10 மாசமாச்சு! செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் குமார் எங்கே இருக்கிறார்? எப்போது தலையை காட்டுவார்?
சென்னை: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் எங்கே இருக்கிறார். அவர் தலைமறைவாக இருந்து 10 மாதங்கள் ஆகின்றன.
கடந்த அதிமுக ஆட்சியில் அதாவது அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.

2011 ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரை அந்த துறையில் இருந்த செந்தில் பாலாஜி, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. இதை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் , எழுப்பியிருந்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலிலும் அதிமுகவே ஆட்சியை பிடித்தது. முதல்வராக ஜெயலலிதா அமர்ந்தார். ஆனால் அதே ஆண்டு அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காலமானார். இதைத் தொடர்ந்து முதல்வராக ஓபிஎஸ் பொறுப்பேற்றுக் கொண்டு ஜெயலலிதாவுக்கான ஈமச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை பிறப்பித்தார்.
பிறகு சசிகலா கேட்டுக் கொண்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி தர்மயுத்தம் நடத்தினார். முதல்வர் கனவில் இருந்த சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். அப்போது முதல்வராக எடப்பாடி பழனிசாமியை நியமித்துவிட்டு சென்றார். இதைத் தொடர்ந்து அதிமுகவில் டிடிவி தினகரனை ஆதரித்து 18 எம்எல்ஏக்கள் அவரிடம் சென்றனர்.
அதில் செந்தில் பாலாஜியும் ஒருவர். இதைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தார். ஸ்டாலினின் நம்பிக்கைக்குரியவராக மாறினார். கொங்குவை திமுக வசமாக்கும் ஆபரேஷனில் முக்கிய பங்காற்றினார். இதைத் தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் திமுக ஆட்சிக்கு வந்தது. அரவக்குறிச்சி தொகுதியில் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி மின்சாரத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறையின் அமைச்சரானார்.
இந்த நிலையில்தான் போக்குவரத்து துறையில் மோசடி செய்த வழக்கை அமலாக்கத் துறை விசாரித்து வந்தது. இது தொடர்பாக செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தியது. இதைத் தொடர்ந்து கரூரில் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வந்த பங்களாவிலும் வருமான வரித் துறையும் அமலாக்கத் துறையும் ரெய்டு நடத்தியது.
இந்த நிலையில் இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத் துறை செந்தில் பாலாஜியை கைது செய்தது. அது போல் புதிய பங்களா தொடர்பாக முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில் அசோக்குமாருக்கு வருமான வரித் துறையும் அமலாக்கத் துறையும் சம்மன் அனுப்பியிருந்தது.
ஆனால் பல முறை சம்மன் அனுப்பியும் அசோக்குமார் ஆஜராகவில்லை. அவர் தொடர்ந்து தலைமறைவாகவே இருக்கிறார். சுமார் 10 மாதங்களாகவே அவர் தலைமறைவாக இருந்து வருகிறார். முதலில் அவரை கைது செய்ததாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அதை அமலாக்கத் துறை மறுத்தது. இந்த நிலையில் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை.
அவருக்கு உள்ளூரில் உள்ள திமுகவினரே உதவி செய்ததாகவும் ஒரு உறுதி செய்யப்படாத தகவல் வெளியானது. ஆனால் அவர் வெளிமாநிலத்தில் பதுங்கியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. செந்தில் பாலாஜி வழக்கை பொருத்தவரை அவருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறார்.
ஒரு முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்த போது நீதிபதி ஜெயசந்திரன், அசோக்குமார் தலைமறைவாக உள்ள நிலையில் ஜாமீன் கொடுக்க முடியாது என்றார். செந்தில் பாலாஜியும் 10 மாதங்களாக சிறையில் இருக்க அசோக்குமாரும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது.
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த விவகாரத்தில் செந்தில் பாலாஜியை விட அசோக்குமாருக்குத்தான் அதிக பங்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் கரூர் - சேலம் புறவழிச்சாலையில் ராம் நகர் பகுதியில் கட்டப்பட்டு வந்த சொகுசு பங்களா கட்டப்பட்ட நிலம் வாங்கியதில் மோசடி இருப்பதாகவும், அந்த கட்டடத்திற்கு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு கட்டி வந்ததாகவும் புகார்கள் எழுந்தன.
சுமார் ரூ 300 கோடியில் அந்த பங்களா கட்டப்பட்டதாக தெரிகிறது. இந்த கட்டுமான பணிகளும் நிறுத்தப்பட்டன. செந்தில் பாலாஜியின் தம்பி எப்போது வருவார் என தெரியவில்லை. தமிழகத்தில் லோக்சபா தேர்தலும் முடிந்துவிட்டது. ஒரு வேளை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அசோக்குமார் வெளியே தலைகாட்ட வாய்ப்பிருக்கிறதா? அவர் வெளியே வந்தால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கும்.
-
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
Vaiko: குடும்ப வாழ்வில் ஒழுக்கமில்லாதவர்கள் வேட்பாளராகலாமா? வைகோ கேள்வி! யாரை சொல்கிறார்? -
அடேங்கப்பா.. இது லிஸ்டுலேயே இல்லையே.. ஸ்டாலின் எடுத்த முடிவு.. மிக முக்கிய எம்எல்ஏவிற்கு நோ சீட்? -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
தனியே தன்னந்தனியே.. தனிமரமாய் தமிழ்நாட்டை விட்டுப் போன ஆர்என் ரவி! யாருமே கண்டுக்கலையே! பரபர சீன்! -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
விஞ்ஞான ரீதியான ஊழல்.. ஒரே ஒரு குடும்பத்தின் ATM ஆக திமுக! திருச்சியில் கொந்தளித்த பிரதமர் மோடி!












Click it and Unblock the Notifications