சென்னை வண்ணாரப்பேட்டை ரேஷன் கடையில் பணியாற்றும் ஜெயந்தி.. கண் இமைக்கும் நேரத்தில் நடந்த சம்பவம்
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் விஜயராகவன் தெரு மேம்பாலத்தின் கீழே ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் பழமையான கட்டிடம் ஆகும். இந்த ரேஷன் கடையில் விற்பனையாளராக ஜெயந்தி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை பணியாற்றிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத சம்பவம் நடந்தது. திடீரென ரேஷன் கடை கட்டிடத்தின் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து ஜெயந்தி மீது விழுந்தது.
சென்னை மாநகரில் ஆயிரக்கணக்கான ரேஷன் கடைகள் உள்ளன. இதில் பல்வேறு கடைகள் வாடகை கட்டிடங்களிலும், பல கடைகள் சொந்த கட்டிடத்திலும் இயங்குகின்றன. இதில் சுமார் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். 1000 முதல் 1200 அட்டைகள் வரை உள்ள கடைகள் பல சென்னையில் உள்ளன. சில கடைகளில் இந்த எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். அரசுக்கு சொந்தமான இடங்களில் ஒரே இடத்தில் கூட சில கடைகள் மொத்தமாக அமைக்கப்பட்டுள்ளன. சில பகுதிகளில் இடம் இல்லாததால் வாடகைக்கும் இயங்கும் நிலை தொடர்கிறது.

சென்னை வண்ணாரப்பேட்டை வள்ளலார் நகர் விஜயராகவன் தெரு மேம்பாலத்தின் கீழே ரேஷன் கடை இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழமையான கட்டிடம் என கூறப்படுகிறது. இந்த ரேஷன் கடையில் விற்பனையாளராக 50 வயதாகும் ஜெயந்தி (வயது என்பவர் பணியாற்றி வருகிறார்.
இந்த ரேஷன் கடையில் 1200 குடும்ப அட்டைதாரர்கள் இருக்கிறார்கள், இந்த கட்டிடம் பழமை வாய்ந்ததால் மழை காலங்களில் மழை நீர் கசிவு ஏற்பட்டு கடையில் உள்ள பொருட்கள் சேதம் அடைவதாக புகார்கள் எழுந்து வந்தது எப்போது இடிந்து விழும் என்பது தெரியாமல் ஆபத்தான நிலையில் பணியாளர்களும், வாடிக்கையாளர்களும் வந்து செல்வதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இவர் நேற்று முன்தினம் மாலை ரேஷன் கடையில் பணியாற்றிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது தான் யாருமே எதிர்பார்க்காத சம்பவம் நடந்ததுள்ளது. பழமையானகட்டிடம் என்பதால் திடீரென ரேஷன் கடை கட்டிடத்தில் மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதில் விற்பனையாளர் ஜெயந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. உடனடியாக ரேஷன் கடை சக ஊழியர் அவரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு ஜெயந்தி சிகிச்சை பெற்று வருகிறார்.
இது போன்ற பழமையான கட்டிடங்களில் இயங்கும் ரேஷன் கடைகளை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி அதில் ரேஷன் கடைகளை மாற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications