் தாலி கட்டினேன். அதன்பிறகுதான் நாங்கள் கொடுங்கையூரில் உள்ள இந்த வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தோம். 2 நாட்களுக்கு பிறகு நான் கட்டிய தாலியை நித்யா கழட்டி வைத்துவிட்டு வேலைக்கு சென்று வந்தார். நித்யாவின் பெற்றோர் அடிக்கடி அவருக்கு போன் செய்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்தார்கள் என்று குற்றம்சாட்டினார்.
இதனிடையே நித்யாவின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலனிடம் விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே நித்யா கொலை செய்யப்பட்டாரா? அல்லது அளவுக்கு அதிகமான மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவரும் என போலீசார் கூறினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தற்கொலை எந்த பிரச்சனைக்கும் தீர்வு அல்ல.. உங்களுக்கு மன அழுத்தம் உண்டானாலோ அல்லது தற்கொலை எண்ணம் எழுந்தாலோ, கீழ்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 2464 0050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
-
சென்னை மக்கள் பொறுமை இழந்தனர்.. கட்டி முடிச்சு 4 மாசமாச்சு.. எப்ப தான் திறப்பீங்க! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
நடிகர் ரவி மோகனுக்கு பின்னடைவு! ஆர்த்திக்கு ஜீவனாம்சம் வழங்கும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அதிரடி! -
சென்னையில் முதல்வர் விஜய் தொகுதியான பெரம்பூரில் அடிக்கடி மின் வெட்டு.. பொங்கி எழுந்த மக்கள் -
திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து? ரூ.2,100 கோடி ECR திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட விஜய் -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications