Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னையில் சிக்கிய சுகன்யா.. தோழி.. அரசு காண்டிராக்டர் பிரகாஷ் வழக்கில் அவிழ்ந்த மர்ம முடிச்சுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: புதுச்சேரி முதலியார்பேட்டை பாப்பன்சாவடியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் காண்டிராக்டர் தொழில் செய்து வந்துள்ளார். இவர் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வசித்து வந்தார். இந்நிலையில் பிரகாசின் காண்டிராக்ட் நிறுவனத்தில் சுகன்யா என்பவர் வேலை செய்து வருகிறார். சுகன்யாவும் கணவரை பிரிந்து வாழந்து வந்தார். இந்நிலையில் பிரகாஷ் சென்னை அசோக் நகரில் தீர்த்துக்கட்டப்பட்டார். இந்த வழக்கில் சுகன்யா, தோழி மற்றும் சுகன்யாவின் கணவர் தனஞ்செழியன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பற்றிய தகவல்களை பார்ப்போம்.

புதுச்சேரி மாநிலம் முதலியார்பேட்டை பாப்பன்சாவடியை சேர்ந்த 38 வயதாகும் பிரகாஷ் என்பவர் அரசு காண்டிராக்டர் ஆவார். புதுச்சேரியில் பொதுப்பணித்துறையில் காண்டிராக்டர் தொழில் செய்து வந்திருக்கிறார். இதற்காக தனியாக ஒப்பந்த நிறுவனம் ஒன்றை அலுவலகம் அமைத்து நடத்தி வந்துள்ளார். இவர் புதுச்சேரியில் கழிவுநீரகற்றும் லாரிகளை வைத்து பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.

What happened to Puducherry government contractor Prakash in Chennai because of his girlfriend

சுகன்யா தனியாக வாழ்ந்தார்

குடும்பத்தகராறில் பிரகாஷின் மனைவி 2 குழந்தைகளுடன் பிரிந்து சென்றுவிட்டாராம். இந்தநிலையில் புதுச்சேரி நெட்டப்பாக்கத்தை சேர்ந்த சுகன்யா (37) என்ற பெண்ணுடன் பிரகாசுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டிருக்கிறது. பிரகாசின் காண்டிராக்ட் நிறுவனத்தில் சுகன்யா வேலை பார்த்து வந்தார். சுகன்யாவும் தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்திருக்கிறார்.

உல்லாசமாக வாழ்ந்தார்களாம்

பிரகாசும், சுகன்யாவும் தங்களது திருமண உறவில் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், கள்ளக்காதல் அதிகமானது. இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். குடும்பமாகவே இருவரும் வாழ் தொடங்கினார்களாம். பிரகாஷ் எங்கு சென்றாலும் சுகன்யாவை தன்னுடன் அழைத்து செல்வாராம். நேற்று முன்தினம் கழிவுநீரை அகற்றும் பணிக்காக வாடகைக்கு வாகனங்களை ஏற்பாடு செய்ய பிரகாஷ் தனது காரில் சென்னை வந்துள்ளார். அவருடன் சுகன்யாவும் வந்தார்.

What happened to Puducherry government contractor Prakash in Chennai because of his girlfriend

மனைவியை மறக்காத தனஞ்செழியன்

தனஞ்செழியன் மனைவி சுகன்யாவை பிரிந்து வாழ்ந்து வந்தாலும், தனது மனைவி குறித்த தகவல்களை அவரது தோழியான குணசுந்தரியிடம் அடிக்கடி கேட்டு அறிவாராம். அவரை மறக்க முடியாத தனஞ்செழியன் அவரை பற்றியே அடிக்கடி பேசுவாராம். நேற்று முன்தினம் சுகன்யா தனது கள்ளக்காதலன் பிரகாஷுடன் சென்னை வருவதை தனஞ்செழியனுக்கு குணசுந்தரி கூறினாராம்.

ஓட்டலில் சாப்பிட்டுள்ளார்கள்

மேலும் சுகன்யாவுடன் தொடர்பு கொண்ட குணசுந்தரி நாம் ஒன்றாக ஓட்டலில் சாப்பிடலாம் என்று அழைத்தார். அதன்பேரில் சுகன்யா சென்னை வந்தவுடன் குணசுந்தரிக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து சென்னை அசோக்நகர் 4-வது அவென்யூவில் உள்ள ஓட்டல் ஒன்றில் பிரகாஷ் உள்ளிட்ட 3 பேரும் சாப்பிட்டுள்ளார்கள். இந்த தகவலை குணசுந்தரி, தனஞ்செழியனுக்கு தெரிவித்தார்.

சென்னை வண்ணாரப்பேட்டை ரேஷன் கடையில் பணியாற்றும் ஜெயந்தி.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்
காரில் சீட் பெல்ட்

மனைவி காதலனுடன் சாப்பிடுவதை அறிந்த தனஞ்செழியன், குறிப்பிட்ட ஓட்டலுக்கு மோட்டார் சைக்கிளில் வந்தார். பிற்பகல் 3 மணி அளவில் பிரகாஷ், சுகன்யா, குணசுந்தரி ஆகியோர் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்துள்ளார்களாம். பிரகாசும், சுகன்யாவும் காரில் ஏறினார்கள். அப்போது கையில் கத்தியுடன் வந்த தனஞ்செழியன் திடீரென்று காரில் உட்கார்ந்திருந்த பிரகாசை தாக்கினாராம். அப்போது பிரகாஷ் சீட் பெல்ட் போட்டிருந்ததால், தப்பியோட முடியவில்லையாம். இந்தநிலையில் பிரகாசை சரமாரியாக கத்தியால் குத்திய தனஞ்செழியன் மனைவி சுகன்யாவையும் மிரட்டினார். சுகன்யாவையும் தீர்த்துக்கட்ட தனஞ்செழியன் முயற்சித்தாராம். ஆனால் கடைசி நேரத்தில் மனம்மாறி தனது மோட்டார் சைக்கிளில் ஏற சொல்லி அழைத்து சென்றுவிட்டாராம்.

தனிப்படை அமைப்பு

குணசுந்தரியும் மொபட்டில் தப்பி சென்றுவிட்டார். காயத்துடன் ஓடி வந்த பிரகாஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் சென்னை அசோக் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தப்பிச்சென்ற தனஞ்செழியனை கைது செய்ய கூடுதல் கமிஷனர் டாக்டர் கண்ணன் மேற்பார்வையில் அசோக்நகர் உதவி கமிஷனர் ஆல்ட்ரீன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனஞ்செழியனை நேற்று முன்தினம் இரவோடு, இரவாக கைது செய்தனர்.

What happened to Puducherry government contractor Prakash in Chennai because of his girlfriend

சுகன்யா குணசுந்தரி சிக்கினார்கள்

தனஞ்செழியனின் மனைவி சுகன்யாவையும், அவரது தோழி குணசுந்தரியையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் 2 பேரும் பிரகாஷ் கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக போலீசார் கருதினார்கள். பிரகாசை தனஞ்செழியன் கத்தியால் குத்தியபோது அவரை காப்பாற்ற இருவரும் முயற்சிக்கவில்லை. அதற்கு மாறாக சுகன்யா தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பி சென்றுவிட்டார். குணசுந்தரியும் தனியாக ஸ்கூட்டரில் உடனே தப்பி சென்றுவிட்டார்.

என்ன காரணம்

பிரகாஷை யாராவது ஒருவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருந்தால் அவர் உயிர் பிழைக்க வாய்ப்பு இருந்தது. அதை செய்யாமல் போலீசுக்கும் இந்த சம்பவம் பற்றி தகவல் கொடுக்காமல் சுகன்யா குணசுந்தரி இருவரும் தப்பி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்த வழக்கில் போலீசார் குற்றவாளிக்கு குற்றத்தை மறைக்க உடந்தையாக இருந்ததாக இருவரையும் சேர்த்தனர். அதையொட்டி அவர்கள் 2 பேரும் நேற்று கைது செய்யப்பட்டனர். கைதான தனஞ்செழியன், சுகன்யா, குணசுந்தரி ஆகிய 3 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட உள்ளார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+